சீனாவின் பாரம்பரிய மருந்தும் மற்றும் போதிதர்மனின் செயலும்..!

  • by
china's traditional medicine and bodhidharmar's act

இந்தியாவில் உள்ள தமிழகத்தை போலவே சீனாவிலும் ஏராளமான மூலிகை மருந்துகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சீனாவின் பாரம்பரிய மருந்து பெரிதாக உதவியது என்று அவர்களின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள மூலிகை மருத்துவ கலாச்சாரம் சீனாவிற்கு சென்றதற்கான காரணம் தமிழகத்தைச் சேர்ந்த இளவரசர் போதிதர்மர் என்றே அனைவரும் சொல்கிறார்கள். தமிழில் வெளியாகிய ஏழாம் அறிவு படத்தில் சொல்லி இருப்பதைப் போல் போதிதர்மர் தங்களுடைய மதத்தையும் மற்றும் தியான நெறிகளையும் மற்ற நாடுகளுக்கு பரப்பும் வகையில் அவர் சீனாவுக்கு சென்று உள்ளார். அங்கே ஏற்கனவே புத்த மதத்தை பின்பற்றி வந்த சீனர்கள் இவர்களின் தேவை நமக்கு எதற்கு என்று குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் போதிதர்மரின் வருகை அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது.

போதிதர்மர்

பல்லவ மகாராஜாவின் மகனான போதிதர்மன் தன்னுடைய பெண் குருநாதர் ப்ரக்யதாரா கட்டளைக்கு கீழ்படிந்து பௌத்த மதத்தை மற்றும் அதில் இருக்கும் நெறிகளை புத்தமதத்தை பின்தொடரும் சீனா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டளையை கேட்டு அவர் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை அனைத்தையும் துறந்து ஒரு துறவியாக சீனாவுக்கு நடைபயணம் மேற்கொண்டார். இவர் வருகையை கேட்ட சீன அரசர் இவருக்கான வரவேற்பை சிறப்பாக செய்தார். அப்போது அவர் கேட்ட ஒரு கேள்வியும், அதற்கு போதிதர்மன் அளித்த பதிலும் எல்லோரையும் குழப்பத்தில் மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க – இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்காத மாநிலங்கள்..!

சீன அரசர் செய்யும் இந்த செயலுக்கு அவர் இறந்த பிறகு நிச்சயம் சொர்க்கம் கிடைக்குமா என்ற கேள்வியை போதி தர்மனிடம் கேட்டார், அதற்கு போதிதர்மர் நிச்சயம் உங்களுக்கு நரகம்தான் கிடைக்கும் என்றார். உடனே அங்கு சூழ்ந்திருந்த மக்கள் கோபம் அடைந்தார்கள், பின்பு அதற்கான விளக்கத்தையும் போதிதர்மர் அளித்தார். புகழுக்காகவும் மற்றும் பேருக்காகவும் செய்யப்படும் புண்ணியங்கள் அனைத்தும் புண்ணியமாக கருதப்படாது, தன்னலம் அறியாமல் பெருமைகள் எதுவும் கொள்ளாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் உதவிகள் தான் புண்ணியமாக கருதப்படும் என்றார்.

கற்றுத்தந்த கலைகள்

போதிதர்மர் தன் கைப்பட எந்த  நூல்களையும் எழுதவில்லை ஆனால் அவரின் சிஷ்யர்கள் அவர் செய்த செயல் மற்றும் சொற்களை வைத்து கொண்டு அவர் பயிற்சி அளித்த தற்காப்பு கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். போதிதர்மரின் தற்காப்புக் கலையின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லோரும் கருதப்படும் ஏழாம் அறிவை அவர் உருவாக்கினார், அதாவது நம்முடைய ஆழ்மனதின் உள்ளே எப்படி செல்வது, அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை போதிதர்மன் நன்கு அறிந்திருந்தார். இதன்மூலமாக அவர் எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும் அவரின் மனதை முழுமையாக படிக்கும் சக்தி போதிதர்மருக்கு உண்டு. நம்முடைய ஆழ்மனதுதான் புத்தர் என்று சொன்னார் போதி தர்மர்.

தவத்தின் சிறப்பு

சீனாவில் ஏற்கனவே பல முனிவர்கள் தங்கள் தவத்தினை மேற்கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்கள் பார்ப்பதற்கு ஒல்லியாகவும் மற்றும் உடல் நிலை மிக மோசமாக இருப்பதை உணர்ந்தார். இதைத் தொடர்ந்து ஒரு தியானி என்பவர் தனது மனதை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறாரோ அதே போல் தன்னுடைய உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி அதற்கான வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். கிட்டத்தட்ட தொடர்ந்து ஒன்பது வருடங்கள் ஒரு சுவரை நோக்கி ஆழ்ந்த தவத்தில் இருந்தவர் போதிதர்மர், அச்சமயங்களில் அவருக்கு தூக்கத்தினால் உண்டான இடையூறை தடுப்பதற்காக தன் கண் இமைகளை துண்டித்து தூக்கி எறிந்தவர். அந்த இமைகள் விழுந்த இடத்தில் வளர்ந்த செடியை சீன மக்கள் தூக்கத்தை போக்கும் கசாயத்திற்கு பயன்படுத்தினார்கள். இதைதான் நாம் தேனீர் என்று இக்காலத்தில் அருந்து வருகிறோம்.

மேலும் படிக்க – கேரட் ஆப்பிள் பழரசம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

மூலிகை மருத்துவம்

போதி தர்மர் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றது வரை அவரின் சிஷ்யர்கள் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் நமக்கு தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அவர் சென்ற சமயத்தில் சீனாவில் ஏராளமான நோய்த்தொற்றுகள் பறவி இருந்ததாகவும், அதை மூலிகை மருத்துவத்தின் மூலமாக போதிதர்மர் குணப்படுத்தினார் என்ற ஒரு கதையும் இருக்கிறது. இன்றும் சீனர்கள் போதிதர்மரை ஓர் கடவுளாக பார்க்கிறார்கள். அவர் அளித்த குங்ஃபூ கலை, தியான வழிமுறைகள் மற்றும் மருத்துவங்களை பயன் இன்றும் மிகப் பெரிய உதவிகளை சீன மக்களுக்கு செய்து வருவதனால் போதிதர்மரின் வரவு அவர்கள் செய்த புண்ணியம் என்று கூறுகிறார்கள்.

போதிதர்மர் இன்றும் இமயமலையில் உயிருடன் தான் இருக்கிறார் என்று அவரின் சீடர்கள் நம்பி வருகிறார்கள். போதிதர்மர் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்பதற்காக அவர் அருந்தும் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள். பின்பு அவர் இறந்ததாக நினைத்து அவரை புதைத்தார்கள், ஆனால் சீனாவின் எல்லைப் பகுதியை போதிதர்மர் கடந்து செல்வதை ஒருவர் பார்த்துள்ளார். அப்போது அவர் கையில் இருந்த தடியில் ஒற்றை செருப்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது, உடனே போதிதர்மர் நான் இதுபோல் இந்த எல்லையைக் கடந்து செல்கிறேன் என்று அரசிடம் சொல் என்றார் உடனே அந்த காவலர் அரசிடம் சொல்லி அடுத்த கணமே அவர் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டிப் பார்த்தார்கள். அங்கே போதிதர்மரின் மற்றொரு செருப்பு இருந்தது. இன்றும் சாகாவரம் பெற்ற போதி தர்மர் மறைமுகமாக பல உதவிகளைச் செய்கிறார் என்று அவர்களின் சீடர்கள் நம்பி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன