21ம் நூற்றாண்டின் சிறந்த பத்து பாடல்கள்!

1. மரியான் -இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன 

காதல் பாடல்களில் மிக முக்கியமான பாடல் இந்த பாடல் ஏ ஆர் ரகுமான் இசையில் கபிலனின் எழுத்து மூலமாக உருவான இந்தப் பாடலை ஸ்வேதா மோகன் விஜய் பிரகாஷ் அவர்கள் பாடி உள்ளார்கள்

இன்னும் கொஞ்சம்

நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே 

இன்னும் பேச கூட

தொடங்கல என் நெஞ்சமும்

கொஞ்சமும் நிறையல

இப்போ என்ன விட்டு போகாதே

என்ன விட்டு போகாதே 

2. பையா -துளி துளி 

இந்தப் பாடலைக் கேட்கும்போது எல்லோருக்கும் காதல் உணர்வு ஏற்படும் அத்தகைய அழகான ஒரு பாடல் இந்த பாடலின் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா பாடலை எழுதியவர் நா முத்துக்குமார் பாடலை பாடியவர் ஹரிச்சரண்

தேவதை அவள் ஒரு தேவதை

அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ

காற்றிலே அவளது வாசனை

அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ

மேலும் படிக்க – இதயங்கள் பரிமாறி, இமைகளில் உணர்வுகளால் சங்கமிப்பது காதல்

3. கடாரம் கொண்டான் -தாரமே தாரமே 

திருமணமான பின்பு மனைவி மேல் வைத்திருக்கும் அன்பை மிக அழகாக சொல்லியிருக்கும் பாடல்தான் இந்தப் பாடல் இதை இசை அமைத்தவர் பாடலை எழுதியவர் விவேக் பாடியவர் சித்து ஸ்ரீராம் 

வேறதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்

4. மூணு -நீ பார்த்த விழிகள் 

காதல் பொங்கும் அளவிற்கு மிக அழகான பாடல் இது ஒவ்வொரு வார்த்தைகளும் உள்நுழைந்து காதல் உணர்வை தூண்டும் இந்த பாடலின் இசையமைப்பாளர் அனிருத் எழுதியவர் தனுஷ் பாடியவர்கள் ஸ்வேதா மோகன் மற்றும் விஜய் யேசுதாஸ்

ஆண் : நிஜமடி பெண்ணே

தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை

இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

மேலும் படிக்க – காதலில் ஆண் பெண்களின் பரிமாற்றங்கள் இப்படியிருந்தால் நல்லது!

5. நீதானே என் பொன்வசந்தம் -சாய்ந்து சாய்ந்து 

தனிமையில் இருக்கும் காதலர்களுக்கு ஏற்ற பாடல் இது இந்தப் பாடலைப் பாடியவர் இசைஞானி இளையராஜா இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா பாடியவர் யுவன் சங்கர் ராஜா மற்றும் ரம்யா என் எஸ் கே

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி

உன்னை கண்டு கொண்டேன்..

ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை

நான் கண்டு கொண்டேன்..

அழகான உன் கூந்தல் மாகோலம்..

அதை கேட்கும் எந்தன் வாசல்..

காலம் வந்து வந்து கோலமிடும்..

உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..

அங்கே நீயும் நானும் நாம்..

6. மதராசபட்டினம் -பூக்கள் பூக்கும் தருணம் 

மிகவும் பழமையான காலத்தில் பூத்த ஒரு அழகிய காதலைப்பற்றி சொல்லும் பாடல் இது இந்த பாடலை இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ் குமார் இதை எழுதியவர் நா முத்துக்குமார் இந்தப் பாடலை பாடியவர்கள் ஜிவி பிரகாஷ் குமார், மற்றும் ஹரிணி

ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை

பாவை பார்வை மொழிப் பேசுமே

பெண் : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை

இன்று இந்த நொடி போதுமே

ஆண் : வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி

இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே

பெண் : வாழ் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி

இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே

7. விக்ரம் வேதா -யாஞ்சி 

2018 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான பாடல் இது இந்த பாடலை இசையமைத்தவர் சம் சி எஸ் பாடல் வரிகளை எழுதியவர் மோகன்ராஜ் பாடலைப் பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன், சக்திஸ்ரீ கோபாலகிருஷ்ணன், மற்றும் சத்யபிரகாஷ்

மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்

பன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன

என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்  

எல்லைகள் போல ஆகிறாய்

மேலும் படிக்க – ஆண் பெண் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை.!

8. கோவா -இதுவரை 

காதல் ஏக்கத்தைப் பற்றி மிக அழகாக பாடியிருக்கும் பாடல் தான் இது இந்த பாடல் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா பாடல் வரிகளை எழுதியவர் கங்கை அமரன் பாடலை பாடியவர்கள் அஜீஷ் மற்றும் ஆண்ட்ரியா 

இங்கே ஒரு

இன்பம் வந்து நிறைய

எப்போது என் உண்மை

நிலை அறிய தாங்காமலும்

தூங்காமலும் நாள் செல்லுதே

9. மனிதன் -அவள் 

காதலியுடன் சண்டையிட்டு அதை சமாதானப்படுத்தி மீண்டும் காதலை பகிரும் சோலை உருவாகிய பாடல் இது இந்த பாடலை இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை எழுதியவர் விவேக் பாடலைப் பாடியவர்கள் பிரதீப்குமார் மற்றும் பிரியா 

காலம் போகுதே

கடிகாரம் ஓடுதே உன்ன

மாத்திக்கும் நேரம் எப்போ

வாதம் பண்ணுனா

பிடிவாதம் பண்ணுற

திருந்தாத நான்தான் தப்போ

ஆண் : படபடக்கும் கண்ணால

எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட

மனசுடைஞ்சு போகாத உன் விரல்

புடிச்சு நானும் கரை ஏறுவேன்

10. சீமராஜா -உன்ன விட்டா 

காதல் பரிமாற்றத்தை மிக எளிமையான முறையில் பாடலாக எழுதி பாடி உள்ளார்கள் இந்த காதல் ஜோடிகள் இந்த பாடலின் இசையமைப்பாளர் இமான் பாடலை எழுதியவர் யுகபாரதி பாடலை பாடியவர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ்

 வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே

பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே

அந்தி பகல் ஏது உன்ன மறந்தாலே

அத்தனையும் பேச

பத்தலயே நாளே

மனசே தாங்காம

நான் உன் மடியில் தூங்காம

கோயில் மணி ஓசை

நெதம் கேட்பேன்…

11. இமைக்கா நொடிகள் – நீயும் நானும் அன்பே

காதல் திருமணத்தை நினைத்தவாறு முடித்துக்கொண்டு தாங்கள் வாழும் அழகான தருணத்தை பற்றிய பாடல் இது. இந்த பாடலை இசையமைத்து அவர் இப்போப் தமிழா எழுதியவர் கபிலன் பாடியவர்கள் ரகு, சத்ய பிரகாஷ், ஜிதின் ராஜ் 

தாய் மொழி போலே நீ வாழ்வை என்னில்

உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்

மின்மினி பூவே உன் காதல் கண்ணில்

புதிதாய் கண்டேனே என்னை உன்னில்

தாமதமாய் உன்னை கண்ட பின்னும்

தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே

கண்கள் கோர்த்துக்கொண்டு

வாழ்வின் எல்லை…

12. பொக்கிஷம் – நிலா நீ வானம் 

தொலைதூரத்தில் இருக்கும் காதலன் மற்றும் காதலி ஒருவரை ஒருவர் நினைத்து எழுதும் கடிதமே இப்பாடல் இந்த பாடலின் காலம் முப்பது வருடம் பழமையான கல்கத்தாவில் அமைந்துள்ளது இந்த பாடலை இசை அமைத்தவர் சபேஷ் முரளி எழுதியவர் யுகபாரதி பாடியவர்கள் விஜய் ஜேசுதாஸ் சின்மயி

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி

கொஞ்சும் தமிழ் குழந்தை

சிணுங்கள் சிரிப்பு முத்தம்

மௌனம் கனவு ஏக்கம்

மேகம் மின்னல் ஓவியம்

செல்லம் பிரியம் இம்சை

13. ஒரு கல் ஒரு கண்ணாடி – ஒரு பார்வையில்

காதல் பரிமாற்றத்தை மற்றும் காதலிப்பதை உணரும் தருணத்தில் உண்டாகிய பாடல் இது இந்த பாடலை எழுதியவர் நா முத்துக்குமார் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலைப் பாடியவர் ரஞ்சித் 

கடும் விஷத்தினை

எடுத்துக் குடித்தாலும் அடி

கொஞ்ச நேரம் கழித்தே

உயிர்ப்போகும் இந்தக்

காதலிலே உடனே உயிர்

போகும் காதல் என்றால்

பெண்ணே சித்ரவதை தானே

14. கடல் – மூங்கில் தோட்டோ

இளம் காதலர்கள் தங்கள் காதலை முழுமையாக உணர்ந்து அவர்கள் உறவு பரிமாற்றத்தை மிக அழகாக காட்சிப்படுத்தி பாடி இருப்பது தான் இந்த பாடல் இந்த பாடல் இசை அமைத்தவர் ஏ ஆர் ரகுமான் பாடியவர்கள் ஹரிணி அபய் ஜோத்பூர்கர் இந்த பாடலின் வரிகளை எழுதியவர் வைரமுத்து 

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக

சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து

நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே

15. அனேகன் – ஆத்தாடி ஆத்தாடி

பர்மாவில் தன் உயிரை காப்பாற்றிய நபரை காதலித்து அவரின் காதலையும் இணைக்குமாறு மிக உணர்வுபூர்வமாக பாடிய பாடல்தான் இது, இந்த பாடல் வரிகள் மிக அழகானது இந்தப் பாடலை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த பாடலை பாடியவர்கள் அபய் ஜோத்பூர்கர் பவதாரணி தனுஷ் மற்றும் திப்பு இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து

நீ மகுடத்தில் வைர கல்லு

நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு

உன்ன தொடவும்

விரல் படவும்

ஒரு பொருத்தம் எனக்கு ஏது

நான் தரமான தங்கக்கட்டி

நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி

என்னை அடைக்க காத்து கெடக்க

உன்ன போல ஆளு ஏது

இந்தக் காலத்து இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் அவர் வாழ்க்கைக்கு நெருக்கமான பாடல்களில் இவை அனைத்தும் நிச்சயம் இடம் பிடித்திருக்கும் இதைத் தவிர்த்து உங்களுக்கு ஏதாவது பாடல் தோன்றியது என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன