கர்னாட்டிக் இசையில் முழுகும் வாய்ப்பு..!

  • by
chance of getting drowned in carnatic music

சங்கீதத்தில் பல வகைகள் இருந்தாலும் அதில் எப்போதும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான இசைதான் கருநாடக சங்கீதம். தென்னிந்தியாவில், அதிலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் விரும்பி கேட்கப்படும் இசையில் முதன்மை பெற்றது தான் இந்த கருநாடக இசை. உலகில் உள்ள ஏராளமான மக்கள் விரும்பி கற்றுக்கொள்ளும் ஒரு முக்கியமான இசைதான் இந்த கருநாடக சங்கீதம்.

கருநாடக இசை

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய தமிழிசையில் உள்ள ஏராளமான வடிவில் உருவானதுதான் இந்த கருநாடக இசை. கருநாடக இசையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இதை சரியாக பாடமுடியும், இதிலிருக்கும் சங்கீதம் மற்றும் ஸ்வரங்களை கற்பதில் ஏராளமானவர்களுக்கு கடினமாக இருந்துவந்துள்ளது. இருந்தும் இதை சிறுவயதிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாக இந்த இசையில் நாம் முதிர்ச்சி அடைய முடியும்.

மேலும் படிக்க – டெண்டிங்காகும் சிவகார்த்திகேயன் ஹஸ்டாக்..!

இசையில் இணைந்திருங்கள்

நாதம், சுருதி, தாளம், ஸ்வரம், லயம், அவர்தம் போன்றவைகள் அனைத்தும் இணைந்து இசை எல்லாம் காற்றில் இணைந்து உயிர் மூச்சினை உண்டாக உதவுவதே இந்த கருநாடக இசையின் சிறப்பு. கருநாடக இசையை ஏராளமான இசைக்கலைஞர்கள் இணையதளம் மூலமாக மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். இசை ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் கூட ஸ்கைப் மூலமாக கர்நாடக இசையை அவர்களின் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதைத் தவிர்த்து உலகில் உள்ள ஏராளமான இசை பிரியர்களும் இதுபோன்ற வழியின் மூலமாக கர்நாடக இசையை கற்று வருகிறார்கள்.

சிறந்து விளங்கலாம்

சாதாரணமாக பாடுவது என்ற பேரில் எழுப்பப்படும் ஒலிகளுக்கு இருக்கும் மதிப்பைவிட கருநாடக இசையின் மூலமாக எழுப்பப்படும் ஒலி தெய்வீகத்தை கொண்டது. இந்த இசையினை நாம் முழுமையாக கற்கும் போது நம்மை அறியாமல் நமக்குள் ஏராளமான நெகிழ்ச்சிகள் உருவாகும், அதைத் தவிர்த்து இதை மற்றவர்களுக்கு பாடிக் காட்டுவது மூலமாக உங்கள் மனம் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களின் மனம் முழுக நிறையும். எனவே இந்த இசையினை இணையதளத்தின் உதவியுடன் இந்த செயலியில் மிகத் துல்லியமாக கற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – ஒடிடி வெளியீடு சர்ச்சையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக இந்த இசையை நீங்கள் கற்றுக்கொள்ளலாம், அதைத் தவிர்த்து உங்களுக்குத் தேவையான அனைத்து வித பயிற்சிகளும் மற்றும் தேர்ச்சி முறைகளையும் நாம் இந்த செயலியின் மூலமாக கற்றுக்கொள்ளலாம். எனவே உலகில் உள்ள அனைத்து மக்களும் எளிதில் பயன்பெறும் வடிவில் உருவாக்கப்பட்ட இந்த இணைய சேவையின் மூலமாக உங்கள் இசையின் தாகத்தை தீர்த்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன