ஆரம்ப நிலையில் இருக்கும் பாடிபில்டருக்கான உதவிக் குறிப்புகள்..!

  • by
bodybuilding tips to be followed by beginners

பள்ளிப் பருவத்தை முடித்தவுடனே எல்லா இளைஞர்களுக்குல் பாடிபில்டராக வேண்டிய கனவு முளைக்கிறது. இதனால் அவசர அவசரமாக தவறான உடற்பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து தங்கள் உடல் கட்டுமானத்தை தவறான வழியில் வழிபடுகிறார்கள் இதனால் உங்கள் உடல் நிலை கோளாறுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் கடைசி வரை உங்களால் சிறந்த பாடிபில்டராக முடியாமல் போய்விடுகிறது. எனவே ஆரம்ப நிலையில் இருக்கும் இதுபோன்ற பாடி பில்டருக்கான சிறந்த அறிவுரைகளை இந்த பதிவில் காணலாம்.

சிறந்த உபகரணங்கள்

பாடிபில்டிங்கை செய்வதற்காக நாம் முதன் முதலில் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்கிறோம், ஆனால் அங்கு விலை உயர்ந்த வெளிநாட்டு பொருட்களை வைத்திருப்பார்கள். அதன் மூலமாக நீங்கள் உடல் வளைவுகளில் மேற்கொள்ள நினைத்தாலும் அது நம்மை வேறு பாதைக்கு அழைத்துச் செல்லும். எண்ணவே சாதாரண முறையில் எடைகளை தூக்கி பயிற்சி பெற்றால் மட்டுமே நம்மால் சிறந்த பாடிபில்டராக மாற முடியும்.

எல்லாவற்றையும் முயற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற உடன் நாம் ஒரு சில பகுதிகளில் மட்டும் பெரிதாக்கவும் அல்லது வலிமையாகவும் முயற்சி செய்வோம். ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் தோள்பட்டை, மார்பகம், தோல், வயிறு, கைகள் போன்ற அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாக முக்கியத்துவம் அளித்து சிறிய உடற்பயிற்சியை செய்யுங்கள்.

மேலும் படிக்க – பாடிபில்டர்களுக்கு உகந்த உணவுகள்..!

எல்லாவற்றையும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்

தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்கிறோம் என்ற எண்ணத்தை தவிருங்கள், நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கான சரியான நேரத்தை பின்தொடர வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் புரதங்கள் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக உடற்பயிற்சி எண்ணிக்கைகளை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த முறை செய்யும்போது சரிசமமாக எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.

ஆரம்பத்தில் ஓய்வு எடுங்கள்

நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கும் போது தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இதற்காக நீங்கள் நீண்ட நாள் பயிற்சி செய்து விட்டு ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் உடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்து உங்களை முழுமையாக தயாராக வைத்துக் கொள்ளும். அதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக மிக விரைவில் உங்கள் உடலில் மாற்றங்களை காணலாம்.

ஒரு சில பகுதிகளுக்கு முக்கியத்துவம் தாருங்கள்

மேலே ஆரம்ப நிலையில் எல்லா பகுதிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தோம். அதேபோல் ஒரு சில நாட்களுக்குப் பிறகு நாம் மார்பகம் மற்றும் தொடைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அடுத்த நாள் தோள்பட்டை மற்றும் வயிறு பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதை சூழர்ச்சி முறையில் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட சில பகுதிகள் மிகவும் வலுவாகும்.

மேலும் படிக்க – ஊரடங்கின் பொழுது உடல் பருமன் பிரச்சினையை தடுப்பது எப்படி..!

உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஒரு தடகள போட்டியாலரைப்போல் நினைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக நம்முடைய மனம் வலிமை பெற்று உடல் வலிமையும் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன