போகியில் காப்பூ கட்டி பாரம்பரியத்தை கொண்டாடலாம்!

  • by

மார்கழி மாதத்தின் கடைசி நாளில் நம் மனதிலும் நம் உடலில் உள்ள கழிவுகளை போக்கி தூய்மையுடன் வாழ கொண்டாடும் பண்டிகையே தான் போகி என்போம். தமிழர் பண்பாட்டின் பாரம்பரியமிக்க உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தொடங்கி வைப்பது இந்த போகி பண்டிகை ஆகும்.

போகி ஆயிரம் வருடங்களாக பின்பற்றப்பட்டு வரும் இந்த கலாச்சாரத்தை நாம் நம் சந்ததியினருக்கு சரியாக எடுத்துக் கூறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

போகி என்பது இதுதான்:

போகி என்றாலே வீட்டில் உள்ள பழைய பொருட்களை அல்லது பயன்படுத்தாத பொருளை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்பது அவர்கள் மனதில் பதித்த போகி கொண்டாட்டம்.

முன்னோர்கள் வழக்கம்:

நம் முன்னோர்கள் போகிப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை பழந்தமிழர்கள் பருவ நிலையின் அடிப்படையில் வருடத்தில் இரண்டாகப் பிரித்தனர் பருவநிலை காரணமாக ஏற்படும் நோய்த் தொற்றைப் போக்க மார்கழி மாதத்தின் கடைசி நாளில வீட்டிலுள்ள வீட்டிலுள்ள பல நாளாக தேங்கி இருக்கும். கழிவுப் பொருட்களை அகற்றும் அகற்றி நன்மை தரும் மூலிகைகளை வீட்டின் முற்றத்தில் கட்டி அந்த அந்த மூலிகை காற்றை சுவாசித்து உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் அடுத்து வரவிருக்கும்.

மேலும் படிக்க – ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை..!

போகி காப்பு:

அனைத்து பண்டிகைகளையும் நோயின்றி சிறப்பாக கொண்டாட அந்த மூலிகைகள் உதவியாக இருக்கும் இதற்காகத்தான் நம் முன்னோர்கள் போகியன்று வீட்டினை சுத்தம் செய்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப மூலிகைகளை வாசலில காப்பு கட்டி வந்தனர்.

இந்த காப்பு கட்டுவதால் வரும் பலன்கள் நமது உடலின் அகத்தை தூய்மை செய்ய பயன்படும் கிருமி நாசினியாக விளங்கும் வேம்பு, ரத்தத்தை சுத்தம் செய்யும் ஆவராம் பூ, சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் பூவாரை என்ற பீழைப்பூ இவை மூன்றும் தான் காப்பு கட்டும் போது பயன்படுகிறது.

ஆரோக்கிய வாழ்வு:

 நம் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு செயலுக்குப் பின்னால் ஆரோக்கிய வாழ்விற்கானஆரோக்கிய வாழ்விற்கான அடித்தளம் அமைந்துள்ளது வேம்பின் பயன் நாம் அனைவரும் அறிந்ததே அதை நாம் அன்றாடம் பயன்படுத்த வேண்டும்.

நம் வீடுகளில் வீட்டு உறுப்பினர் போல வேம்பினை வளர்த்து வருகிறோம் காப்பு கட்ட பயன்படும் ஆவாரம் பூ மற்றும் பூளைப்பூ நாம் அறியாத செய்திகள் பல உள்ளன ஆவாரம்பூ உண்டோர் சாகாவரம் பெற்றவர் என்பது ஒரு பழமொழி பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஆவாரம்பூவை நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் உடல் உடல் வெப்பம குறிக்கப்படுகிறது சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆவாரம்பூவை தினம் தேநீர் போல் அருந்தினால் உடலில் சர்க்கரை கட்டுக்குள் வரும் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தைப் போக்கும் இந்த ஆவாரம் பூவை பொடி செய்து நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

போகியில் கோலம் என்னும் பீளைப் பூ:

 அடுத்ததாக பீளைப் பூ இந்தப் பூவை போகியன்று மட்டுமல்ல எப்போதுமே  வீட்டின் கூரையில் வைத்திருப்பார்களாம் அதற்கு காரணம் கல்லைக்கூட  கரைக்கும் வித்தை கொண்டதாம் இந்த பூ பழங்காலங்களில் நாம் இப்போது உன்னம்  உணவைப் போல் சுகாதாரமானதாக இருக்காது அவர்கள் பயன்படுத்திய கம்பு கேழ்வரகு திணை  வரகு சாமை போன்ற தானியங்களில் இருக்கும் கற்கள் உடலில் சென்று விடுமாம் அதற்காக  அவர்கள் எந்த ஒரு மருந்தையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் வீட்டின் கூரையில் வைத்திருக்கும்  பீளை பூ வை பூவே தான் வாயில் போட்டுக் கொள்வார்கள் இதனால் அவர்கள் உண்ட உணவில் உள்ள கற்கள் கூட  கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.


  இவ்வளவு நன்மைகள் கொண்ட  இந்த மூலிகைகளை நாம் வருடம்  ஒருநாள் மட்டுமே பயன்படுத்துகிறோம் அதுவும்  என்பதற்காக அல்ல வாசலில் காப்பு கட்டுவதற்காக மட்டுமே இந்த பயன்களை நாம் முழுதும் பெறுவதற்காகவே நம் முன்னோர்கள் இந்த காப்பு கட்டும் சம்பர் தாயத்தை உண்டாக்கி இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் நீண்ட ஆயுளுடன் நோயின்றி வாழ்வதற்கும் இது ஒரு அருமருந்தாக உள்ளது தை மாதம் முதல் நாள் வீட்டில் காப்பு கட்டினார்கள் காப்பு கட்ட பயன்படும் மூலிகைகள் கிருமி நாசினியாக உட்சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரக வழியாக கழிவுகளை வெளியேற்ற இந்த மூன்று மூலிகைகளை பயன்படுத்தினர்கள்.

மேலும் படிக்க – அதிகமான பணம் சம்பாதிக்க இதை பின்தொடருங்கள்..!

நம் முன்னோர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அவ்வளவு சிறப்புமிக்க தை மாதத்தை வரவேற்பதற்காக உடலிலும் மனதிலும் வீட்டிலும் உள்ள கழிவுகளை ” போகியில் போக்கி ” இந்த சிறப்பான போகி பண்டிகையை கொண்டாடுவோம்.

போகியன்று நாட்டு காய்கறிகளை வைத்து சமையல் செய்வது வழக்கமாகவுள்ளது. அவரைக்காய், பூசனிக்காய், விதைகள் நவ தானியங்கள் பயன்படுத்தி அதனை சாம்பார், காய் கூட்டாக வைத்து , புதிதாக சமைத்து சாதத்தில் நெய் ஊற்றி, வாழைப்பழம் வைத்து, கரும்பு சர்க்கரை வைத்து சாப்பிட்டபின் தானியங்கள் சாம்பார் வைத்து சாப்பிடுவது வழக்கமாகவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன