உங்கள் உணவில் இருக்க வேண்டியவை ஆரோக்கியம்

  • by

ஊரடங்கு உத்தரவு காலத்தில் நாம் வாங்க வேண்டிய அடிப்படைப் பொருட்களை எப்பொழுதும் வாங்க தவறாதீர்கள். உணவுக்கு  இது அவசியமானது ஆகும். இந்த பொருட்கள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கச் செய்யும். இவைகள் வாங்கினால் மட்டும் போதாது தினமும் குடும்பத்தினர் அனைவரும் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். அதே போல்  இதனையெல்லாம் பட்ஜெட்க்குள் அடக்கி வாங்கும் சாமார்த்தியம் என்பது அவசியம் ஆகும். நீங்கள் இதனை உணர்ந்து செயல்படுத்துவது சிறப்பு தரும். 

ஊரடங்கு நேரத்தில்  நாம் செய்ய வேண்டியது  21 நாட்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, துவரைப்,பாசிப்பயிறு, அவரை போன்ற தானியங்கள், பருப்பு வகைகள் வாங்கி வைத்திருப்பீர்கள் அதெல்லாம் தெரிந் ஒன்றுதான் ஆனால் இக்காலகட்டத்தில் நம்முடைய  உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை வாங்குவதில் மும்முணைப்பாக இருக்க வேண்டும். 

நாம் சமைக்கும் எண்ணெய்கள் அனைத்தும்  செக்கில் அரைக்கப்பட்ட எண்ணெய்களாக இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் ஆகியவை அனைத்தும் செக்கில் அரைக்கப்பட்டதாக இருந்தால் உடலுக்கு ஆரோக்கிய அதிகரிக்கும். அதுவும் நல்லெண்ணெய் கொஞ்சம் தனியாக எடுத்து அதனை தினமும் காலை எழுந்ததும் வாயில் விட்டு வாய் கொப்பளித்து பல் விலக்கினால்   உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கச் செய்யலாம். பருப்பு வகைகள் நாட்டு பருப்பு வகைகள், காய்கறிகள் நாட்டு காய்களாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்கவும்: ஊரடங்கு உத்தரவு வந்தாச்சு உபயோகமாக செய்யுங்க

மூலிகை குழம்பு வையுங்க கிரேவியாக வைக்கலாம் துளசியை சட்னியாக சமைத்து சாப்பிடலாம். அதே போல் திருநீற்று பச்சிலை, ஓம வல்லி இலைகள் ஆகியவை அனைத்தும் உடலில் உள்ள கழிவுகள் போக்கும்.  காய்கறிகள் கத்தரிக்காய், பீட் ரூட், கேரட், அவரைக்காய், பீக்காங்காய், தண்டுக்கீரை, அரக்கீரை, முருங்ககீரை, வெந்தய கீரைகள் ஆகியவற்றை நாம் வீட்டில் செய்து கொடுக்க வேண்டியது அவசியம்  ஆகும். முருங்ககாய் மிகவும் அவசியமானது ஆகும். 

சமைக்கும் உணவில் நாட்டுகாய்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.  ஆரஞ்சு, மலை நெல்லி, மாதுளை போன்ற பழ வகைகள் உலர் திராட்சை, பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவைகளும் தினமும் ஒன்று அல்லது இரண்டு  சாப்பிட்டு வருதல் உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும். கடுக்காய், திரிபாலா பொடி, இஞ்சி டீ, சுக்கு டீ, மிளகு ரசம் உடலுக்கு எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். 

மேலும் படிக்க: கொரானாவை தொடர்ந்து ஹண்டா வைரஸ் தொடங்கியது!

வீட்டில் பாசிப்பயிறு சோதை, கம்பூ களி, ராகி கூழ், உழுந்தம்பருப்பு  கஞ்சி மற்றும் வெந்தய களி, கஞ்சி போன்ற ஆகாரம் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.  

இரவு 5 வெந்தயம் ஊர வைத்து காலை தினமும் அதனை சாப்பிட்டு வருதல் பல்வேறு  ஆரோக்கிய சக்தியை ஊக்குவிக்கும். அத்துடன் சப்ஜா விதைகள் அதான் திருநீற்று பச்சிலை விதை அதனை நாம் நீரில் ஊர வைத்து குடிக்க உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கச் செய்யலாம். உலர் திராட்சையை தண்ணீரில் ஊர வைத்து குடித்து வருவது மிகவும் நல்லது ஆகும். தயவு செய்து  பிராண்டு ரக நூடுல்ஸ் வாங்குவதை நிறுத்துங்கள் அவை உடலுக்கு கேடு விளைவிக்கும். இடியாப்பம் அவித்து சாப்பிடலாம். புட்டு அவித்து சாப்பிடலாம். கோதுமை சப்பாத்தி சாப்பிடலாம். கொண்டை கடலை குழம்பு ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லது. பொறி கிடைத்தால் அதில் நிலக்கடலை, பொட்டுக்கடலை கலந்து  வெங்காயம் கலந்து சாப்பிட ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். 

வெங்காயம் உணவில் பயன்படுத்துங்கள் அது தாயுக்கு நிகராக நம்மை காக்கும். ஆம் சின்ன வெங்காயம் டீபி, காலாரா, பாம்பு விசம் தேள்  கொட்டியது என அனைத்திற்கு ஆருயிர் மருந்து அது ஒன்றே ஆகும். 

மேலும் படிக்க:கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன