நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

  • by

கொரோனா எனப்படும் கோவிட்_19 என்னும் தீநுண்மி இப்போது உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காற்றில் நோய் பரப்பும் கிருமிகள் எளிதாக மனிதர்களை தாக்கிவிடும். ஆகவே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தினால் வைரஸ், நோய் உண்டாக்கும் பாக்டீரியா, போன்ற தீநுண்மிகளை போராடி மனித உடலை பாதுகாக்கும். இதற்கு நாம் தனிக்கவனம் ஏதும் செலுத்தவேண்டியதில்லை, நாம் உண்ணும் உணவில் சில மாறுதல்களை கொண்டு வந்தாலே போதுமானது.

உணவே மருந்து, மருந்தே உணவு :

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் குறைந்தது 40 நாட்களுக்காவது நம் உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்து இருப்பதை நாம் உறுதி செய்து கொண்டால் நன்மை கிடைக்கும்.

சிட்ரஸ் மிகுந்துள்ள பழங்கள் :

  • எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு சுவையுள்ள பழங்களை தினமும் சாப்பிடுவது அவசியம். இதில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டாலும் போதும். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் C ரத்தத்தில் உள்ள WBC யை அதிகரிக்கும்.

தண்ணீர் :

  • காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் குடித்து அந்த நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது. தண்ணீரை அதிகம் குடித்தால் அதிக பலன் கிடைக்கும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நீர் அவசியம் மேலும் வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 4-5 லிட்டர் நீர் அருந்துவது நல்லது.

கிரீன் டீ :

  • கட்டாயம் டீ குடித்தே ஆகவேண்டும் என்பவர்கள் கிரீன் டீயை குடிப்பது சிறந்தது. மேலும் இதனால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. கிரீன் டீ ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாகவும் வைத்திருக்கிறது. உடலுக்கு நம்மை அளிக்கக்கூடியது. உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும்.

பால் பொருட்கள் :

  • தினமும் அதிகபட்சமாக 500 மி.லி பாலை ஒரு நபர் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு பால் குடிக்க பிடிக்காது, அவர்கள் நெய், மோர், தயிர் என பால்சார் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இந்த பால் மற்றும் பால் பொருட்களில் லாக்டோ பாக்டீரியா மற்றும் பிற நன்மை செய்யும் பாக்டீரியாக்களை கொண்டுள்ளதால் உடலுக்கு நன்மை.

பாதாம் :

  • பாதாம், பாதாமி, பேரீட்ச்சை, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் ஜிங்க், மெக்னீசியம் மற்றும் ஒமேகா-3 சத்துகள் நிறைந்துள்ளதால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.வைட்டமின் C -க்கு அடுத்து வைட்டமின் E உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்து. இது பாதாமில் அதிகம் உள்ளதால் தினமும் 5-10 பாதாம் சாப்பிடலாம்.

அசைவு உணவுகள் :

  • மேற்சொன்ன சைவ உணவுகளை சாப்பிட விரும்பாதோர் ஆடு, கோழி, மீன் போன்றவற்றைப் சாப்பிடலாம். அசைவ உணவுகளை ஒருவர் 100 கிராம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒருவரின் கைப்பிடி அளவு மட்டும் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். ஏரி மீன்களை விடக் கொழுத்த கடல் மீன்களைச் சாப்பிடவேண்டும்.
  • குறிப்பாக நாட்டு புறங்களில் வளரும் ஆடு, கோழி இனங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

தற்போது மாறிவரும் உணவு முறைகளில் ஊட்டச்சத்து என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான போஷாக்கு கிடைக்கும். அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி நோயால் பாதிக்கப்படுவது குறையும். பெரும்பாலும் பழம், காய்கறிகள், கீரை வகைகள், பாதாம் போன்ற கொட்டை வகைகள், முளைகட்டிய தானியங்கள், தேவைக்கேற்ப நீர் போன்ற உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நல்ல முன்னேற்றத்தை உங்களால் காண இயலும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முன்னோர் சொல்லிற்கேற்ப நோயில்லாமல் நீண்ட நாள் வாழ சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியம்.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பலரும் இப்போது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஊட்டசத்து சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை பெறுவதற்கு அதிகமாக ஆன்லைனில் தேடி வருகின்றனர். இப்போது பல ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள் என பலரும் ஆன்லைனில் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில் நந்தினி, ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மருத்துவ உளவியலாளர் அவரின் ஆலோசனைகள் மிகவும் பிரபல்யம் உங்களுக்கு ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் பிரச்சனைகள் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதேனும் இருப்பினும் நீங்கள் நந்தினி அவர்களை அணுகி உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.


உணவியல் மற்றும் உளவியல் சந்தேகங்களுக்கு நந்தினி அவர்களை தொடர்புகொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன