சிறந்த பத்து காதல் தோல்வி தமிழ் பாடல்கள்!

sad love songs in tamil

1. வென்மதி வென்மதியே நில்லு – மின்னலே 

காதலைப் பற்றி மிக அழகாக சித்தரிக்கப்பட்ட படம்தான் மின்னலே இந்த படத்தில் நடிகர் மாதவன் காதல் தோல்வி அடைந்த நிலையில் குடிபோதையில் தன் காதலியை பற்றி நினைத்து பாடும் மிக அழகான பாடல் தான் வெண்மதியே நில்லு என்ற பாடல் இந்தப் பாடலில் அவரின் காதல் மற்றும் காதலினால் ஏற்பட்ட வலியைப் பற்றி மிக அழகாக பாடி இருப்பார் இந்தப் பாடலை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி இந்தப் பாடலை பாடியவர்கள் திப்பு மற்றும் ரூப்குமார் ரத்தோட்

2. இமையே இமையே விலகும் இமையே – ராஜா ராணி 

ஜி வி பிரகாஷ் குமாரின் ராஜா ராணி படத்தில் இரு விதமான காதல் சம்பவங்கள் இருக்கும் அதில் இரண்டுமே மன உளைச்சலைத் தரக் கூடிய சம்பவங்களாக இருக்கும் அப்படிப்பட்ட சூழலில் இருந்து காதல் தோல்வி அடைந்த இருவர் மீண்டும் காதலில் விழும் தருவாயில் இருவரும் பிரிய நேர்ந்தால் அது எவ்வளவு வலி தருமோ அந்த வலி அப்படியே பாடலாக வெளிப்படுத்தியது தான் இந்த பாடல் இமையே இமையே விலகும் இமையே இந்த பாடலை எழுதியவர் பா விஜய் இந்தப் பாடலை பாடியவர்கள் ஜிவி பிரகாஷ் குமார் சக்திஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

மேலும் படிக்க – மாமியார் மருமகள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும்

3.கனவே கனவே – டேவிட் 

கனவே கனவே பாடல் மிகவும் மன வலியுடன் பாடப்பட்ட பாடல் தான் இந்த பாடல் தன் காதல் தோல்வியின் வலியை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் பாடிய பாடல்தான் கனவே கனவே இந்தப் பாடலில் இசையமைத்தவர் அனிருத் இந்தப் பாடலின் வரிகளை எழுதியவர் மோகன் ராஜன் இந்தப் பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் காதல் தோல்வி அடைந்தவர்கள் நிச்சயம் இந்தப் பாடலை தினமும் கேட்டு ஆறுதல் அடைந்திருப்பார்கள்

4. ஒரு பொய்யாவது சொல் கண்ணே – ஜோடி 

இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்ற பாடல் மிகவும் காதல் வலியை தூண்டும் பாடல் தன் காதலிக்கு தன் கண்ணெதிரிலேயே வேறு ஒருவருக்கு திருமணம் நடக்கும் தருவாயில் மனம் வருந்தி கதாநாயகன் பாடும் பாடல் தான் இந்த பாடல் இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த பாடலின் வரிகளை எழுதியவர் வைரமுத்து இந்த பாடலை பாடியவர் ஹரிஹரன் ஸ்ரீனிவாஸ் சுஜாதா மோகன்

5. என் காதலே என் காதலி – டூயட் 

அண்ணன் தம்பி இருவரும் ஒரே பெண்ணை காதலித்து அந்த உண்மை தெரியவரும் பொழுது பாடப்படும் பாடல் தான் இந்த பாடல் மிகவும் ஆழமான வரிகளைக் கொண்ட இந்தப் பாடலின் காட்சியமைப்பு காதல் தோல்வி ஏற்றவர்கள் மனதில் கண்ணீர் பொங்க வைக்கும் இந்த பாடலை இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான் பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து இந்தப் பாடலை பாடியவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்

மேலும் படிக்க – பெண்களிடம் பழகும் ஆண்கள் கவனத்திற்கு..!

6. மேகமோ அவள் – மேயாத மான் 

இதயம் படத்தில் வரும் கதாநாயகனைப் போல் இந்த படத்தில் ஒரு தலையாக காதலித்து வரும் ஒரு கச்சேரி பாடகனின் வலிமிகுந்த பாடலாகும்  யாரை சந்திக்கக்கூடாது என்று மனதை தேற்றிக்கொண்டு வாழ்ந்த கதாநாயகன் வலியுடன் தன் காதலித்த பெண்ணை சந்திக்கும் போது எழும் பாடல்தான் இது இந்தப் பாடலை இசை அமைத்தவர் சந்தோஷ் நாராயணன் எழுதியவர் விவேக் பாடியவர்கள் பிரதீப் குமார் மற்றும் அனந்து

7. பூங்காற்றிலே உன் சுவாசத்தை – உயிரே 

மிகவும் ஆழமான காதல் களத்தைக் கொண்ட இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகியை நினைத்து உருகி பாடப்படும் பாடல் தான் இந்த பாடல் இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எழுதியவர் வைரமுத்து பாடலை பாடியவர்கள் ஸ்வர்ணலதா மற்றும் உன்னி மேனன்

8. போ நீ போ – 3 

தனக்கு இருக்கும் பிரச்சினையை தன் மனைவியிடம் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டே தன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் தோல்வியுற்ற ஒரு மனிதனாய் ஏக்கத்துடன் பாடும் பாடல்தான் இந்த பாடல் இதற்கு இசை அமைத்தவர் அனிருத் எழுதியவர் தனுஷ் பாடியவர்கள் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் மோகித் சவுகான்.

மேலும் படிக்க – காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

9. அவ என்ன என்ன – வாரணம் ஆயிரம் 

வலியிலும் கொடியது காதல் தோல்வியின் வலி ஆனால் அதைவிடக் கொடியது தன் காதலியின் மரணம் இந்த பாடலை தன் காதலி இறந்ததை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் காதலன் பாடியது எவ்வளவு மனவேதனை இருந்தால் நான் சுயநினைவு இல்லாமல் தன் காதலியை பற்றி நினைத்துக்கொண்டு மரணம் வரை செல்ல தயாராகும் இருக்கும் இந்த காதலின் வலியை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் எழுதியவர் தாமரை பாடலை பாடியவர்கள் கார்த்திக் மற்றும் பிரசன்னா

10. உன்னை நினைச்சேன் – அபூர்வ சகோதரர்கள் 

தன் உடலில் இருக்கும் குறையை பொருட்படுத்தாமல் மற்றவர்களை சிரிக்க வைத்த ஒரு கலைஞனின் காதல் தோல்வியில் உருவானதுதான் இந்தப் பாடல் தன்னை நேசிக்கிறாள் என்று நம்பி தனக்காக எதையும் செய்யாமல் அவளுக்கு பரிசு வாங்கி சென்ற அவன், அவள் தன்னை ஒரு நகைச்சுவை மனிதராக பார்க்கிறாள் என்பதை உணர வைத்த தருணத்தில் மனமுடைந்து இந்தப்பாடல் வெளியாகியது பாடலின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியன் பாடல் எழுதியவர் கவிஞர் வாலி

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காதல் தோல்விகள் இருக்கும் அதை அனைத்தும் தொடர்பு படுத்தும் வகையில்தான் இந்த பாடல்கள் இருக்கின்றன உங்கள் தோல்வியை கடந்து உங்கள் உண்மையான வாழ்க்கைத்துணையை அடைய ஒரு அனுபவமாக நம் காதல் தோல்வியை பயன்படுத்தவேண்டும் அதிலேயே மூழ்கி விடாமல் வெளியேறுவதைத் தூண்டும் வகையில் இருக்கின்றன இந்த பாடல்கள், மீண்டு வாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன