ஆண், பெண் நட்புறவில் இது அவசியமுங்க

  • by

ஆண் பெண் நட்பு உறவு என்பது எப்பொழுதும் சாத்தியமான ஒன்றாகும். அதனை நாம் எவ்வாறு கொண்டு செல்கின்றோம் என்பதில்தான் உள்ளது. நமது சமுதாயத்தில் மோலோங்கியிருக்கும் எண்ணங்களில் மாற்றம் வர வேண்டும். ஆண் பெண் இருவரும் முதலில் கண்களை பார்த்து ஒழிவு மறைவின்றி சமமாக பேச சிறிய வயது முதல் பள்ளி, சமுதாயம், ஊடகத்தில் கற்றுக் கொடுக்கபட வேண்டும். மகாபாரத காலத்திலே கண்ணன் திரௌபதி நட்பில்தான் தொடங்கியது. இதை நமது சமுதாய மக்களிடையே விதைக்க வேண்டும்.

பதின் பருவம்:

பதின்பருவம் வரும் ஆணும் பெண்ணும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வீடு, பள்ளி, சமுதாயம், ஊடகங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் . எதிர் பாலினத்தவர் ஈர்ப்பு என்பது என்ன என்பது தெரியப்படுத்த வேண்டும். மனிதம் என்பதில் ஒன்றுபட்டு இருத்தலை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் படிக்க – குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்லும் இடங்கள்..!

ஆணின் மன எண்ணம்

ஒரு சில ஆண்கள் தங்களுக்கு வந்திருப்பது ஒரு அற்புதமான உணர்வு என்று தவறாக நினைத்துக் கொண்டு தன் தோழிகளுடன் தவறாக நடந்து கொள்கிறார்கள். இது மன ரீதியாக ஒரு பெண்ணை பாதிப்படைய செய்கிறது. எனவே ஒரு ஆணுக்கு தனது தோழியுடன் காதல் உணர்வு ஏற்பட்டால் அதை சரியான முறையில் வெளிக்காட்டுவது நல்லது. இல்லையனில் உங்கள் நட்பு பெரிய அளவில் பாதிக்கும்.

காதல் உணர்வு:

ஒரு ஆண் தனது தோழியுடன் காதல் ஏற்பட்டு விட்டால் அவர்களிடம் தங்கள் உணர்வை சொல்வது சரியான முடிவு. அப்படி அவர்கள் அதை மறுத்து நண்பர்களாக இருக்கலாம் என்று சொன்னார்கள் என்றால் இதுதான் உலகிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம். ஏனென்றால், ஒரு முறை ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல் காதல் வந்து விட்டால், அந்த உணர்வு மட்டுமே கடைசி வரை இருக்கும். அதை தவிர்த்து மீண்டும் அந்த பெண்ணை நண்பராக நினைப்பது என்பது இயலாத காரியம் இருந்தாலும் ஒரு ஆண் எல்லாவற்றையும் மறந்து நண்பனாக தான் உன்னை பார்க்கிறேன் என்றால் உடனே நம்பி விடாதீர்கள் அவரின் கண்ணோட்டத்தில் எப்போதும் உங்களை ஒரு காதலியாகவே பார்ப்பார்கள்.

ஒரு பெண், ஆணிடம் பாதுகாப்பு, சுகந்திரம், ஆண்மை மற்றும் நேர்மறை எண்ணம் இதை தான் எதிர் பார்க்கிறாள். இது அனைத்தும் ஒரு ஆணுக்கு இருந்தால் அவரை காதலிக்கலாம் என்ற முடிவை உடனே எடுக்க மாட்டார்கள், அந்த ஆண் இவர் மீது காதல் வயப்பட்டு தன் காதலை வெளியில் சொல்லும் போது சில நாட்கள் சிந்தித்து அவர்களின் பதிலை சொல்வார்கள். ஆனால் இவர்கள் தன் காதலை முதலில் அந்த ஆண் நண்பர்களிடம் தெரியப்படுத்துவதை மறுத்து விட்டால் உடனே தங்கள் மனதை மாற்றிக் கொண்டு அந்த ஆணை நன்பர்களாக பார்ப்பார்கள். இதை செய்வது இவர்களுக்கு மிக எளிமையாகும்.

பழமை வாய்ந்த எண்னங்கள்:

பழங்காலங்களில் ஆண், பெண் இருவரும் ஒன்றாக சேர்வதை பெரியவர்கள் பெரிதாக தவிர்த்து வந்தார்கள். அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்போது ஆண் பெண் இருவரும் ஒருபோதும் நண்பர்களாக இருக்க முடியாது. இது உண்மை, இருந்தாலும் இது தவறான செயலாகும். ஒரு ஆண் ஒரு பெண் என்றால் என்ன என்பதை உணர வேண்டும் இதற்கான வாய்ப்பை நாம் தர வேண்டும் வேண்டும் இல்லையெனில் அவர்கள் இதற்கான வாய்ப்பை உண்டாக்கித் மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கி விடுவார்கள். எப்போதும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் அழகு மேல் ஆர்வம் அதிகமாக இருக்கும், அதுவே ஒரு பெண்ணுக்கு ஆண்கள் செய்யும் செயல்கள் மீது ஆர்வமாக அதிகமாக இருக்கும். இதுதான் இவர்களுக்குரிய இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம். ஒரு ஆணின் எண்ணம் முழுக்க ஒரு பெண்ணின் உடல் சார்ந்தவையாகவே இருக்கும். அதுவே, ஒரு பெண்ணின் எண்ணங்கள் ஒரு ஆணின் செயல் சார்ந்தவையாக இருக்கும். இதை ஆணை விட ஒரு பெண்தான் முழுமையாக புரிந்திருக்க வேண்டும். எப்போதும் அவர்கள் உள்ளுணர்வு ஏதாவது ஆபத்துகளை சொல்லிக்கொண்டே இருக்கும். ஆனால் அவர்கள் அதை மதிக்காமல் ஒரு ஆணை முழுமையாக நம்பும் போது தான் அவர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

மேலும் படிக்க – காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்புறவாக இருப்பது என்பது இக்காலங்களில் இயலாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால், ஒரு பெண்ணிற்கு மிக எளிதில் பொறாமை போன்ற குணங்கள் ஏற்படுகிறது. தன்னை விட தன் தோழி அழகாக இருக்கிறாள் அல்லது தான் அணியும் ஆடை யை விட அவளின் ஆடை விலை உயர்ந்ததாக இருக்கிறது என்ற போட்டிகளிலேயே இவர்களில் உறவு பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, இதைத் தவிர்த்து முடிந்த வரை ஏதேனும் ஒரு சிறந்த தோழியை வைத்திருப்பது நல்லது. இதன் மூலமாக நீங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை தடுக்க முடியும்.

நட்பில் ஆண் பெண் பேதமில்லை:

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு பெண் தோழிகளை விட ஆண் தோழர்களே அதிகம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் தோழிகளின் கணக்கை எண்ணிப் பாருங்கள். எல்லா பெற்றோர்களும் இதை நம்புவதில்லை, அதற்காக இவர்கள் தனக்கென ஒரு தோழிகளை வைத்துக் கொள்கிறார்கள். நமக்கு என்ன பிடிக்குமோ எந்த இடத்தில் சந்தோஷம் அதிகம் கிடைக்குமோ அதை நோக்கியே நாம் செல்கிறோம். என எதுவாக இருந்தாலும் முதலில் அந்த செயலின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து செய்வது நல்லது.

ஆண் பெண் நட்புறவை தெளிவாக அறிந்து அதன் எதிர்காலம் என்னவென்று புரிந்து கொள்வது ஒரு ஆணை விட பெண்ணுக்கு நல்லது. ஏனென்றால், பாதிப்புகள் எப்போதும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கும். ஒரு ஆண் எந்த ஒரு செயலாக இருந்தாலும் மிக எளிதில் கடந்து சென்று விடுவான் ஆனால் ஒரு பெண்ணுக்கு அது உடல் மற்றும் மன ரீதியாக பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவே தன் தோழன் என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தராமல் முடிந்தவரை தங்களுக்கென ஒரு கட்டுப்பாடுகளை விதித்து அதற்குள் உங்கள் ஆண் நண்பர்களை வைத்து கொள்வது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன