குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்லும் இடங்கள்..!

  • by
best places for going together with family

குடும்ப ஒற்றுமைக்கு மிக முக்கியமானது குடும்பத்தில் ஏற்படும் அனுபவங்கள்தான். இதை அழகாக அனுபவங்களாக மாற்றுவதற்கு நாம் மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சுற்றுலா சென்று வரவேண்டும். அப்படி இல்லை என்றாலும் ஏதாவது பண்டிகை காலங்களில் தங்களின் இருப்பிடத்திற்கு அருகே எங்கேயாவது அழைத்துச் செல்லவேண்டும். இதன் மூலமாக உங்கள் குடும்பம் பலமாகவும் வலுவாகவும் இருக்கும்.

பொங்கல் திருவிழாக்கள்

சுற்றுலாகாகவே நாம் கொண்டாடப்படும் பண்டிகை தான் பொங்கல் திருவிழா. இதில் வரும் காணும் பொங்கல் திருவிழா அன்று நாம் கடற்கரைகள் பார்குகள் மற்றும் சுற்றுலா பொருட்காட்சி போன்ற இடங்களுக்கு சென்று வருவோம். இதை உங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒருமுறை சென்று வாருங்கள். அது மிக அழகான அனுபவமாக இருக்கும். அதை தவிர்த்து அங்கு ஓட்டல்களில் உணவு அருந்தாமல் வீட்டிலேயே வெவ்வேறு விதமான உணவுகளை சமைத்து ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிடுங்கள். அந்த அனுபவம் கடைசி வரை உங்களை விட்டுச் செல்லாது.

மேலும் படிக்க – ஈர்ப்பு விதியை தன் வசப்படுத்த நாம் செய்ய வேண்டிய செயல்கள்..!

கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயர்

கிறிஸ்தவர்கள் ஆர்வமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ். இந்த பண்டிகை டிசம்பர் 25ல் தொடங்கி நியூ இயர் வரை நீடிக்கும். எனவே இதற்கு இடைப்பட்ட காலங்களில் அரையாண்டு விடுமுறை வருவதினால் உங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து ஏதாவது கடற்கரை அருகில் உள்ள தேவாலயங்களுக்கு செல்லலாம். இது உங்களுக்கு மன நிறைவை மட்டும் தராமல் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

ரம்ஜான் மற்றும் பக்ரீத்

இஸ்லாமியர்கள் தாங்கள் அதிக நாட்கள் விரதமிருந்து இறைவனை வணங்கும் பண்டிகைதான் ரம்ஜான். எனவே இவர்கள் அதிக நாட்கள் விரதம் மற்றும் தொழுகையில் ஈடுபடுவதால் அவர்களின் குடும்ப உறவினர்களை மசூதிகளில் சந்திக்கிறார்கள். இதை தவிர்த்து ஒரு புதிய அனுபவத்திற்காக இவர்கள் குடும்பத்துடன் கடற்கரை அல்லது சுற்றுலா பொருட்காட்சி போன்ற இடங்களுக்கு செல்லலாம். இல்லையெனில் குடும்பமாக மற்ற நகரங்களில் இருக்கும் அவர்களின் புனித ஆலயங்களுக்கு செல்லலாம்.

மேலும் படிக்க – குடும்பச் சந்திப்பினால் ஏற்படும் நன்மைகள்…!!!

இந்துக்கள் சுற்றுலா

இந்துக்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நேரம் கோவில்களில் கழிப்பதினால் ஒரு மாற்றத்திற்காக இவர்கள் மற்ற நகரங்களில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்லலாம். அதை தவிர்த்து குடும்பத்துடன் திரையரங்குக்கு மற்றும் சர்க்கஸ், மற்ற சாகசங்கள் செய்யும் இடங்களுக்கு செல்லலாம்.

சென்னையை சுற்றி சுற்றுலாகாக ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அதில் சென்ட் தாமஸ் மவுண்ட், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், கன்னிமரா லைப்ரரி மற்றும் மியூசியம், எம்ஜிஎம், விஜிபி, குயின்ஸ்லேண்ட், ஈசிஆர், கோவளம் மற்றும் பல மால்கள் உள்ளது. எனவே குடும்பத்துடன் முடிந்தவரை சுற்றுலா செல்லுங்கள். இது உங்கள் உறவை வலுப்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன