கேரட் ஆப்பிள் பழரசம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

  • by
carrot apple juice which increase your immunity

உங்கள் நாட்களை அற்புதமாக தொடங்குவதற்கு நீங்கள் தினமும் காலையில் கேரட் ஆப்பிள் பழரசம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு ஆற்றல் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கேரட் சாப்பிடுவதால்

கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, மினரல்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து அனைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை ஆழகாக பார்த்துக்கொள்கிறது. அதை தவிர்த்து முகங்களில் மற்றும் சருமங்களில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்கிறது.

மேலும் படிக்க – சித்த அமைப்பின் மருத்துவ முறைகள் !

ஆப்பிள் பயன்கள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டாம் என்று நம்முடைய முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள். அதற்கு இனயாகவே ஆப்பிளின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து உங்கள் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும்.

உங்கள் உடல் எடையை குறைத்து உங்கள் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆப்பிள் உதவுகிறது. கேன்சர் உண்டாக்கும் செல்களையும் ஆரம்பத்தில் அழிக்கும் பண்பு ஆப்பிளுக்கு உண்டு. ஆஸ்துமா போன்ற வியாதிகளுக்கு எதிராக ஆப்பிள் பயன்படும்.

கேரட் ஆப்பிள் கலவை

இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து உங்கள் இருதயம் பாதுகாத்து மற்றும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும். அதேபோல் இதில் இருக்கும் மெக்னீசியம் உங்கள் பற்கள், எலும்புகள் மற்றும் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். இவை அனைத்திற்கும் மேலாக இதை குடிப்பதன் மூலமாக உங்களுக்கு உடனடியாக ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் படிக்க – லாக்டவுனில் நாடு முழுவதும் இயங்ககூடியது இயங்காதது!

செய்முறை

நீங்கள் அதிக அளவில் இதை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து கேரட் மற்றும் இரண்டு ஆப்பிளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதை மொத்தமாக சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், பின்பு அதை தினமும் காலையில் குடியுங்கள்.

உங்கள் குடும்ப நலனுக்காக இதை செய்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள். எனவே அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவர்களை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன