பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனுக்கு நடந்த விபரீதம்..!

  • by
bigg boss meera mithun facing a big controversy

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்ற மீரா மிதுன் ஏராளமான புகழையும் மற்றும் விமர்சனங்களைப் பெற்றார்.

மீரா மிதுன் சர்ச்சை

பிக்பாஸ் போட்டிக்குள் நுழைவதற்கு முன்பாகவே மீராமிதுன் ஏராளமான பேரை ஏமாற்றி உள்ளதாக அவர் மேல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த இவருக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் நிகழ்ச்சி தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் அந்த இல்லத்தில் நுழைந்தார்.

மேலும் படிக்க – ராஜமாதா ரம்யா கிருஷ்ணாவின் வாழ்க்கை..!

தோன்றுவதை பேசுபவர்

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் எது சரி எது தவறு என்று எதுவும் தெரியாமல் தன் மனதில் தோன்றுவதை பேசும் குணத்தைக் கொண்டவர் தான் மீரா மிதுன். இதுபோல்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனுடன் நடந்த ஒரு சம்பவத்தை பொய்யாக சித்தரித்தார், ஆனால் அதன் காணொளியை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் பார்த்தவுடன் உண்மை என்னவென்று அவருக்குத் தெரிந்தது. இருந்தாலும் தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் தான் சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி வந்தார். எனவே இத்தகைய குணம் கொண்ட மீராமிதுன் ஏராளமான எதிரிகளை சம்பாதித்தார்.

ஆபாச படம்

மீரா மிதுனுக்கு ஏராளமான எதிரிகள் இருக்கிறார். இது அனைத்திற்கும் காரணம் அவரின் இயல்பான குணம் தான். அவர் பொய் சொல்கிறார், மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு ஏராளமான எதிரிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆபாச இணையதளத்தில் மீராமிதுன் புகைப்படத்தை மார்பிங் மூலமாக பதிவிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மீராமிதுன் சைபர் கிரைமிற்க்கு அந்த புகைப்படத்தை டாக் செய்துள்ளார்.

மேலும் படிக்க – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மான்..!

சைபர் கிரைம்

சைபர் கிரைம் இதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்ட நபர் மீராவை கேலி செய்யுமாறு வேறு ஒரு பதிவையும் செய்துள்ளார். எனவே மீராமிதுன் கோபமடைந்து தமிழக சைபர் கிரைம் என்ன செய்கிறது, இது பெண்களுக்கான துறை அல்ல என்று தமிழக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையை மற்றவர்கள் பார்க்க வேண்டிய எண்ணம் கொண்ட ஒரு சில பெண்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்கும் போது தான் அந்த தவறை உணர்கிறார்கள். ஆனால் மீராமிதுன் அவரின் தவறை உணர்ந்ததாக தெரியவில்லை, இருந்தும் அற்ப புகழுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை நம்முடைய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன