தமிழர்கள் மரத்திடம் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள்..!

  • by
bonding between trees and ancient tamil people

அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்கள் அவர்கள் மரத்திடம் மிக நெருக்கமாக இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு நன்மையை தரும் என்பதை உணர்ந்து அதில் இருக்கும் நன்மைகளை முழுமையாக பெரும் தமிழர்கள், அதை மருத்துவத்திற்கும் பயன்படுத்திகிறார்கள். பல நன்மைகளைத் தரும் மரங்களை மற்றும் தமிழர்களின் வளர்ச்சியையும் காணலாம்.

பனைமரம்

தமிழர்களின் அடையாளமாக இருப்பது பனைமரம். இதிலிருந்து நுங்கு, பனங்காய் மற்றும் பனங்கல்லு போன்ற அனைத்தும் கிடைக்கின்றன. இதைத் தவிர்த்து இந்த மரத்தில் இருக்கும் பனை ஓலைகளையும் அக்காலத் தமிழர்கள் வீடு, குடிசை கட்டுவதற்காக பயன்படுத்தினார்கள். நீர்நிலை அதிகமாக இருக்கும் இடத்தில் வளரும் இந்த பனை மரம், வளர்வதற்கு நீர் எதுவும் தேவை இல்லை. பூமியில் இருக்கும் நீரை உறிஞ்சி வளர்வதினால் இந்த பனை மரம் எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும்.

மேலும் படிக்க – மூலீகை சாம்பிராணி முக்கால வினையை போக்கும்

தென்னை மரம்

கேரளா மற்றும் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வளரும் தென்னை மரம் நமக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. தென்னை மரத்தில் இருந்து இளநீர், தேங்காய் மற்றும் பதநீர் போன்ற அனைத்தும் கிடைக்கின்றன. இதை தவிர்த்து தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களும் நமக்கு பல நன்மைகளை தருகிறது. தென்னை ஓலைகளை காயவைத்து அதில் கைவினைப் பொருட்களையும் அக்காலத் தமிழர்கள் செய்து வந்தார்கள்.

ஆலமரம்

தமிழர்களின் மிக முக்கியமான மரமாக கருதப்படுவது இந்த ஆலமரம். ஊருக்கு ஒரு ஆலமரம் நிச்சயம் இருக்கும் அதில் அந்த ஊரைச் சுற்றி இருக்கும் அனைத்து குருவிகளும், பறவைகளும் வாழும். எனவே இயற்கையை பாதுகாக்க ஆல மரத்தை வளர்த்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் ஆலமரத்தின் அடியில் இளைப்பாறுதல் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கும் பயன்படுத்தினார்கள்.

வாழை மரம்

தன்னலமற்ற ஒரு மரம்தான் வாழைமரம். இதில் இருந்து நமக்கு ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. அக்காலத் தமிழர்களில் உணவு அருந்துவதற்காக வாழை இலையே பயன்படுத்தினார்கள். அதை தவிர்த்து வாழைப்பழம், வாழைக்காய் மற்றும் வாழைப்பூவிலிருந்து இலைகள் வரை எல்லாவற்றையும் தமிழர்கள் பயன்படுத்தி வந்தார்கள். ஒருமுறை பயன்படுத்திய வாழை மரத்தை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால் மனிதர்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒரு மரமாகவே வாழை மரம் இருக்கிறது.

மேலும் படிக்க – ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படும் உப்பின் பயன்கள்..!

தமிழர்களின் கடமை

அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்கள் எல்லாவித மரங்களுக்கும் சரியான மரியாதை அளித்து அதை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து வருகிறார்கள். வாழை மரம், கொய்யா மரம், மா மரம், எலுமிச்சை மரம், மாதுளை மரம் என எல்லாவற்றையும் அவர்கள் வளர்த்து பராமரிக்கிறார்கள். இதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை பயன்படுத்தி தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

நம் பாரம்பரியத்தை பின்தொடர்ந்து அதற்கேற்ப வாழ்ந்து எந்த ஒரு நோய்த்தொற்றுகள் அண்டாமல் நாம் நம்மை பாதுகாக்க வேண்டும். எனவே வெளிநாட்டு பழக்க வழக்கங்களைத் துறந்து தமிழ் மக்கள் பழக்கங்களை  பின்பற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன