மனோதத்துவ நிபுணர்களிடையே அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்..!

  • by
common questions asked to psychologists

மனிதர்களுக்கு உண்டாகும் உணர்வு சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே மனோதத்துவ நிபுணர்களை சந்திக்கிறோம். ஆனால் உங்கள் உணர்வுகளினால் ஏற்படும் பிரச்சனைகள், காலப்போக்கில் உங்கள் உடலையும் பாதிக்க செய்கிறது. இதுபோன்ற பாதிப்புகளை தடுப்பதற்காக நம் உணர்வுகளை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்கள், பொது வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர்கள், உறவுகளுக்குள் உண்டாகும் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் போன்ற அனைத்தையும் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை மூலமாக தீர்க்க முடியும்.

மற்றவரின் மனதை அறிய முடியுமா

நாம் சினிமாவில் பார்ப்பதைப் போல் மனோதத்துவ நிபுணர்கள் நம்மை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று நம்முடைய கடந்த காலங்களை தெரிந்து கொள்வார்கள். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. மனவலிமை இல்லாதவர்கள் மன பிரச்சினைகளில் மூழ்குகிறார்கள், இது போன்றவர்களின் மனதுக்குள் நுழைந்து அவர்கள் கஷ்டங்களை மிக எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

தனிப்பட்ட முறையில் மனோதத்துவ நிபுணரிடம் இருந்து ஆலோசனை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்

நாம் ஏன் கனவு காண்கிறோம்

நாம் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாமல் தவிக்கும் விஷயங்கள், உங்கள் கனவுகளுக்கு தூண்டுதலாக அமைகிறது. ஒருசில உணர்வுகளை வெளிப்படையாக வெளிக்காட்டுவதில் நமக்கு பிரச்சினைகள் உண்டாகும், ஒருசிலருக்கு இது போன்ற செயல்களினால் பயம் அதிகரிக்கும். இவர்களின் இந்த ஏக்கங்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் மூளையின் உதவியால் கனவாக தோன்றுகிறது. இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால் நாம் ஏற்கனவே இதை அனுபவித்த உணர்வு உண்டாகும். கனவுகளைப் பற்றி இன்றும் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள், நம்முடைய இயல்பு வாழ்க்கையில் செய்ய முடியாத அனைத்தும் கனவு உலகில் நிகழ்கிறது.

நமக்கு நாமே ஊக்கம் அளிப்பது எப்படி

உணர்வுகளில் தொய்வு உள்ளவர்கள், எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்ய மாட்டார்கள். இது போன்றவர்களுக்கு ஊக்கம் என்பது மிக முக்கியமானது, அதிலும் தனக்குத்தானே ஊக்கம் அளிப்பது அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். சாதாரணமாக உங்கள் நேரத்தை குடிக்கும் செயல்களுடன் சேர்ந்து புரோஜனம் உள்ள ஏதாவது செயலையும் செய்யவேண்டும். உதாரணத்திற்கு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே ஏதேனும் புத்தகங்களை படிக்கலாம். இதுபோல் புதிதாக செய்யும் செயல்கள் மூலமாகவே உங்கள் மனநிலை மாற்றம் அடையும். அதேபோல் உங்களுக்கு நீங்களே ஊக்கம் அளிப்பதற்கும் இதுபோன்று புதிய செயல்கள் உதவும்.

மேலும் படிக்க – காயங்களை குணப்படுத்தும் இசை.!

ஞாபக சக்தியை எப்படி அதிகரிப்பது

ஞாபக சக்தி நம் மூளையை சார்ந்தது, அது நமக்குத் தேவையானவை மட்டுமே நம் மூளையின் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். அதைத் தவிர்த்து நமக்கு பிடிக்காத செயல்கள், தேவையற்ற செயல்களை முற்றிலுமாக தவிர்த்து விடும். இதுவே நாம் வேலைகளை செய்யும் போதே நிகழ்கிறது, நமக்கு பிடித்த வேலைகளை செய்யும்போது நம்முடைய ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், அதுவே பிடிக்காத வேலைகளில் ஈடுபடும்போது உடனுக்குடன் அதை நாம் மறந்து விடுவோம். இதற்கு ஒரே தீர்வு, முக்கியமானவற்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது உங்களை அறியாமல் உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வாழ்க்கை பிரச்சினையை எப்படித் தீர்ப்பது

வாழ்க்கையில் பிரச்சினை என்பது நாம் எடுக்கப்படும் முடிவினால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே எப்போதும் இரண்டு மனதுடன் எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் எடுக்கப்படும் முடிவினால் ஏற்படும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அப்படி அந்த பிரச்சனைகள் அதிகரித்தால் அதை எப்படி தீர்ப்பது போன்ற யோசனைகளை மேற்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், அதற்கான செயல்களை யார் செய்கிறார்களோ அவர்களே வெற்றி அடைகிறார்கள். எனவே ஒரே இடத்தில் தேவையற்றதை அதிகமாக சிந்திப்பதை தவிர்த்து, செயல்களில் ஈடுபடுங்கள்.

மற்றவர்களிடம் எப்படி பேசுவது

பலபேருக்கு பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொதுவாக முன் பின் தெரியாதவர்களுடன் பேசுவதை நாம் தவிர்த்து வருகிறோம். ஆனால் வேலை என்று வந்துவிட்டால் நம் முன் பின் தெரியாதவர்களுடன் சிறப்பாக உரையாடவேண்டும். அதைத் தவிர்த்து அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நீங்கள் வெளிப்படையாக பேச வேண்டும், அப்படி உங்களால் பேச முடியவில்லை என்றால் பேசுவதால் ஏற்படும் பயத்தை நீங்கள் முன்கூட்டியே போக்க வேண்டும். அதற்காக முடிந்தவரை முன் பின் தெரியாதவர்களுடன் ஏதேனும் உரையாடலை துவங்குங்கள். காலப்போக்கில் அதில் கிடைக்கும் அனுபவத்தின் மூலமாக உங்கள் தொடர்பு பிரச்சினை தீரும்.

மேலும் படிக்க – ஆபாசப்படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு..!

புத்திசாலித்தனம் என்றால் என்ன

உலகத்தில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து அதற்கேற்ப செயல்களை மேற்கொள்பவர்கள் புத்திசாலிகள். ஒரு சம்பவத்தை முழுமையாக புரிந்து அதற்கான தீர்வுகளை அளிக்க கூடிய யோசனை உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் புத்திசாலி. இதை அனைவரும் மிக எளிமையாக செய்யலாம், அதற்கு நாம் கவனமாக இருந்தால் மட்டுமே போதும். உணர்வுகள் சொல்வதை உடனே ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவதை தவிர்த்து மூளை சொல்வதை கேட்டு அதை ஆராய வேண்டும். எல்லா சூழ்நிலையையும் நடுநிலையாக யோசித்து அதற்கான தீர்வை அளிப்பதே புத்திசாலித்தனம்.

ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாக உங்களுக்குள் நம்பிக்கை இல்லாமல் பயம் அதிகமாக இருந்தால் நீங்கள் உடனே மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும். உளவு ரீதியாக உங்களுக்குள் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் அறிந்து அதற்கான தீர்வுகளை அளிக்கும் கடவுளாக இருப்பவர்களே மனோதத்துவ நிபுணர்கள். எனவே உங்களுக்குள் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் அவர்களிடையே வெளிப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன