வண்ணங்களை கொண்டு உங்களின் எல்லா பிரச்சனையும் சரி செய்ய முடியும்..!

colors can solve all your problems

மனிதர்களின் வாழ்க்கையில் அதிகமாக தொடர்புடையது வண்ணங்கள்தான். நாம் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதன் தோற்றம் மற்றும் வண்ணத்தை தான் முதலில் பார்க்கிறோம். அதேபோல்தான் நாம் தேர்ந்தெடுக்கும் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், வீட்டிற்கு வண்ணம் பூசுதல் என எல்லாவற்றிலும் வண்ணங்களின் பங்கு அதிகமாக இருக்கின்றன. இப்படி வண்ணங்களுக்காக நாம் அதிக முக்கியத்துவம் தருகிறோம். உண்மையில் வண்ணங்களை கொண்டு நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா..?

முற்காலத்தில் வண்ண ஒளி சிகிச்சை மூலமாக நம்முடைய பல பிரச்சனைகளை முன்னோர்கள் தீர்த்து வைத்துள்ளார்கள், அதை தான் க்ரோமோதெரபி என்கிறார்கள். ஆசியா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் வைத்திருந்தார்கள். இந்த சிகிச்சை மூலமாக நமக்கு இருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அதற்கேற்ற வண்ணங்களின் அதிர்வலையை கொண்டு நம்மை குணப்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

பச்சை நிறம் நமக்கு நேர்மையான சிந்தனைகளை ஏற்படுத்தும் மற்றும் மன அமைதியைத்தரும். இதனால்தான் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பச்சை நிறங்களையே அதிகமாக வைத்துள்ளார்கள்.

சிவப்பு நிறம் நமது இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. இதை தவிர்த்து நமது ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுகிறது.

பிங்க் நிறம் உங்கள் ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை போக்கி உடலில் இருக்கும் தமனிகளை பலப்படுத்துகிறது.

மஞ்சள் நிறம் கீமோதெரபிக்கு உதவிகரமாக இருக்கிறது. இதை தவிர்த்து நமது செரிமான பிரச்சனையை போக்கி நரம்பு மண்டலம் மற்றும் சரும சுத்திகரிப்புக்கு உதவுகிறது.

ஆரஞ்சு நிறம் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சினைகளை குறைகிறது.

ஊதா நிறம் நமக்கிருக்கும் மன நோயை போக்கி தசைகளை நிதான படுத்தவும் மற்றும் சிறுநீரக கோளாறை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

நீல நிறம் நம்முடைய மன நிம்மதிக்கு ஊண்டுகோலாக இருக்கின்றன. இதை தவிர்த்து ஒற்றைத் தலைவலி, சளி, வயிற்று வலி, தசை பிடிப்பு, வாதநோய் மற்றும் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

இந்த சிகிச்சையை கிட்டத்தட்ட யோகா செய்வதை போல்தான், நம் மனதை ஒருநிலைப்படுத்தி வண்ணங்களில் இருக்கும் ஆற்றலை உள்வாங்கினாலே போதும். இது நாம் நினைக்கும் பிரச்சினைகள் மற்றும் நம்மை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து ஒரு வலி நிவாரணமாக நமக்கு உதவுகிறது. எனவே உங்கள் வீட்டில் ஏதாவது புதிதாக வண்ணங்களை திட்டுவதாக இருந்தால் உங்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு வண்ணம் அடித்து கொள்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன