வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு எளிய தீர்வு

  • by

வெரிகோஸ் வெயின் பலருக்கு சிக்கல் கொடுகின்றது. அதிக நேரம் நின்று கொண்டிருப்பவர்களுக்கு இது ஏற்படும். உடலில் அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு வரும்.   நரம்பில் அழுத்தம், இரத்த அழுத்தம் அதிகரிப்பு உடையோர்கள் போன்றோர் வெரிகோஸ் வெயினால் பாதிக்கப்படுகின்றனர். 

வெரிகோஸ் வெயின் கால்களில் ஏற்படுகின்றது. இது  ஆண்களைவிட பெண்களை அதிகளவில் பாதிக்கின்றது. நரம்பில் அழுத்தம்  கொண்டவர்கள் இதனை கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

வெரிகோஸ் பாதிக்கும் இடங்கள்: 

வெரிகோஸ் பாதிப்பானது பெரும்பாலும் காலில் ஏற்படும். இது முட்டிகாலுக்கு பின்புறம் ஏற்படும்.  கால்களில் நரம்புகள் முடிச்சு விழுந்தது போல் தென்படும். காலில் ரத்த ஓட்டமானது பாதிக்கும். கால்கள் செயலிழக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும் வீக்கம் அதிகரிக்கும். இதனால்  புண்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. 

கடுகு எண்ணெய்:

வெரிகோஸ்பாதிப்புகள் உடையவர்கள் தினமும் ஒர கரண்டி கடுகு எண்ணெய்யை மிதமாக சூட்டில் வெரிகோஸ் நரம்பு முடிச்சு  காலில் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். இது நரம்புகளை சீராக்கும். ரத்த ஓட்டத்தை சரி செய்யும். கால்களில் உள்ள சிக்கல்களை கடுகு எண்ணெயானது குணப்படுத்தும். 

 வெரிகோஸ்  சரி செய்ய தினமும் நடங்க: 

வெரிகோஸ் பாதிப்பு உடையவர்கள் தினமும் நடக்க வேண்டும். தினமும் காலை மாலை ஒரு  மணி நேரமாவது நடத்தல் அவசியம் ஆகும். கால்களில் உள்ள நரம்புகள் அசைவானது பெறும்.  தொடர்ந்து நடக்கும் பொழுது நரம்பானது செயல்படும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். 

கால்களுக்கு இயக்கம்: 

வெரிகோஸ் இருக்கும் நபர்கள் தினமும் அரை மணி நேரம்  ஒரு முறை கால்களை அசைக்க வேண்டும். இரண்டு கெண்டை கால்களை அசைத்து கொடுத்தால் பிடிப்புகள் ஏற்படாது. 

மேலும் படிக்க: கொரனோ வைரஸ் போன்ற நோய் கிருமிகளில் தடுப்பு!

இளைஞர்களுக்கான ஸ்க்லரோ தெரப்பி:

வெரிகோஸ் பாதிப்பு அடைந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அலோபதியில் ஸ்க்ல்ரோ தெரப்பி எனப்படும் சிகிச்சையானது வழங்கப்படுகின்றது.  நரம்பில் ஊசி மூலமாக செலுத்தப்படுகின்றது. இது பாதிக்கப்பட்ட நரம்பை சுருங்கச் செய்து அதனை செயல் இழக்கச் செய்து கரைக்கும் நரம்பை கரைக்கும் தன்மையுடையது ஆகும்.  இதனை அறுவை சிகிச்சையில்லாமல் 10நிமிடத்தில் செய்ய முடியும். 

வெரிகோஸ் ஆரம்ப நிலை:

 தொடர்ந்த ஒரே இடத்தில் அமர்ந்திருத்தலை தவிர்த்தல் நல்லது. 

 அமர்ந்த இடத்தில்  கால்களுக்கு அசைவு கொடுக்க வேண்டும். 

சிரசானம் செய்வதன்  மூலம் சிக்கல்களை சரி செய்யலாம். 

உடலில் கரும்புள்ளிகள் தோன்றலாம். கால்கள் செயல் இழந்து நீண்ட நேரம் பிறகு செயல்படலாம். ஆகவே இத்யு குறித்து ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து முறையான சிகிச்சை எடுத்தல் நல்லது ஆகும்.

மேலும் படிக்க: பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன