கணபதியின் மூலமந்திரம் பயன்படுத்தி எதிலும் ஜொலிக்கலாம்.!

chant ganapathy muula mantra give your many advantages

எந்த ஒரு நற்காரியங்களாக இருந்தாலும் அல்லது சுபமுகூர்த்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நாம் முதலில் வணங்குவது விநாயகரைத்தான். மாளிகைகள், கோயில்கள் என எதுவாக இருந்தாலும் முதலில் விநாயகர் சிலையை தான் வைப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகரை நாம் எப்படி வணங்க வேண்டும் அதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

விநாயகரை மனிதர்கள் மட்டுமல்லாமல் தேவர்களும் தாங்கள் ஏதேனும் நற்காரியத்தைச் செய்வதாக இருந்தால் விநாயகரைதான் முதலில்  வணங்குவார்கள். ஆனால் தேவர்களுக்கு இணையாக நாம் விநாயகரை வழிபட வேண்டுமென்றால் அதற்கான மூல மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும். இதன் மூலமாக நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க – பூஜை செய்வதற்கு ஏற்ற பொருட்கள்..!

விநாயகர் மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே

வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

இந்த மந்திரத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தைக் மாதத்தில் ஒரு முறை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு பூக்கள் வைத்து தீபங்களை காட்டி கொழுக்கட்டை அல்லது இனிப்புகள், நைவேத்தியம் போன்றவர்களை படைத்து இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

எது செய்வதாக இருந்தாலும் அந்தக் காரியத்தில் நாம் முன் முயற்சியாக இருக்க வேண்டும், அதை பொறுத்துதான் நாம் செய்யும் காரியம் நிறைவேறும். எனவே நாம் எந்த வேலையும் செய்யாமல் வேண்டுதல் மூலமாக அந்த காரியம் நிறைவேற வேண்டுமென்றால் அது முட்டாள்தனம். எனவே நீங்கள் செய்யும் காரியத்தில் தடங்கல் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த மந்திரத்தை பயன்படுத்தவேண்டும். இதன் மூலமாக தடங்கல் இல்லாமல் நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மேலும் படிக்க – திருவோண விரதத்தின் சிறப்புகள்..!

வேத வியாசர் மகாபாரதம் என்னும் இதிகாசத்தை எழுத திட்டமிட்டிருந்தார். இதனால் விநாயகரை முதலில் வணங்கச் சென்றார். இவரின் அர்ப்பணிப்பை பார்த்த விநாயகர் நேரில் தோன்றி அவருக்கு உதவும் வகையில் வேத வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை விநாயகர் தன் கைப்பட எழுதினார். எனவே உங்களுக்கு உதவி புரிவதற்காக விநாயகர் எந்த நிலைக்கும் இறங்கி வரத் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்காக நாம் எந்தளவுக்கு அர்ப்பணித்து இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன