சென்னை 31ஆம் தேதிவரை அடைக்கப்பட்டுள்ளது..!

  • by
chennai

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சென்னை வருகிற 31-ஆம் தேதி வரை அடைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 24ம் தேதி மாலை 5 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்

மார்ச் 24 திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் வீட்டின் அத்தியாவசிய தேவைகளுக்காக இவர்கள் வெளியே வரலாம் அதையும் மீறி வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க – கல் உப்பை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பதட்டத்தில் மக்கள்

144 தடை உத்தரவைப் பிறப்பித்த பிறகு சென்னையில் இருந்து பிற மாவட்டத்திற்கு செல்லும் மக்கள் பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட்டமாக அலை மோதுகிறார்கள். ஆனால் இதுபோன்ற சூழலில் தான் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். இதை அறியாத மக்கள் ஒருவரை ஒருவர் தொட்டு பொது பேருந்துகளில் பயணம் செய்ய முயற்சி செய்கிறார்கள். எனவே இவர்களின் வாழ்க்கை என்ன வேண்டுமானாலும் ஆகலாம், எதுவாக இருந்தாலும் இரண்டு வாரம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

நெரிசலை தவிருங்கள்

எல்லோருக்கும் தங்கள் வீட்டிற்கு செல்லும் ஆசை அதிகமாக இருக்கும், ஆனால் உங்கள் மேல் தொற்றிக் கொண்ட வைரஸை உங்கள் வீட்டிற்கு கொண்டு சென்றால் அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள். எனவே இதுபோன்ற சூழலில் தனிமையில், நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இனியும் நகரத்தில் இருக்கும் இது போன்ற தொற்றுகளை உங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்லாதீர்கள்.

விமான நிலையம்

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து தமிழர்களையும் தமிழக அரசு பரிசோதனை செய்து அவர்களை மருத்துவமனைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிலைமை புரியாமல் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். கொரோனா வைரஸின் தாக்கத்தை முழுமையாக அறியாத இதுபோன்ற மக்களால்தான் வைரஸ் பாதிப்பு எல்லோருக்கும் பரவுகிறது. இதேபோல்தான் சில வாரங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்த மக்களும் அலட்சியமாக இருந்தார்கள்.

நீடிக்க வாய்ப்புள்ளது

நமது அரசாங்கம் நமக்கு நல்லதே செய்யும், எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் தங்கள் மக்களின் நலனை கருதி ஏதாவது திட்டங்களை அறிமுகம் செய்வார்கள். அதுபோல்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்காக தமிழக அரசு மற்றும் இந்திய அரசு பல வகைகளில் நமக்கு உதவிகளை செய்கிறது. எனவே இதைக் கருத்தில் கொண்டு நீங்கள் 31ம் தேதி வரை வீட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த நாட்கள் நீடித்தாலும் அதை சகித்துக்கொண்டு அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். அது உங்களை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்கும்.

மேலும் படிக்க – பவளமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

தொடர்ச்சியை துண்டியுங்கள்

வைரஸ் தொற்றுக்கள் படிப்படியாக ஒருவர் மீது இருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது. இந்த தொடர்பை துண்டிக்க வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். இதனாலேயே சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனாலேயே 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

மக்கள்தொகை அதிகமாக உள்ள மாவட்டமாக விளங்குவது சென்னை. தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களில் இருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் இடம் தான் சென்னை. எனவே இங்கிருந்து ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் அது தமிழகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும். இதை கருத்தில்கொண்டு மார்ச் 31ம் தேதி வரை அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து உங்களையும், உங்கள் சொந்தங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன