குழந்தைகளைத் தாக்கும்  புதுவித  சிலியாக் நோய்.!

  • by
children getting new disease called celiac

பெரும்பாலான குழந்தைகள் துரித உணவுகளை உண்பதற்கு காட்டும் ஆர்வத்தில் சிறிதளவு கூட நம் வீட்டில் இருக்கும் உணவை சாப்பிட அவர்கள் விரும்பவில்லை. அதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர்களுக்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள சிலியாக் என்ற ஒருவகை நோய்த்தொற்று தான்.

ஒவ்வாமை எனும் அலர்ஜி உள்ளவர்க ஒக்கு அடிக்கடி தும்மல் வரும். ஆஸ்துமா வரும். உடலில் அரிப்பு ஏற்படும்.  இவை அனைத்தும் நாமறிந்த ஒன்றே! ஆனால் இந்த ஒவ்வாமை குடலில் ஏற்படுவதால் ஒரு நோய் ஏற்படுகிறது. இந்த நோய் உடையவர்கள் தங்களது உணவு பழக்கவழக்க முறையை சரியான முறையில் கொண்டு சென்றால் மட்டுமே நோயிலிருந்து இவர்களை தற்காத்துக்கொள்ள முடியும் இல்லையெனில், இவர்கள் உண்ணும்  உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இவர்களை வந்து அடையாது.

சிலியாக் நோய் என்றால் என்ன?

குளுட்டன் எனப்படும் ஒரு வேதிப்பொருள் மைதா, கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற அனைத்திலும் காணப்படுகிறது. இதில் இருக்கும் ஒரு புரதம் தான் இந்த குளுட்டன். நாம் இன்று உண்ணும் அனைத்து வகை துரித உணவுகளிலும் இந்த புரதம் இருக்கிறது.

மேலும் படிக்க – கல் உப்பை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது உணவுப்பாதையில் IGA எதிர் அணுக்கள் அதிகரிக்கின்றன. அவைகளை எதிரியாக எண்ணி குடலை விட்டு அகற்ற முயற்சி செய்கின்றன. இவ்வாறு நடக்கும் பொழுது உடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் நாம் இந்த உணவுகளை உண்பதால் குடல் உறிஞ்சிகள் முழுவதுமே அழிந்து விடுகின்றன.

குடல் உறிஞ்சிகளின் வேலை என்ன ?

வயிற்றுப் பகுதியில் உள்ள குடல் உறிஞ்சிகள் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சி ரத்தத்தில் சேர்ப்பதுதான் இதனுடைய மிக முக்கிய வேலையாக இருக்கிறது. இதன் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தான் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் நம் உடலை சென்றடையும். ஆனால் இந்த குளுட்டன் அதிகம் சேர்த்த உணவுப் பொருட்களை உண்பதால் அவர்களுக்கு குடல் உறிஞ்சிகள் இல்லாமல் போகிறது. இதனால் உணவு சத்துக்கள் உறிஞ்சப்படாமல் ,மலத்தில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் செரிமான பிரச்சனைகள் சத்துக்குறைவு, நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

சிலியாக் நோயின் அறிகுறிகள் என்ன?

உணவு செரிமானம் ஆவதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் வயிற்று முழுவதும் வாயு சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படும். வயிறு உப்புசமாக இருக்கும். இதன்பின் உணவை சாப்பிட்டதும் வயிறு வலிக்க தொடங்குகிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. 

வழுவழுப்பாகவும் மிகுந்த நாற்றத்துடன் மலம் வெளியேறுகிறது. இந்நோய் உள்ளவர்கள் சாப்பிட்ட உடனே மலம் கழிப்பார்கள்.

சிலியாக் நோயின் பாதிப்புகள் என்ன?

இந்த நோய் உள்ளதே பலருக்கு தெரியாமல் இருப்பதால் கீழ்க்கண்ட அறிகுறிகள் வைத்து இதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். ரத்தசோகை ஏற்படுவதால் உடல் களைப்புடன் இருக்கும்.

வாய்ப்புண் அடிக்கடி ஏற்படும்.
உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.
கை கால்களில் எரிச்சல் வலி ஏற்படும்.

எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகள் 

குழந்தைகளுக்கு எலும்பு வலுவிழப்பு நோய் ஏற்பட்டு உடல் வளர்ச்சி வயதுக்குஏற்றபடி இருக்காது .

குழந்தையின் ஒவ்வொரு செயல்களுமே மந்தமாகத்தான் இருக்கும். வளருவதில் தாமதம் ஏற்படலாம். 

திருமணமானவர்களுக்கு இந்நோய் ஏற்படுவதால் குழந்தை பிறப்பதில் தாமதம் உண்டாகிறது. சருமத்தில் அரிப்பு மற்றும் கை கால் வலி ஏற்படுகிறது. தைராய்டு பிரச்சனையும் வரும்.

மேலும் படிக்க – கோடைகாலங்களில் ஏற்படும் வியர்வையை தடுப்பது எப்படி..!

சிலி யாக்  நோய்க்கான சிகிச்சை 

நோய்க்கான தனிப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. சில பரிசோதனைகள் மூலம் இதனை கண்டறியலாம். Iga  எதிர் அணுக்கள் பரிசோதனை செய்து ரத்தத்தில் இந்த எதிர் அணுக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்த அவை அதிகமாக இருந்தால் நோய் உள்ளதை உறுதி செய்யலாம்.

எண்டோஸ்கோபி மூலம் பயாப்ஸி எடுத்தும், மரபணு பரிசோதனைகள் ஆன DQ 2, DQ8 எனும் மரபணுக்கள் ரத்தத்தில் காணப்படுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

குளுட்டன் இல்லாத உணவு வகைகளை சாப்பிடுவது தான் இந்த நோய் வராமல் தடுப்பதற்கான ஒரே வழி. அரிசிமாவு உருளை கிழங்கு மாவு, கடலை மாவு, சோயா மாவு ,சோள மாவு, மக்காச்சோள மாவு ஆகியவற்றை தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அளவு உடலில் குறைவதால் மருத்துவரின் ஆலோசனையின் கீழ் வைட்டமின் மாத்திரைகளும் துத்தநாகம், கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன