பெங்களூரை சுத்திப்பார்க்க ஆசையா?

  • by
best places to visit in bangalore

பெங்களூரின் எழில் கொஞ்சும் அழகிற்கும், பருவ நிலைக்கும் பலர் அடிமை. பெங்களூரை சுத்தி பார்ப்பது மட்டுமின்றி அங்கு வாழ்ந்துப் பார்த்திட விரும்புகின்றனர் பல இளைஞர்கள். இந்தியாவின் பல நகரங்களிலிருந்து இங்கு குடி பெயர்ந்திருக்கும் மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு இடமாக பார்க்கின்றனர். பன்மொழி பேசும் மக்களிடம் நட்பு பாராட்டி உணவை பகிர்ந்து ஒற்றுமை பாராட்டி வாழும் வகையில் அமைந்திருக்கும் இடம் நமது பெங்களூரு. ஐடி நிறுவனங்களின் படை சூழ 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தில் சுற்றிப்பார்க்க அமைந்திருக்கும் இடங்களை பற்றிய ஒரு பார்வை.  

பெங்களூர் அரண்மனை:

மைசூர் அரச குடும்பத்திற்கு சொந்தமான பெங்களூர் அரண்மனை, பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தளமாக இருக்கின்றது. பூக்கள் நிறைந்த பூங்காக்கள் புடை சூழ இந்த பிரம்மாண்டமான அரண்மனை அமைந்திருக்கின்றது. 

மேலும் படிக்க – ஊரடங்கில் உங்கள் வீட்டில் புத்தக வாசிப்பு நல்ல சினிமாக்கள் பார்க்கலாம்.

கப்பன் பூங்கா 

கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலப்பரப்பில் 6000 மரங்களை கொண்டிருக்கின்றது கப்பன் பூங்கா. இந்த நகரம் இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஏற்றவாறு பச்சை புல்வெளிகளை கொண்டிருப்பதுடன் அத்தாரா கச்சேரி, கப்பன் பார்க் அருங்காட்சியகம் மற்றும் ஷேஷாத்ரி ஐயர் நினைவு பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கின்றன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அக்வாரியமான பெங்களூரு அக்வாரியம் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

லால்பாக்

பெங்களூரில் அமைந்திருக்கும் லால்பாக் பொட்டானிக்கல் கார்டனை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தாவரவியல் கலைப்படைப்பு என கூறலாம். இந்த பூங்காவின் முக்கிய குறிக்கோள் தாவரங்களைப் பற்றிய அறிவியல் ஆய்வு மற்றும் தாவர வகைகள் மறைந்துவிடாமால் பேணி பாதுகாப்பதே ஆகும். பெங்களூரு நகரின் மையத்தில் 240 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கின்றது லால்பாக். கிட்டத்தட்ட 1,854 வகையான தாவரங்களைக் கொண்டிருப்பதுடன் பிரஞ்சு, பாரசீக மற்றும் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அரிய தாவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் மற்றோரு சிறப்பு 3000 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக  இடம்பெற்றிருக்கும் லால் பாக் பாறையே. 

பன்னர்கட்டா தேசிய பூங்கா

பெங்களூரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பன்னேர்கட்டா தேசிய பூங்கா பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான சரணாலயமாகும். சுமார் 104.27 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதுவே நாட்டின் முதல் பட்டாம்பூச்சி பூங்காவை கொண்டிருக்கும் இடமாகும்.

பெங்களூரு வனப்பிரிவின் கீழ் இருக்கும் அனேகல் மலைத்தொடரின் பத்து ரிசர்வ் காடுகள், மீன்வளம், மிருகக்காட்சிசாலை, குழந்தைகள் பூங்கா, முதலை பண்ணை, பாம்பு பூங்கா மற்றும் வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் பூங்கா ஆகியவையும் இங்கு அமைந்திருக்கின்றது. அதுமட்டுமின்றி ஜங்கிள் சஃபாரி மூலம் இங்குள்ள அதிசய வனவிலங்குகளை நீங்கள் மிக அருகில் காணலாம். 

எம்ஜி சாலை 

பெங்களூர் மகாத்மா காந்தி சாலை என்பது நகரத்திலிருக்கும் மிக பரபரப்பான சாலைகளில் ஒன்று நகரத்தில் பொழுதுபோக்கு மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் மலிவான விலையில் வாங்குவதற்கான இடமாகவும் திகழ்கின்றது. பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் கட்லரி மற்றும் எலும்பினால் ஆன சீனா பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான பொருட்கல் மிக எளிதாகக் கிடைக்கின்றன. பெங்களூரின் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்று எம்.ஜி.ரோடு. நீங்கள் அவசியம் பார்க்கவேண்டிய இடம். 

மேலும் படிக்க – இந்தியாவில் அனைத்து ரயில் சேவைகளும் முடக்கத்தில் உள்ளது..!

யுபி சிட்டி மால்

சிபிடி (மத்திய வணிக மாவட்டம்) இல் அமைந்துள்ள இந்த சொகுசு மால் உங்கள் உயர்நிலை தேவைகளுக்கான ஒரே இடமாகும். ஒட்டுமொத்தமாக நான்கு கோபுரங்களை ஒருங்கிணைத்து, இந்த மால் 13 ஏக்கர் பரப்பளவில் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. 

இதுப்போன்ற பல இடங்கள் நீங்கள் பார்த்து மகிழ இருக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன