ராசிக்கேற்ற குணாதிசயம், உங்கள் ராசி என்ன..!

  • by
characteristics according to your zodiac signs

ஜோதிடத்தில் நாம் பிறக்கும் தேதி மற்றும் மாதத்தை பொறுத்து நம்முடைய ராசி அமைகிறது. இது சாதாரணமாக நம்முடைய நாள் எப்படி கழிகிறது என்பதை கணிக்க உண்டாக்கியது அல்ல அதையும் தாண்டி நம்முடைய குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை நம்முடைய ராசியின் மூலமாக நாம் அறியலாம். உங்கள் குணாதிசயம் உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்கள் நண்பரோ அல்லது துணையின் குணத்தை அவர்கள் ராசியைப் பொறுத்து அறிந்திடுங்கள்.

மேஷம், ரிஷபம்

மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள், அதேபோல் நேர்மையாகவும், தாங்கள் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாடு செலுத்துவார்கள். இவர்களுக்கு பொறுமை என்பது சற்று குறைவாகவே இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் பொறுமையாகவும் மற்றும் பொறுப்புடன் இருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் இவர்கள் அடம்பிடிக்கவும் செய்வார்கள்.

மிதுனம், கடகம்

மிதுன ராசிக்காரர்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக கற்பவர், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் தன்மை கொண்டவர், அதேபோல் அன்பான குணமும் படைத்தவர். சில சமயங்களில் இவர் அதிகமாக பதற்ற நிலைக்கு செல்வார். கடக ராசி காரர்கள் கற்பனை சக்தி அதிகமாக கொண்டவர்கள், எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர். அவர் எல்லோரிடமும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பவர். இவருக்கு பிரச்சினையாக பார்க்கப்படுவது சில சமயங்களில் ஊக்கம் இல்லாமல் சோர்வாக இருப்பார்.

சிம்மம், கன்னி

சிம்ம ராசிக்காரர்கள் கற்பனைத்திறனை அதிகமாக கொண்டிருப்பவர். நகைச்சுவை குணம் மற்றும் இளகிய மனம் கொண்டவர். சில சமயங்களில் இவர் கோபப்படுவதும் உண்டு, அதே சமயத்தில் அதற்காக அடம் பிடிப்பதும் உண்டு. கன்னி ராசிக்காரர் எப்போதும் கடினமாக உழைக்கக் கூடியவர். எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக் கொள்பவர். ஆனால் எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதே இவரின் பிரச்சனையாகும்.

துலாம், விருச்சிகம்

துலாம் ராசிக்காரர் எல்லோரையும் புரிந்து நடந்துக் கொள்ளும் குணத்தை கொண்டவர், நேர்மையான சிந்தனை உடையவர், அதிக நண்பர்களை கொண்டவர். சில சமயங்களில் இவர்களுக்குள் ஒரு விதமான தீய எண்ணங்களும் தோன்றும். விருச்சக ராசிகாரர்கள் மிகவும் தைரியமானவர், தேவையானவற்றை அடம்பிடித்து சாதிக்கக் கூடியவன். ஆனால் இவர் மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து சில சமயங்களில் பொறாமையும் படுவார்.

மேலும் படிக்க – எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

தனுசு, மகரம்

தனுசு ராசிக்காரர்கள் நகைச்சுவை குணம் கொண்டவர், ஏராளமான யோசனைகளை தரக்கூடியவர், ஆனால் இவர்களுக்கு பொறுமை என்பது சற்று குறைவு. அதே போல் ஏராளமான சத்தியங்களை அளித்து அதை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுபவர். மகர ராசிக்காரர்கள் எல்லா விதத்திலயும் கட்டுப்பாடுடன் செயல்படக்கூடியவர். ஒழுக்கமாக வாழ்பவர். ஆனால் இவர் அவ்வளவு எளிதில் மற்றவர்களை மன்னிக்க மாட்டார்.

கும்பம், மீனம்

கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமாக வாழக்கூடியவர், அவர் எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனக்கென ஒரு குணத்தை கொண்டவர். இவர் அவ்வளவு எளிதில் சமாதானம் அடைய மாட்டார்கள், அதேபோல் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். மீன ராசிக்காரர் ஒரு கலைஞர், இவர் இசையின் மேல் அதிகமான ஆர்வம் கொண்டவர். எதற்கெடுத்தாலும் பயப்படுவது இவரின் பலவீனமாகும்.

இப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கிறது. உங்களின் ராசிக்கு ஏற்ப குணம் சரியாக இங்கே கணிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் சரியான ராசிக்காரர்கள் என்பதாகும். அதே போல் உங்கள் நண்பரின் குணத்தையும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் பொறுத்து தெரிந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன