கொரோனா பாதிக்கும் சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கலாமா..!

  • by
can mother feed their child during this corona virus

பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகமாக தரக்கூடியது தாய்ப்பால் மட்டுமே. எனவே குழந்தை பிறந்தவுடன் ஒவ்வொரு தாய்மார்களும் குறைந்தது 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என அனைத்து சுகாதார துறையும் அறிவித்து வருகிறது. மிக எளிதில் ஜீரணமாகும் தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஏராளமான ஆரோக்கியத்தைத் தருகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை காணலாம்.

தாய்மார்களின் பயம்

கொரோனா வைரஸ் எல்லோரையும் வயது வரம்பில்லாமல் பாதிக்கிறது. இருந்தாலும் பிறந்த குழந்தை மற்றும் சிறியவர்களை இந்த வைரஸ் பெரிதாக பாதிக்கவில்லை. இருந்தும் இவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. இவர்கள் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நோயெதிர்ப்பு சக்தி தான், இவர்கள் சிறுவயதில் எடுத்துக்கொன்ட தாய்ப்பால் மூலமாகதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பயத்தோடு சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். எனவே ஒரு சில வழிகளை பின்தொடர்ந்து உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுங்கள்.

மேலும் படிக்க – தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது..!

சுகாதாரத்துறையின் அறிவுரை

சுகாதாரத்துறை கர்ப்பிணி பெண்களுக்கான ஆய்வுகளை ஏராளமாக நடத்தி வருகிறது. இதில் சராசரி மனிதர்களைவிட கொரோனா கர்ப்பிணி பெண்களை அதிகமாகத் தாக்குவதில்லை. இருந்தாலும் உடல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் தாக்கத்தினால் கர்ப்பிணிப் பெண்களின் சுவாசப் பகுதி பாதிக்கப்படலாம். இனிமே காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது சிறந்தது.

தாய்ப்பால் கொடுக்கலாம்

குழந்தைகளைப் பெற்ற தாய் விரும்பினால் அவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார துறை கூறியுள்ளது. இவர்கள் ஒரு சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும், அதனுடன் சேர்ந்து முகமூடியை அணிய வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். சாதாரண மக்களை விட கர்பினிபெண்கள் ஒருபடி மேலாக பாதுகாப்பாக நடந்து கொள்வதன் மூலமாக இந்த வைரஸ் தொற்று உங்கள் குழந்தையைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க – காவல்துறையினர்க்காக பிரத்தியேகமான மாஸ்க் மற்றும் உபகரணங்கள்..!

பிறந்த குழந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இருந்தும் அதை மருத்துவர்கள் உடனடியாக குணப்படுத்துகிறார்கள். அதேபோல் 10 மாத குழந்தை ஒன்று இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளது. எனவே தாய்மார்கள் இந்த தொற்று குழந்தையையும் பாதிக்கும் என்று பயங்களை கொள்ளாமல் மிகப் பாதுகாப்பான முறையில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன