நாம் பார்க்க மரந்து சிறந்த திரைப்படங்கள்..!

  • by
best tamil movies to watch during this lockdown

அடுத்து 20 நாட்களுக்கு அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இருபது நாட்களில் நீங்கள் திரைப்படங்களை ஏதாவது பார்த்து கழிக்கும் எண்ணங்கள் இருந்தால் உங்களுக்கான ஒரு சில யோசனைகளை இந்த பதிவின் மூலமாக கிடைக்கும். பொழுது போக்கின் அடிப்படையில் உருவான திரைப்படங்களுக்கு மத்தியில் கதையில் மற்றும் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் தத்ரூபமாகவும் எல்லோரின் பொழுதை கழிக்கும் வகையில் வெளிவந்த திரைப்படம் சில சமயங்களில் திரையரங்குகளில் ஓடாமல் சென்றுவிடும்.  உங்கள் பொழுதை இனிமையாக கழிக்க உதவும் ஒரு சில படங்களை இந்த பட்டியலில் காணலாம்.

மும்பை எக்ஸ்பிரஸ்

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான திரைப்படம் தான் மும்பை எக்ஸ்பிரஸ். இந்திய அளவில் டிஜிட்டல் முறையில் வெளிவந்த முதல் திரைப்படம் இதுதான். நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தில் நகைச்சுவை மட்டுமல்லாமல் அன்பு, பாசம், நேசம், பகை போன்ற எல்லாவற்றையும் நாம் காணலாம். வசூல் ரீதியாக தோல்வி அடைந்த இந்தத் திரைப்படத்தை நம்மால் மீண்டும் மீண்டும் காண முடியும். 

தவமாய் தவமிருந்து

சேரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தவமாய் தவமிருந்து. ஒரு ஏழை அப்பா தன் பிள்ளைகளை வளர்ப்பதற்காக என்னென்ன கஷ்டங்களை எதிர் கொள்கிறார் என்பதை தத்ரூபமாக செல்லி இருக்கும் திரைப்படம் தான் தவமாய் தவமிருந்து. ஒரு தந்தை என்னவெல்லாம் கஷ்டங்கள் எதிர் கொள்ளக் கூடாதோ அது அனைத்தையும் எதிர்கொண்டு தன் வாழ்க்கையை எப்படி கழிக்கிறார், இறுதியில் அவருக்கு என்ன நேர்கிறது என்பதை உண்மை சம்பவத்தை போல் நம்மை உணர வைக்கும் திரைப்படம்தான் இது.

மேலும் படிக்க – நடிகை நதியாவின் வாழ்க்கை முறை..

அபியும் நானும்

ராதாமோகன் இயக்கத்தில் த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அபியும் நானும். அப்பா மக்களுக்குள் இருக்கும் பாசத்தை அழகாக சொல்லியிருக்கும் திரைப்படம் இது. குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையை தன் தந்தை எப்படி எல்லாம் பார்க்கிறார் அதன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் படும் கஷ்டங்கள் மற்றும் மன போராட்டங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருப்பார் பிரகாஷ்ராஜ்.

பஞ்சதந்திரம்

கமல்ஹாசன் திரைப்படம் என்றால் அதில் ஏராளமான உள்ளர்த்தங்கள் இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க நகைச்சுவையும், குடும்பத்தில் ஏற்படும் சிக்கலையும், நண்பர்களுக்கு இடையே நடக்கும் கலாட்டாகளையும் வேடிக்கையாக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் பஞ்சதந்திரம். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் எல்லோரையும் கவர்ந்தது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி

நடிகர் வடிவேல் ஒரு அரசனாகவும் அவரின் மூலமாக நடத்தப்படும் அரசாங்கம், அதனால் மக்கள் படும் வேதனைகளை நகைச்சுவையாக சொன்ன திரைப்படம்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி. நீங்கள் 2000ம் ஆண்டிற்கு பிறகு பிறந்திருந்தால் இந்தத் திரைப்படத்தை தவறவிட்ட வாய்ப்புகள் உள்ளன. இந்த இடைவெளியில் நகைச்சுவையாக உங்கள் நாட்களைக் கழிக்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு நாளில் இந்த திரைப்படத்தை காணுங்கள்.

வெயில்

இந்த வரிசையில் வேதனை அளிக்கும் ஒரே திரைப்படம் இதுதான், இருந்தாலும் உங்களை அறியாமல் உங்கள் மனதுக்குள் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் கண்ணீர் வழியாக வெளிவர உதவும் இந்த திரைப்படத்தை நேரம் கிடைக்கும்போது காணுங்கள். வசந்தபாலன் இயக்கத்தில் பரத் மற்றும் பசுபதி இருவரும் நடித்து வெளியான திரைப்படம் தான் வெயில்.

மேலும் படிக்க – ராஜமாதா ரம்யா கிருஷ்ணாவின் வாழ்க்கை..!

ஆன் பாவம்

பாண்டிராஜ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் தான் ஆன் பாவம். குறும்புத்தனமான நடிப்பு தவறுதலாக நடந்த சில சம்பவத்தினால் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என எல்லாவற்றையும் நகைச்சுவையாக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் இது. இத்திரைப்படத்தின் வீ கே ராமசாமியின் நடிப்பு எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும். எனவே நீங்கள் பழைய படம் பார்க்கும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தால் ஒருமுறை இந்த திரைப்படத்தை பார்க்க முயற்சி செய்யுங்கள், நிச்சயம் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

நியூ

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான நியூ திரைப்படம் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதனால் அக்காலத்தில் இத்திரைப்படம் சரியாக ஓடவில்லை, இருந்தாலும் சிறியவர்களை கவரும் வகையில் இருக்கும் இத்திரைப்படத்தின் ஏராளமான ஆபாச காட்சிகள் அடைந்துள்ளது. இதனாலேயே திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. இருந்தாலும் உங்களுக்கு பொழுது கழிய வேண்டும் என்றால் தமிழில் வெளியான இந்தத் ஃபேண்டசி திரைப்படத்தைப் பார்த்து உங்கள் நேரத்தை கழியுங்கள்.

இங்கிலீஷ் விங்கிலிஷ்

தமிழில் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த திரைப்படம் புலி ஆனால் அதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் இரு மொழியில் வெளியானது அதில் மற்றொரு மொழி தமிழ் மொழியாகும். ஆனால் சராசரியான ரசிகர்களுக்கு இந்த விஷயம் சரியாக சென்றடையாததினால் இத்திரைப்படத்தை பலர் இன்னும் பார்க்காமல் இருக்கிறார்கள். பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உருவான இத்திரைப்படத்தை எல்லா பெண்களும் மறக்காமல் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துல்கர் சல்மான்..!

இரண்டாம் உலகம்

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இரண்டாம் உலகம். வெளிநாட்டு நடிகர்கள், புதுவிதமான கதை மற்றும் புரியாத களம் போன்ற பிரச்சினைகளினால் மக்களுக்கு இத்திரைப்படம் சரியாக புரியவில்லை. ஆனாலும் படத்தில் ஒரு ஆழமான காதல் கதை உள்ளது இதை தவிர்த்து காதலில் பெறும் நன்மைகள் மற்றும் காதலினால் உலகம் எதை நோக்கி செல்கிறது என்று ஆழ்ந்து அர்த்தங்களைக் கொண்டது தான் இந்த திரைப்படம். ஆனால் முதல் வாரம்வரை கூட சரியாக ஓடாத இத்திரைப்படம் விரைவில் திரையரங்கை விட்டு வெளியேறியது. எனவே உங்களுக்கு நேரம் கிடைத்தால் இத்திரைப்படத்தை ஒரு முறை பாருங்கள்.

இதை தவிர்த்து ஏராளமான திரைப்படங்கள் தமிழில் இருக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற இனய சேவைகளில் கிடைக்கின்றது. அதைத் தவிர்த்து யூடியூபிலும் இந்த படங்கள் கிடைக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன