பணத்தை ஈர்க்கும் எளிய மந்திரம் அறிவோமா!

  • by

இன்றைய உலகில் மனிதனின் முக்கிய தேவைகளுள் ஒன்றாகப் பணம் உள்ளது. நமது தேவைகளை  பூர்த்தி செய்து கொள்ள அதற்கு உதவுவது பணம் ஒன்றுதான். பணம்தான் முக்கிய பரிமாற்றமாகும்.

 பணத்தினை நாம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும், எப்பொழுதும்  பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பணத்தை சம்பாரிக்கும் அனைவருக்கும் இது அவசியமானது ஆகும்.  சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் பணம் கிடைக்கும். 

பணம் எப்பொழுதும் வேண்டும், கையில் பணப்புழக்கம்  இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கு நாம் பின்ப்பற்ற வேண்டிய வழிமுறைகளை இங்கு கொடுத்துள்ளோம். 

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

 தினம் காலையில்  எழுந்து குளித்து முடித்த உடன் 6 மணிக்கு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும். கண்களை மூடி வீட்டு பூஜை அறையில் அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை ஆழ்மனதில் மனதார சொல்லிவந்தால் பணத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவோம். 

 வாழ்வில் பணம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுவோம். இது நல்ல முன்னேற்றத்தை வாழ்வில் கொடுக்க ஆரம்பித்துவிடும். தொடர்ந்து மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பணம் ஈட்டும் செயல்பாட்டில்  விடா முயற்சியை தூண்டும் சக்தி இந்த மந்திரத்திற்கும் உள்ளது. 

எந்தெந்த முறைகளில் சம்பாதிக்கலாம் செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் உருவாகும். இந்த எண்ணம் வந்து விட்டாலே போதும்  எடுக்கும் எந்த முயற்சியானாலும் வெற்றி பெற்று விடலாம். பணத்தை தேடி நீங்கள் போக வேண்டாம், அந்தப் பணம் உங்களைத் தேடி வரும் என்பது உறுதியாகும்.

 நீங்கள் செல்வந்தர் மற்றும் அதிர்ஷ்ட காரர்கள் ஆகனுமா,   செல்வ வளத்தை பெற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் தானாக தேடி வர நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

செல்வத்தை ஈர்க்க மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை. பொதுவாக வெள்ளிக்கிழமையை மகாலட்சுமிக்கு உரிய நாளாக கூறுவார்கள். வெள்ளிக்கிழமைதோறும் நம் வீட்டில் செய்யப்படும் ஒரு சிறிய பூஜையின் மூலமும், நம் வாயால் உச்சரிக்கப்படும் ஒரே ஒரு வார்த்தையின் மூலமும் அந்த மகாலட்சுமியின் அம்சமான பணத்தை அள்ள அள்ள குறையாமல் பெறலாம்.  செல்வளத்தை பெருக்கித்தரும் அற்புத பரிகாரம் எது என அறிவோமா, இந்தப் பூஜையை செய்வதற்கு முன்பு நம் வீட்டினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. எந்தவிதமான தீட்டும் நம் வீட்டில் இருக்கக்கூடாது. பொதுவாக வெள்ளிக்கிழமை தினத்தன்று நம் அனைவரின் வீடும் சுத்தமாக தான் இருக்கும். அப்படி இருந்தால் போதுமானது.

வெள்ளியன்று ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து லவங்கம், 5 ஏலக்காய், சிறிதளவு குங்குமப்பூ, 5 ஒரு ரூபாய் நாணயங்கள் இவற்றை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து மூன்று முடிச்சுகள் போட்டு வைக்க வேண்டும். 

மாலை வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து கொண்டு, நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மஞ்சள் நிற முடிசினை அந்த மஹாலக்ஷ்மி தாயாரின் படத்திற்கு முன்பு வைத்து கண்களை மூடி, நம் கஷ்டங்கள் தீர மனதாரப் பிரார்த்தனை செய்து, பின்பு இந்த மஞ்சள் நிற முடிசினை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து வேண்டும்.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

மஞ்சள் துணி  முடிச்சை பணப்பெட்டியில் வைக்கும்போது ‘அக்ஷய’ என்ற வார்த்தையை உச்சரித்து விட்டு வையுங்கள். இதேபோன்று 11 வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பொதுவாக நாம்  பண பரிமாற்றத்தில் ஈடுபடும்போது, அதாவது ஒருவருக்கு பணத்தை கொடுக்கும் போதோ அல்லது வாங்கும் போதோ ‘அக்ஷய’ என்ற வார்த்தையை மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்ளலாம். ‘அக்ஷய’ என்ற சொல்லுக்கு மீண்டும் மீண்டும் வரும்’ ‘அள்ள அள்ள’ குறையாது என்று பொருள் உண்டு. அக்ஷய என்ற பொருள் உண்டு. அக்ஷயா என்ற சொல்லானாது நாம் எல்லோரும் அறிந்தது தான், வருடத்திற்கு ஒருமுறை அக்ஷய திதி அன்று தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் சேரும் என்று கூறுவார்கள் கேள்விப்பட்டதுண்டா, இது அந்த மந்திரம் தான். பணத்திற்கும் மிகவும் பொருந்தும். நம்பிக்கையுடன் உங்கள் மனதுக்குள் இந்த அக்ஷய மந்திரத்தை சொல்லி  வந்தால் எண்ணியது உடனடியாக கிடைக்கப் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன