உறவுகளில் இருக்கும் உண்மைத்தன்மையை ஜோதிடத்தின் மூலமாக அறிய முடியுமா.?

  • by
can we find extra marital affairs in astrology

ஜோதிடத்தின் மூலமாக ஒருவரின் குணாதிசயத்தை முழுமையாக அறிய முடியும், இதனால் அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, திருமணத்திற்கு முன்பாக எப்படி இருப்பார், திருமணத்திற்கு பின்பாக எப்படி மாறுவது போன்ற அனைத்தையும் ஜோதிடத்தில் கணிக்க முடியும். இதற்காகவே இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆண் மற்றும் பெண் இருவரின் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதன் அடிப்படையிலேயே அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதையும் மீறி ஒரு சிலர் திருமணத்திற்குப் பின் தவறான உறவுகளில் ஈடுபடுகிறார்கள், அதை ஜோதிடத்தின் மூலமாக அறிந்து அவர்களை எப்படி மாற்றுவது என்பதை காணலாம்.

உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனையா? எங்கள் ஜோதிடரை அணுகி உங்களுக்கான சிறந்த தீர்வை பெறுங்கள்

திருமண பொருத்தம்

உலக அளவில் அதிக அளவிலான கலாசாரத்தைக் கொண்ட இந்தியாவில் திருமணம் என்று வந்துவிட்டால் ஜாதகம், ஜோதிடம், கடவுள் நம்பிக்கை போன்ற அனைத்தும் இணைந்துருக்கும். ஏராளமான பொருத்தங்களைப் பார்த்து செய்து வைத்த திருமணங்கள் கூட விவாகரத்தில் முடிந்து விடுகிறது. அனைத்திற்கும் காரணம் அந்தந்த காலகட்டத்தில் கோள்களினால் ஏற்படும் மாற்றங்களே. எனவே இதை முன்கூட்டியே அறிந்து உறவுகளில் இருக்கும் பிரச்சினைகளை நம்மால் தடுக்க முடியும்.

மேலும் படிக்க – மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்திற்கு உடனடி தீர்வு..!

தவறான உறவுகள்

திருமணத்திற்குப் பின்பு ஆண்களின் மனம் அவ்வப்போது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இதனால் வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் தவறான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். அச்சமயத்தில் கோள்களின் நிலை சரியாக இருந்தால் அவர்கள் அன்பை மட்டும் வெளிக்காட்டி அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். அதே சமயத்தில் கோள்களில் மாறுபாடுகள் ஏற்பட்டால் அவர்கள் தவறான உறவுகளில் முழுமையாக இறங்கி விடுகிறார்கள். இதே போல் ஒரு சில பெண்களும் தவறான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். மன அழுத்தத்தின் காரணமாக உறவுகளில் போதிய ஈடுபாடு இல்லாததால் இது போன்ற தவறான உறவுகள் உருவாகிறது, இதை தடுப்பதற்காக நாம் ஜோதிடத்தை பயன்படுத்தலாம்.

பிரச்சனைக்கான தீர்வு

உங்கள் கணவனோ அல்லது மனைவியோ உங்களிடம் ஈடுபாடு இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் தவறான உறவில் ஈடுபட்டிருக்கலாம். உடனே அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள், அதில் தவறான உறவுக்கான அறிகுறிகள் இருந்தால் ஒரு சில வழிகளை பின் தொடர்ந்து அந்த உறவை நம்மால் முறிக்க முடியும். பெண்கள் தன் கணவன் உறங்கும் இடத்தில் அவள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை அவரை சுற்றி தூவி விடவேண்டும். காலையில் அந்த குங்குமத்தை எடுத்து உங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – மோசமான வாழ்க்கைக்கு தீர்வளிக்கும் ஜோதிடம்..!

கற்பூர ஒளி

உறவுக்குள் தகாத உறவுகளின் எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காக இரவு தூங்குவதற்கு முன்பாக படுக்கை அறையில் கற்பூரத்தை ஏற்றி வையுங்கள். அந்த நறுமணம் ஆண், பெண் உறவில் காதல் உணர்வை அதிகப்படுத்தி, தகாத உறவு எண்ணத்தை முழுமையாக முறிக்கும். உங்கள் கணவன் அல்லது மனைவி தவறான உறவுகளை வைத்திருப்பவர்களின் பெயர் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் பெயரை தாமரை இதழில் எழுதி அதை எரித்து விடுங்கள். ஒரு சிலரின் வாழ்க்கையில் இது வேலை செய்யும்.

எனவே ஜோதிடத்தின் மூலமாக உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அது உண்மையா என்பதை ஒரு சில சோதனைகள் மூலமாக முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதுபோன்ற காரியங்களில் ஈடு படுங்கள். தேவையற்ற சந்தேகங்களால் உங்கள் உறவை காயப்படுத்த வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன