முழங்கால் வலிக்கான தீர்வு.!

can't stop your knee pain, try this remedy

முழங்கால் வலி என்பது அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், முதியவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடியது. இதை தவிர்த்து அதிகமாக வேலை செய்பவர்கள் அல்லது அடிக்கடி மாடிப்படி ஏறுபவர்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது அனைத்தையும் நாம் மிக எளிய முறையில் தீர்வு காண முடியும்.

இஞ்சி அல்லது பூண்டு டீ குடிக்கலாம் 

இவை இரண்டுமே மிக எளிமையாக மிக எளிதில் நமக்கு கிடைக்கும் பொருள் அது மட்டுமில்லாமல் விலையும் குறைவாக இருப்பதனால் இவையை கொண்டு முழங்காலில் ஏற்படும் வலியை போக்க முடியும். இதற்கு இஞ்சியை அல்லது பூண்டினை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து அதை தேநீராக அருந்தலாம்.

மேலும் படிக்க – அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்.!

ஆப்பிள் சீடர் வினிகரை 

நாம் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தூங்குவதற்கு முன் குடித்தால் முழங்கால் வலி குறையும். இது மட்டுமில்லாமல் இந்த ஆப்பிள் சீடர் வினிகருடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கலந்து வலி உள்ள இடங்களில் தேய்ப்பது நல்லது.

கடுகு எண்ணை 

முழங்கால் வலியை குறைப்பதற்கு பெரிய பங்கு கடுகு எண்ணை வகிக்கிறது. இதற்காக நாம் கடுகு எண்ணையை சற்று சூடாக்கி நம் சருமத்திற்கு ஏற்றவாறு அதன் தன்மையை கொண்ட பிறகு முழங்கால் பகுதியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் முழங்கால் வலி குணமடையும்.

மேலும் படிக்க – இரும்பு சத்துனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதினால் இதை நன்கு அரைத்துக் கொண்டு அதை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு இஞ்சி, தேன் கலந்து தேநீர் போல குடிக்க வேண்டும். இல்லையெனில் மஞ்சளை நமது முழங்காலில் தேய்த்து மசாஜ் செய்தால் முழங்கால் வலி நிவாரணம் அடையும்.

இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது இது அனைத்தும் ஒரு சில வாரங்கள் முழங்கால் வலியில் கஷ்டப்படுபவர்களுக்கு ஏற்றதாகும் பல மாதங்களாக இது போன்ற பிரச்சினைகளில் இருந்தால் இதை முயற்சி செய்து விட்டு தீர்வு அடையாத சமயங்களில் மருத்துவரின் ஆலோசனை பெற்று முழங்கால் வலிக்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன