தூய்மையான சூழல் நோயற்ற வாழ்வு..!

  • by
clean environment can give you healthy life

கொரோனா வைரஸ் நமக்குக் கற்றுத் தந்த மிகப்பெரிய பாடம் எதுவென்றால், தூய்மையான வாழ்க்கையில் நோய்த் தொற்றுக்கள் பரவாது. சுத்தம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம், அதனால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கிறது, என்பதை இந்த கொரோனா தொற்று பரவுவதன் மூலமாகவே நாம் அதிகளவில் அறிந்துள்ளோம். எனவே நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு நம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கிருமிகள் உருவாகுமிடம்

நம் வீட்டில் கிருமிகள் அதிகமாக உருவாகும் இடம் நம்முடைய கழிவறைகள் தான். எனவே தினமும் ஒரு முறை உங்கள் அக்கழிவறையை முழுமையாக சுத்தம் செய்யுங்கள். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் நிச்சயம் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் ஏன்என்றால் உங்களை அறியாமல் ஏராளமான கிருமிகள் உங்கள் கழிவறைகளில் சுற்றித் திரிகிறது.

மேலும் படிக்க – லாக் டவுன் ஏன் இவ்வளவு வலியை தருகிறது..!

வீட்டை சுத்தப்படுத்துங்கள்

தினமும் வீட்டை பெருகிய பிறகு சிறிதளவு கிருமிநாசினி போன்ற பொருட்களை நீரில் கலந்து தரையை முழுமையாக நன்கு துடைக்கவேண்டும். அது காய்ந்தவுடன் மீண்டும் தண்ணீர் ஊற்றி துடைத்தால் வீட்டிற்குள் எந்த ஒரு கிருமிகளும் தங்காது.

வீட்டுப் பொருட்கள்

உங்கள் வீட்டில் உள்ள மேஜையில் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் அனைத்தையும் அதற்கேற்ற பொருள்களைக் கொண்டு துடைக்க வேண்டும். வீட்டில் தூசிகள் அதிக அளவில் படியும் இது போன்ற பொருட்களை நாம் சுத்தமாக வைப்பதன் மூலமாக தேவையற்ற கிருமிகள் எதுவும் அதில் உயிர் வாழாது.

சுற்றுச்சூழல்

உங்கள் வீட்டின் உள்ளே எப்படி சுத்தப்படுத்துகிறீர்களோ அதே போல் உங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டு அருகே பல நாட்களாக தேங்கியிருக்கும் நீரில் ஏராளமான கிருமிகள் உருவாகும். எனவே வீட்டைச் சுற்றி மணல்கள் மற்றும் கிருமி நாசினி போன்ற பொருட்களை ஒன்றாக கலந்து வீட்டை சுற்றி தூவுங்கள். அதேபோல் மரம், செடி, கொடி போன்றவைகளை வளர்த்தால் அதற்குத் தேவையான நீர் ஊற்றி பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..!

சமையல் பொருட்கள்

நீங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களை உடனுக்குடன் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் அதை மீண்டும் உபயோகிக்க எடுக்கும் போது ஒரு முறை நீரில் அலசி விட்டு பயன்படுத்துங்கள். இதன் மூலமாக கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் ஏராளமான கிருமிகளை நம்மால் தடுக்க முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், இதை பின் தொடர்ந்து எதிர் காலத்தில் உருவாகும் எல்லாம் நோய் தொற்றுகளையும் நம்மால் வேரோடு அழிக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன