சார்கோல் பேஸ்பேக்கில் இருக்கு சருமத்தின் பளபளப்பு!

  • by

பல்வேறு சருமப் பராமரிப்பு தயாரிப்புகளில் நமக்கு  அழகுதரும் ஒரு முக்கியமான உட்பொருள் ஆக்டிவேட்டட் சார்கோல் என்பதை நாம் அறிந்திருப்போம்.

 சார்கோலின் மிகவும் பயனுள்ள பயன்பாடு ஃபேஸ் மாஸ்காகத்தான் இருக்கும். சமையல் மற்றும் பார்பிக்யூக்களில் பயன்படுத்தப்படும் கரியில் இருந்து இது மிகவும் வேறுபட்டது என்பதை நாம் அறிவோம். 

அழகூட்டும்  தயாரிப்புகளில் பயன்படும் சார்கோல் ஆக்டிவேட்டட் சார்கோல் ஆகும். சார்கோல் அதன் பண்புகளை இன்னமும் தீவிரமானதாக இருக்கும். அல்லது செயல்முறைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது என்று பொருள். பல்வேறு வேதி செயல்முறைகளின் மூலம் மேல்பரப்பை அதிகரிப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

ஆக்டிவேட்டட் சார்கோல்:

சார்கோலை ஆக்டிவேட் செய்வதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன.  வழக்கமான சார்கோல் (கரி) கிடைத்தால், அதை முதலில் நன்கு பொடியாக்கி, மிருதுவான பொடியாக மாற்ற வேண்டும்.  ஒரு பங்கு கால்சியம் குளோரைடை எடுத்து மூன்று பங்கு தண்ணீருடன் நன்கு கலக்க வேண்டும். 

 சார்கோலை ஒரு பேஸ்ட் போல மாற்றி  சரியான பதத்திற்கு கொண்டு வரலாம்.. பேஸ்டை ஒரு மெலிதான, சமமான பரப்பில் பரப்பில் உலரவிட்டு . அது காய்ந்தவுடன், சுத்தமான தண்ணீரால் அலசி அதனை பொடி செய்ய வேண்டும். 

ஆக்டிவேட்டட் சார்கோல் பல்வேறு பிராண்ட்களில் ஒரு தயாரிப்பாக கிடைக்கிறது. ஆனால் தேங்காய் தொட்டியை எரித்து  வரும் கரித்துண்டை பேஸ் மாஸ்காக பயன்படுத்துதல் சாலச்சிறந்தது. 

சார்க்கோல்

சார்கோல் மாஸ்க்:

சார்க்கோலை, ஃபேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்துவதில் பல நல்ல பலன்கள் உள்ளன.   உடல்நலம் மற்றும் அழகுக்கலை துறைகளில் ஆக்டிவேட்டட் சார்கோல் ஏராளமான பலன்களை அளிக்கிறது, பத்தாண்டுகளாக வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் சலூன்களில் பல்வேறு பலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஃபேஸ் மாஸ்காக, இது பல நேரடியான பலன்களைத் தருகிறது. இது பொலிவான ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும். உங்கள் முகத்தில், ஆக்டிவேட்டட் சார்கோலைப் பூசுவதால் கிடைக்கும் பலன்களை இப்போது பார்க்கலாம்.

சார்கோல் ஃபேஸ் மாஸ்குகள் சருமத்தில் உள்ள மாசுப்பொருட்களை உறிஞ்சுகின்றன. சார்கோல் ஃபேஸ் மாஸ்குகளின் மிகவும் சிறந்த பலன்களில் ஒன்றாக இருப்பது, சருமத்தில் இருந்து அதன் நச்சு நீக்கும். தன்மையாகத்தான் இருக்க முடியும்.

மேலும் படிக்க: பட்டுபோன்ற முடி பளப்பளக்க வேண்டுமா !

நாள்  முழுவதும் பல்வேறு காரணிகள் உங்கள் சருமத்தில் நச்சுப்பொருட்களைச் சேர்த்து கொண்டே போகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு, சூரிய ஒளி, புறக்காராணிகள், வானிலை மாற்றம், உணவு பழக்கம், மன அழுத்தம், உறக்கம் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த காரணங்கள் போன்றவையும் சருமத்தில் நீங்கள் பூசும் வேதிபொருட்கள் என்று பலவும் உள்ளடங்கும்.


சார்க்கோல்

உங்கள் முகத்தையும் கழுத்தையும் நன்கு க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ட்ரைசிங் செய்து வருவது சிறந்தது ஆகும். இந்த நச்சுப்பொருட்கள், எபிடெர்மிஸுக்கு அடியில் சேர்ந்து, பல்வேறு சரும மற்றும் இதயக் கோளாறுகளை போக்க கூடியாதாகும். 

சருமத்தில் இருந்து நச்சுப்பொருட்களை முற்றிலும் அகற்ற, ஆக்டிவேட்டட் சார்கோல் மூலமாக செய்யப்படும் ஒரு ஃபேஸ் மாஸ்க் நன்கு பலனளிக்கக் கூடியது.   

  கரிதுண்டின் கூடுதல் உறிஞ்சும் தன்மை மற்றும் அதிக அழுக்கு, பிசுக்கு மற்றும் தீங்கு தரும் பொருட்களை சருமத்தில் இருந்து எடுக்கின்றது. நஞ்சு பொருட்கள், வேதிப்பொருட்கள், உடல் உள்ளுறுப்பில் இருந்து அகற்றப்படும் மருந்து பொருட்கள் ஆக்டிவேட்டட் சார்கோலில் மூலம் சருமத்தில் இருந்து அகற்றப்படுகின்றன. நச்சுப்பொருட்கள், சருமத்தில் இருந்து அகற்றப்படும்போது, உங்கள் சருமம் பளபளப்பாக, பளிச்சென்று மாறும். ஆக்சிடைசிங் ஏஜெண்ட்களின் மூலமாக ஏற்படும் இளம் வயதில் முதிர்ச்சி ஏற்படுவதில் இருந்தும் இது தடுக்க  முடியும். 

மேலும் படிக்க: சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க


சார்க்கோல்

கரித்துண்டு சார்கோல் சருமத்தில் இருந்து, நச்சுப்பொருட்களையும் மாசுகளையும் அகற்ற, சார்கோல் ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

சார்கோல் ஃபேஸ் மாஸ்கின் மூலம் முகத்தில் பருக்களால் ஏற்பட்ட துவாரங்களைக் குறைக்கும்.  ஃபேஸ்மாஸ்கில் ஆக்டிவேட்டட் சார்கோலைப் பயன்படுத்தும்போது, அது துவாரங்களைக் குறைக்க, சில நேரங்களில் மொத்தமாக மூடவும் பயன்படுகிறது. 

மேலும் படிக்க: இதழ்களுக்கு அழகு இந்த லிக்வ்யூடு லிப்ஸ்டிக் டிரெண்டிங்

முகத்தில் உள்ள துவாரங்கள் வெளிப்படையாக தெரிவதற்குக் காரணம் அவற்றில் அழுக்கு, தூசு மற்றும் மாசுபொருட்கள் சேர்ந்திருப்பதே. ஆக்டிவேட்டட் சார்கோலை முகத்தில் பூசும்போது, அது இந்த எல்லா வகையான பொருட்களையும் உறிஞ்சி எடுத்து, துவாரங்களின் அளவை சுருக்குகிறது. காலப்போக்கில், இந்த துவாரங்கள் முழுமையாக மூடப்படுவதை நீங்கள் காணலாம், மிருதுவான, சீரான நிறமுடைய மாற்றம் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன