எச்சரிக்கையாக இருங்கள் இது உண்மையான காதல் இல்லை..!

  • by
beware from this kind of love

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு ஆனால் அதில் எப்போது உண்மைத் தன்மை இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் தேவைப்படும் சுய தேவைகளை உருவாகுவது காதல் அல்ல. உங்கள் காதல் உண்மை நிறைந்ததா என்பதை பாருங்கள். இதனால் அதிகளவிலான காதலன் மற்றும் காதலி இதில் ஏதாவது ஒரு தேவைக்காகவே தங்கள் துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். இதுபோன்ற காதலிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.

ரீசார்ஜ் செய்ய செல்பவர்கள்

ரீசார்ஜ் செய்ய சொல்வது சாதாரணமாக தான் உங்களுக்கு தோன்றும், ஆனால் உண்மையில் ரீசார்ஜ் செய்வதற்காகவே எல்லோரிடமும் பணம் இருக்கும், இருந்தும் உங்கள் காதலன் அல்லது காதலியின் பணத்தை உபயோகிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் மற்றவர்களை ரிச்சா செய்யச் சொல்லி கேட்டுக்கொள்வார்கள். அதிலும் அச்சமயங்களில் உங்களுடன் மிகப்பிரிய மாகவும், பசமாகவும் இருப்பார்கள்.

மேலும் படிக்க – குடும்பத்திற்குள் நல்ல பழக்கங்களை கொண்டுவருவது எப்படி..!

அக்கறையின்மை

உங்களுடன் இருக்கும் போது உங்களிடம் நேரத்தை செலவழிக்காமல் தொலைபேசி மற்றும் மற்றவர்களுடன் நேரத்தை செலவழிப்பவர்களை நம்புவதை தவிர்க்க வேண்டும். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள், அதைத் தவிர்த்து உங்களுடன் இருப்பதற்கான ஏதாவது ஆழமான சுய காரணங்கள் இருக்கும்.

முக்கியமான நாட்களை மறப்பது

உங்கள் பிறந்த நாள் அல்லது நீங்கள் காதலில் இணைந்த நாள் போன்றவைகளை, உங்கள் துணை மறந்தால் நிச்சயம் அவர் உங்கள் மேல் அக்கறை இல்லாமல்தான் இருக்கிறார். ஆனால் ஒரு சில வேளை சூழலினால் இதுபோல் மறக்கலாம், ஆனால் மற்றவர்கள் இது எல்லாம் எனக்கு பெரிய விஷயம் இல்லை என்பதைப் போல் உங்களை அவமதிக்கும் வகையில் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்.

ஏற்றத்தாழ்வுகள்

உறவுக்குள் சரி சமமாக இல்லாமல் உங்களை எப்போதும் தாழ்வாக வைத்துக் கொள்ளும் துணையுடன் உங்கள் காலத்தை கழிக்காதீர்கள். ஆரம்பத்தில் காதல் வெளிபாட்டினால் இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் நாளடைவில் இதனால் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகும். எனவே சரிசமமான காதலுல் நுழையுங்கள்.

மேலும் படிக்க – அன்புக்குரியவருக்கு என நேரம் ஒதுக்குங்கள்

மனதில் உள்ள காதல்

பொதுவாக காதல் என்பது ஒருவரின் முகத்தை பார்த்து உண்டாகிறது. ஆனால் அவருடன் நட்பாக பழகி காதலராக மாறுவதற்கு முன்பாக அவரின் சொத்து மதிப்பு, அவரின் திறமைகள் என்ன, என்னவெல்லாம் எதிர்காலத்தில் செய்வார்கள் என்று கணக்குப் போட்டுக்கொண்டு இணையும் காதலர்களை புறக்கணியுங்கள். ஒரு காதல் நீடித்து நிலைக்க வேண்டுமென்றால் அதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது. என்பதை விட ஏதாவது ஒரு எதிர்பார்ப்பில் உங்கள் காதல் உருவாகினால் அந்தக் காதலில் நம்பிக்கை தன்மை குறைவாக இருக்கும்.

எல்லோருக்கும் அன்பும், அரவணைப்பும் தேவை. இது இயற்கையாகவே நமக்கு கிடைக்க வேண்டும். அதை தவிர்த்து ஒருவரின் வசதி, பணம் மற்றும் செய்யும் வேலைகளினால் கிடைத்தால் அதில் எந்த ஒரு திருப்தியும் இருக்காது. எனவே உண்மையான காதலை உருவாக்கி அதில் வாழுங்கள், அதைத் தவிர்த்து பொய்யான காதலுல் நுழைந்து உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன