உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் எளிய மூச்சுப் பயிற்சி.!

  • by
breathing exercise to reduce your mental stress

“நூறு வருடம் வாழ்பவனை போல் வேலை செய் நாளையே இறந்து விடுபவனை  போல் சிந்தனை செய்”

மனித உடலானது எவ்வளவு சிறப்பானது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த அவசர வாழ்வில் பணத்தை தேடி ஓடி அலையும் ஒவ்வொருவரும் மன அமைதி இன்றி ஒருவித மன அழுத்தத்துடன் இருக்கின்றனர்.  இதனால் நம் உடல் பல்வேறு பிரச்சனைகளுக்கு உட்படுகிறது. இதை மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்வதைவிட சில எளிய மூச்சு பயிற்சியின் மூலம் சரி செய்யலாம். 

ஆரோக்கியம், இளமை என்ற இரண்டு பொருட்களை இழந்த பிறகுதான் அதன் மதிப்பை உணர்கிறோம். இவை இரண்டையும் நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள தினமொரு ஆசனம் செய்தால் போதும்.

மேலும் படிக்க – தை அமாவாசையின் சிறப்புகள் மற்றும் அந்நாளில் என்னவெல்லாம் செய்யலாம்.!

உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அமைதிக்கான மூச்சுப்பயிற்சி

இப்பயிற்சியை செய்ய தொடங்குவதற்கு முன் பத்மாசனத்தில் அமர்ந்து வலது பக்க வயிற்றில் வலது உள்ளங்கையையும், இடது பக்க வயிற்றில் இடது உள்ளங்கையை யும் இயல்பாக வைத்து நன்றாக உள்மூச்சு வெளி மூச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் அசைவை கவனிக்கவும். உள் காற்று செல்லும் சமயம் வயிறு விரிந்து சுருங்குகிறதா என கவனிக்கவும். அதேபோல் வெளியிலும் கவனம் செலுத்தவும்.

பின் கைகளை இடுப்பின் பக்கவாட்டில் வைத்து உள்மூச்சு ,வெளிமூச்சு ஓட்டத்தில் வயிறு நெஞ்சு பகுதிகள் அசைவதை எளிதாக உணரமுடியும். ஆரம்பநிலையில் இதை சிலரால் உணர இயலாது. அவ்வாறு அறிய முடியாதவர்கள் குப்புறப்படுத்து, மல்லாக்க படுத்து, ஒருக்களித்துப் படுத்து சுவாச நிலைகளை உணர்ந்து வயிறு நெஞ்சில் அசைவை அறியலாம். இந்த மூச்சுப் பயிற்சியானது மனதுடன் தொடர்புடையது.

இதை செய்யும் பொழுது மனதினை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் வரும் மன அமைதியும் ஏற்படும். 

தலையில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் கபாலபதி மூச்சுப்பயிற்சி

இது தலை மற்றும் கபாலத்தை சுத்தப்படுத்தும் பயிற்சி. பத்மாசன முறையில் அமர்ந்து வாயை மூடி விட்டு, இரு பக்கமும் காற்றை வேகமாக வெளி விடவேண்டும்.

வெளி மூச்சை மட்டும் வேகமாக தொடர்ந்து 10 முதல் 20 வரை சுவாசிக்கலாம். பின்பு இயல்பான சுவாசத்திற்கு மாறலாம்.

இவ்வாறு செய்யும் போது தலையில் சேரும் தேவையில்லாத கெட்ட நீர், சளி, மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு தலைவலி இவைகள் சரியாகும்.

கபத்துடன் தொடர்புடைய இந்த  மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்தால் கெட்ட நீர் வெளியேறுவது உடன் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது மூச்சை வேகமாக வெளியேற்றும் பயிற்சியாகும்.

மேலும் படிக்க – அரோகரா முருக கோசம் வினைகளை விளக்கும் தைபூசம்

களைப்பு சோர்வு ஏற்படும் பொழுது செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

இது மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் பயிற்சியாகும். இந்த பயிற்சி பிராண சக்தியை உயர்த்தும் பயிற்சி.

களைப்பு மற்றும் சோர்வு ஏற்படும் பொழுது நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய இந்த பயிற்சி உதவும். காற்றை மிக ஆழமாக நீளமாக உள்ளிழுத்து வேகமாக மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் மூச்சை வெளிவிட வேண்டும்.

இதைப்போல் 5 முதல் 10 முறை செய்தால் போதும் நமது களைப்பு சோர்வு விலகி புது தெம்பு ஆற்றல் கிடைக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பிராண சக்தி கூடும்.

சுவாசத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி

சரியான இடத்தை தேர்ந்தெடுத்து பின் மேல் இயல்பான நிலையில் அமர்ந்தும் படுத்தும் செய்யலாம். மூக்கடைப்பு இருந்தால் அதை சுத்தம் செய்து விட்டு பின் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

நிலை 1 

மூச்சுகளின் ஓட்டத்தை இயல்பாக கவனிக்கவும். வெளியே செல்லும் காற்றையும் உள்வாங்கும் காற்றையும் கவனிக்கும் போது மனம் அமைதி பெறும்.

நிலை 2 

காற்று செல்லும் சமயத்தில் ஒன்று என்றும் வெளி காற்று செல்லும் சமயத்தில் இரண்டு என்றும் எண்ணலாம். மனம் மேலும் மூச்சுடன் இணைய ஆரம்பிக்கும்.

நிலை 3 

மூச்சு ஓட்டம் வலது நாடியில் நடக்கிறதா? அல்லது இடது நாடியில் நடக்கிறதா? என்று கவனிக்கவேண்டும். மனம் ஒருங்கிணையும் சமநிலை படவேண்டும் .

நிலை 4 

உள் மூச்சில் வயிறு வெளிப்புறம் விரியும்,வெளி மூச்சில் வயிறு செல்லும் நிலையை கவனிக்கவும்.

நிலை 5 

உள் மூச்சில் தோள்பட்டைகள் மேலே உயரும் வெளி மூச்சில் கீழே இறங்குவது கவனிக்கவும்.

நிலை 6 

உள் மூச்சு காற்று மேல் உதடுகளில் உராய்ந்து செல்வதால் குளிர்ச்சியாக இருக்கும். வெளி மூச்சு காற்று கீழ் உதடுகளில் உராய்ந்து செல்வதால் சூடாக இருக்கும். இந்த இரு நிலைகளையும் கவனிக்கவும். இவ்வாறு இணைந்தால நுரையீரலில் காற்று நிரப்புவது இயல்பாக உணரலாம்.

உள்மூச்சு வெளிமூச்சு நீளத்தையும் உணர ஆரம்பித்தால் சுவாசம் இன்னும் இயல்பாக அமையும்.

மேலும் படிக்க – சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

நிலை 7

உள் சென்ற மூச்சு உடனே வெளியேறுவதில்லை. வெளி மூச்சிருக்கும் உள் மூச்சிற்க்கும் இடையில் உள்ள நேரமும் சம அளவில் இருக்கிறதா என்பதை நுட்பமாக கவனித்து கொள்வோம்.

இந்த மூச்சு பயிற்சிகளை மேற்கொள்ள அதிக நேரம் கூட தேவைப்படாது. தினமும் காலையில் ஒரு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள ஒதுக்கினாலே போதும் நாம் மருத்துவரிடம் செல்லாமல் நம் மனதையும உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன