சூப்பர் ஸ்டாரை போட்டிக்கு அழைத்த சிரஞ்சீவி..!

  • by
chiranjeevi calls rajnikanth for be the real men game

மக்கள் அனைவரும் ஊரடங்கை பின் தொடர்வதால், வீட்டில் அடைந்து இருக்கும் ஆண்களின் மனநிலை மோசமாக சென்றுள்ளது. இதை தடுப்பதற்காக “பி த ரியல் மேன்” என்ற ஹாஸ்டட் ஆந்திரா சினிமா நடிகர்களுக்கு இடையே பிரபலமாகி வருகிறது. இதன் மூலமாக உங்கள் வீட்டில் உள்ள உண்மையான ஆண் யார் என்பதை காண்பிக்க வேண்டும், அதற்கு நீங்கள் வலுதூக்கள் அல்லது உடற்பயிற்சி போட்டிகள் செய்ய தேவை இல்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து அதை காணொளி மூலமாக பதிவிட்டு “பி த ரியல் மேன்” சேலஞ்ச் என்ற ஹஸ்டாக் மூலமாக டுவிட்டரில் பதிவிட்டு வர வேண்டும்.

சிரஞ்சீவி சவால்

இந்தப் போட்டியை ஏற்றுக் கொண்ட தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி அவர்கள் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து சிறப்பாக முடித்துள்ளார். இதை தவிர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இந்த செயலை செய்யுமாறு சவால் விடுத்துள்ளார். தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பரவி வரும் இந்த சேலஞ்சை தமிழகத்திற்கும் வரவிருக்கிறது. அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று செய்வாரா மாட்டாரா என்ற கலக்கத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – ஊரடங்கை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் யூடியூப்பர்ஸ்..!

விஜய் தேவர் கொண்டா

இந்த சவாலை “அர்ஜுன் ரெட்டி” கதாநாயகன் விஜய் தேவர்கொண்டா ஏற்று தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். அதைத் தவிர்த்து ஒரு புதுவிதமான உணவையும் தயாரித்து தன் தாய்க்கு கொடுத்துள்ளார். இதைத் தவிர்த்து ஏராளமான ரசிகர்களும் இந்த செயலை செய்து காணொளிகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

ராஜமவுலி ராம்சரண்

இந்த பதிவு பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் எஸ் எஸ் ராஜமவுலி. “பாகுபலி” திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுக்க பிரபலமான எஸ்எஸ் ராஜமவுலி அவர்கள் தன் வீட்டில் அனைத்து விதமான வேலையையும் செய்துள்ளார். அந்த பதிவை ட்விட்டரில் பதிவிட்டு மற்றவர்களுக்கும் சவால் விடுத்துள்ளார். சிரஞ்சீவியின் மகனான ராம் சரணும் இந்த சவாலை ஏற்று வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். இதை அவரது மனைவி உப்பாசனா தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க – மகனுடன் குத்தாட்டம் போடும் நடிகை..!

கணவன் படும் அவஸ்தை

உல்லாசமாக சுற்றி திரிந்து வேலைக்கு செல்லும் அனைத்து ஆண்களும் இப்போது வீட்டில் அடங்கிக் கிடைக்கிறார்கள், இதன் மூலமாக அவர்கள் சகிப்புத்தன்மை குறைந்து வீட்டில் அவ்வப்போது பிரச்சனைகள் உண்டாகிறது. இதைத் தடுப்பதற்காக வீட்டிலுள்ள ஆண்கள் இதுபோன்ற சேலஞ்சை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் விளையாட்டும், வேடிக்கையும் அதிகரிக்கும் அதைத் தவிர்த்து குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் குறையும் எனவே சினிமா பிரபலங்கள் செய்வதை பின் தொடர்ந்து உங்கள் வீட்டில் இதுபோன்ற குறும்புத்தனமான செயலில் ஈடுபடுங்கள்.

சிரஞ்சீவியின் சவாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று அதை செய்து ட்விட்டரில் பதிவிட்டால் போதும், இதன் தாக்கம் வேறு அளவில் இருக்கும். அதேபோல் அனைத்து ரஜினிகாந்த் ரசிகர்களும் இதே செயலை பின்தொடர்ந்து தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே சிரஞ்சீவியின் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று அதை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன