அழகழகான குர்த்தி ஆடைகள் அணிந்து பாருங்கள்

  • by

 பெண்களின் ஆடைகள் எப்பொழுதும்  கவனம் ஈர்க்கும் ரகமாகவே இருக்கும். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் பெண்களின் ஆடைகளுக்கு எப்பொழுதும்  சந்தையில் ரகரகமாய் வந்து நிற்கும். 

சந்தையில்  அடிக்கடி பெண்களின் ஆடைகள்  டிரெண்டிங் மாறிக் கொண்டே இருக்கின்றன. பெண்கள் அணியும் குர்த்தாக்கள் பொதுவான அனைத்து தரப்பு பெண்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றன. 


குர்த்தி கலெக்சன்ஸ்

பெண்களை ஈர்க்கும் புதுபுது  டிரெண்டுகள் அதிக அள்வில் சந்தையில் இருக்கின்றன. பெண்கள் அணியும் குர்த்தாக்கள்  லாங்க் குர்த்தா, சார்ட் டாப் மற்றும் சுடிதார்கள் ஆகியவை இன்று அலுவலகம் செல்லும் பெண்களின் கலெக்சன்களில் ஒன்றாகவுள்ளது. 

குர்த்தி வகைகள்: 

பெண்கள் அணியும் குர்த்தாக்கள் இன்று நிறைய ரகங்களில் வலம் வருகின்றன. லாங்க் டாப்  எனப்படும் நீள மேலாடை, சார்ட் டாப் என்பது முழங்கால் வரை வரும். அத்துடன் மேற்கத்திய பாணியில் அமைந்த தையல்கள்,  டாப்புகளில் லெகங்கா, பாந்தினி, அனார்கலி, பிராக் மாடல்கள்,எம்பிராய்டரி , சில்க், காட்டன், ரேயான் போன்ற துணிகளில் உற்பத்திகள் செய்யப்படுகின்றன. 

மேலும் படிக்க: ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

ரெடிமேட் குர்த்தாக்கள்: 

சந்தையில் கிடைக்கும் ரெடிமேட் குர்த்தாக்களில்  தையல்கள் பெரும் அளவிற்கு இருக்காது. ஆனால் ரெடிமேட் குர்த்தாக்களில் டிசைனர்கள் தங்கள் கைவண்ணத்தை அதிகம் காட்டியுள்ளனர்கள். 

இன்றைய  தேதிக்கு பெண்கள் அணியும் குர்த்தா டாப்புகள் ஸ்டிரெயிட் டிசைனர், கான்ட்ராஸ்டிங் சுடிதார் சூட், சார்ட் வகைகள் போன்றவை மிகவும் பிரசித்தமானது ஆகும். இவற்றில் ஹைகலர் டிசைனர் ரகங்கள், புல் ஸ்லீவ்  ஆகியவை மிகவும் டிரெண்டியான வகை குர்த்தாக்கள் ஆகும். 

இவற்றிற்கு பெண்கள் காட்டன், விஸ்கோஸ் லெக்கின்ஸ், பட்டியாலா,   தோத்தி மாடல் மற்றும் பேலசோ அத்துடன் காட்டன் ஸ்ட்ரைட் பேண்ட்கள் அணிகின்றனர். பெண்களுக்கு  இந்த வகை உடைகள் மிகவும் பிடித்துள்ளது. இவற்றை பெண்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர். இந்த கலெக்சன்ஸ்கள்  எல்லா விலைகளிலும் கிடைக்கின்றன. பெண்களுக்கு தற்பொழுது வந்துள்ள ரகங்களில் குர்த்தாக்கள் ஓபன் வைத்திருப்பதுபோல் வடிவமைப்புக்கப்பட்டிருப்பது  கலக்கலாக இருக்கின்றது. அம்பரள்ளா சுடிதார்களுக்கு எப்பொழுது தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றன. 


குர்த்தி கலெக்சன்ஸ்

மேலும் படிக்க: மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

இதுபோன்ற கலெக்சன்ஸ்கள் எல்லாம்   பெண்களுக்கு கட்சிதமாக பொருந்தும். பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்து வகைகளிலும்   வாங்கிப் பயன்படுத்தலாம். 

குர்த்தாக்கள் கலெக்சனில் மிக்ஸ் மேக்ஸ்  எனப்படும் விதவிதமான வண்னங்களில் எடுத்து அதனை   அதற்கு இணையான வண்ணங்களில் பேண்ட் ரகங்கள் வாங்கலாம். மிக்ஸ் மேக்ஸ் குர்த்தாகள் ரகங்கள் சந்தையில் சக்கைபோடு போடுகின்றன. 

தெரிந்து கொள்வோம் வாங்க: 

குர்த்தக்கள்  பக ரகங்களில் கிடைக்கின்றன.  எதினிக் ரகங்கள் மற்றும் டியூனிக் ரகங்கள் எல்லாம் பிரசித்தி பெற்றவையாகும். குர்த்திகளில் பல கேஸ்வல் வியர் பிரின்ஸ் கட் லாங்க் டியூனிக் மற்றும்  மேற்கத்திய பாணி டியூனிக் எல்லாம் செமையாக கலக்குகின்றது. 

பிரிண்டடு வகைகள், கலம்காரி டாப்புகள், லேயர் எத்தினிக் ரகங்கள் மற்றும் முகல் பட்டா குர்த்தி,  ஜெய்ப்பூர் ரக பாணி பிரிண்டடு குர்த்தாக்கள், முகல் புளோரல், ஹெரிடேஸ் மங்கல்கிரி காட்டன் ரகங்கள் போன்றவை மிகவும் பிரசித்திப் பெற்றவை ஆகும். 

எளிய வகை குர்த்தா போன்ற ரகங்கள் ஆயிரக்கணக்கில்  விதவிதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். தரமான ரகங்களாக உள்ளன. மேலும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள தையல் ரகங்கள் எல்லாம் அழகு மிளிர்கின்றது.  இன்றைய நிலையில் பெண்கள் ஜீன்ஸ் டாப்புகளில் கூட இந்த வகையான புதிய மாற்றங்களை செய்கின்றனர். குர்த்தாக்கள் கலெக்சன்களில் சில ஓவர் கோட், பிளேஸர் ரகங்களில் வருவது என்பது இன்னும் அழகுக்கு அழகு சேர்க்கும் புதிய படைப்பாற்றல் ஆகும். 

உங்களது உடைகள், நிறம் தேர்ந்தெடுப்பு ஆடைகளின் நேர்த்தியானது உங்களை எளிதாக எடைபோட வைக்கும். ஆகையால் இதனை நீங்கள் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன