கோடை விடுமுறைக்கு உங்கள் குழந்தைகளை எங்கெல்லாம் அழைத்துச் செல்லலாம்..!

  • by
best way to make your child spend their summer vacation

இன்னும் சில வாரங்களில் எல்லோரின் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்க உள்ளது. எல்லா மாணவ, மாணவிகளும் வருடம் முழுவதும் காத்திருப்பது இந்த கோடை விடுமுறைக்கு தான். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நாள் விடுமுறை கிடைப்பதினால் இந்த மாதத்தில் அவர்கள் பலவிதமான திட்டங்களை தீட்டி இருப்பார்கள். அதை தவிர்த்து பெற்றோர்களாகியவர்கள், உங்கள் குழந்தைகளுடன் இந்த மாதத்தில் அவர்களுடன் நேரத்தை செலவழித்து அவர்களை எங்கேயாவது சுற்றுலா அழைத்துச் செல்லலாம். நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம் என்பதை காணலாம்.

கடற்கரைக்கு அழைத்துச் செல்லலாம்

கோடைக்காலத்தில் நம் உடல் நிலை மிகவும் உஷ்ணமாக அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே நம்மை குளிர்ச்சி அடைவதற்கும் நம்முடைய மனநிலையை உற்சாகமாக வைப்பதற்கும் நாம் நீர்நிலை இருக்கும் இடங்களுக்கு சென்று நீராட வேண்டும். ஒரு சிலர் கடற்கரைக்கு அருகில் வசிப்பார்கள் எனவே இவர்கள் உங்கள் குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு பலவிதமான விளையாட்டுகளை அவர்களுக்கு கற்றுத் தரலாம். கடற்கரைக்கு வெகு தூரத்திலிருந்தால் அருகிலுள்ள நீச்சல் குளம் மையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சி படுத்தலாம்.

மேலும் படிக்க – ஹோலி விழாக்கள் ஒற்றுமையின் சின்னங்கள்

பூங்காக்கள் மற்றும் பொருட்காட்சி

உங்கள் குழந்தைகள் காற்றோட்டமான இடத்தில் விளையாடுவதற்கான சூழ்நிலைகளை அமைத்து தாருங்கள். அவர்களை அருகிலுள்ள பூங்காவிற்க்கு தினமும் மாலையில் அழைத்துச் செல்லலாம். அதை தவிர்த்து உங்கள் சொந்தம் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டிலிருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து ஏதாவது புதிய விளையாட்டு பயிற்சி  அளிக்கலாம். அதேபோல் கோடைக் காலங்களில் சில சிறப்பு முகாம்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். எனவே இவர்களை பொருட்காட்சிகள் உள்ள இடங்கள் மற்றும் அருங்காட்சிக்கு அழைத்துச் சென்று அவர்களின் நாட்களை பயனுள்ளதாக மாற்றலாம். உங்கள் குழந்தையின் மனநிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இதுபோல் ஏதாவது ஒரு சிறிய செயல் அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக செய்யுங்கள்.

உறவினர்கள் வீடு

இந்த மாதத்தில் உங்கள் குழந்தைகளை உங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு அனுப்புவது ஒரு சிறந்த வழியாகும். ஆனால் அந்த வீட்டிலும் உங்கள் குழந்தைகளைப் போல் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் அவர்கள் அங்கே சென்று தனிமையாக இருக்குமாயின் உங்கள் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் அனுப்பலாம்.

பயிற்சி மையங்கள்

கோடைக்காலம் வந்தாலே பல வித மான பயிற்சி மையங்கள் தொடங்கிவிடும். இதில் மட்டைப் பந்தாட்டம், கால்பந்து, நீச்சல், ஓவியம் வரைதல் இல்லையெனில் இசைப்பயிற்சி போன்றவைகளை அவர்களுக்கு அளிக்கலாம். இதன் மூலமாக அவர்களின் திறமையும் உயர்ந்து கோடை விடுமுறை பயனுள்ளதாக அமையும்.

திரை அரங்குகள்

சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கும் படத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். கோடை காலம் வந்தால் ஆங்கிலேய மற்றும் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வெளியிடுவார்கள். எனவே அது போன்ற படங்களுக்கு அழைத்து சென்று அவர்களின் நாளை நினைவு உள்ளதாக மாற்றலாம்.

மேலும் படிக்க – பதின்பருவத்தில் இருப்பவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி..!

வெளியூர் சுற்றுலா

குறைந்தது மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை உங்கள் குழந்தைகளை ஏதாவது வெளியூர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். வெளியூர் என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு இதுபோன்ற குளிர் நிறைந்த ஊர்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு புது விதமான அனுபவங்களை தரலாம். அங்கே குளிர்ச்சி அதிகமாக இருப்பதினால் கோடைக்காலத்தினால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சில நாட்கள் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.

இது அனைத்திற்கும் மேலாக கோடை காலங்களில் உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். இது தான் அவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த விடுமுறை நாட்களில் அவர்களை படிக்க சொல்லி தொந்தரவு செய்யாமல் ஏதாவது புதுவிதமான பயிற்சிகளை அளித்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன