ஒருதலைக் காதலில் வாடும் பெண்களுக்கான பாடல்!

1. எங்கே எனது கவிதை – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 

உயிருக்கு உயிராய் காதலித்த காதலன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளும் அதே நாளில் தனது முதல் பாடல் பதிவு செய்வதற்காக வந்த பெண் மனம் உருகிப் பாடும் பாடல் தான் இந்த பாடல். இந்த பாடலை இசை அமைத்தவர் ஏ ஆர் ரகுமான் இந்தப் பாடலை பாடியவர் கே எஸ் சித்ரா மற்றும் ஸ்ரீநிவாஸ் இந்த பாடலை எழுதியவர் வைரமுத்து.

2. எவனோ ஒருவன் வாசிக்கிறான் – அலைபாயுதே 

தன்னை காதலித்த காதலனை விட்டு தொலைதூரத்தில் வந்த பெண் தன்னை அறியாமலேயே தன் காதலைப் பற்றி யோசித்து சிந்தனையில் பாடப்படும் பாடல் தான் இது, இந்த பாடலில் காதலின் தவிப்பை மிக அழகாக சொல்லியிருக்கும் இப்பாடலை இசை அமைத்தவர் ஏ ஆர் ரகுமான் இந்த பாடலை உணர்வுபூர்வமாக பாடியவர் ஸ்வர்ணலதா இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து.

மேலும் படிக்க – 15 அழகான தமிழ் காதல் வரிகள்! Tamil Love Lines

3. முதல் முறை பார்த ஞாபகம் – நீதானே என் பொன்வசந்தம் 

உயிருக்கு உயிராக காதலித்த காதலன் தனது குடும்பத்தின் மேல் உள்ள அக்கறையால் பிரிந்து காதலியை விட்டு வெகுதூரம் சென்ற வருத்தத்தினால் அழுகையுடன் பாடும் பாடல்தான் இப்பாடல் ஒரு பெண்ணின் தவிப்பையும் அவளின் உணர்ச்சியை மிக அழகாக காட்சி அமைத்திருக்கும் இப்பாடலை இசையமைத்தவர் இளையராஜா இந்த பாடலை எழுதியவர் நா முத்துக்குமார் இந்த பாடலை பாடியவர் சுனிதி சௌஹான். 

4. யாரோ மனதிலே – தாம் தூம் 

ஒரு தலையாக காதலிக்கும் பெண் தன் அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும் காதலை எண்ணி உணர்வுடன் பாடப்படும் பாடல்கள் இது, கனவில் வாழும் இவளுக்கு நிஜத்தில் ஓர் இன்பம் கிடைக்காதா என்ற வருத்தத்தில் இருப்பவள் இவள், இந்த பாடலை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் கிரிஷ் இந்தப் பாடலை எழுதியவர் நா முத்துக்குமார்.

மேலும் படிக்க – தங்களது காதலனுக்காக பெண்கள் அர்ப்பணிக்கும் பாடல்கள்

5. என் நண்பனே – மங்காத்தா 

உயிருக்கு உயிராக காதலித்த காதலன் திடீரென்று பிரிந்து சென்றான் இதற்கு காரணம் இவளிடம் இருக்கும் பணத்தை பறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உண்மை தெரிந்த இவள் மிக வருத்தத்துடன் சந்தோஷமும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஒருவித மனநிலையில் பாடப்பட்ட பாடல் தான் இது. இந்த பாடலின் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இந்த பாடலை பாடியவர் மதுஸ்ரீ மற்றும் யுவன் சங்கர் ராஜா இதன் வரிகளை எழுதியவர் வாலி.

6. இதுவரை இல்லாத உணர்விது – கோவா 

பார்த்தவுடன் காதல் வயப்பட்ட பெண் தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஒரு பாடல் மூலமாக அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தி தோல்வியுற்ற பாடல்தான் இது, இந்தப் பாடலை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியவர் கங்கை அமரன் இந்த பாடலை பாடியவர் ஆண்ட்ரியா மற்றும் அஜீஸ்

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருக்கும் இனிய காதல் வசனங்கள்!

7. காதல் கிரிக்கெட் – தனி ஒருவன் 

தான் செய்யும் செயலை தவறு என்று நேரடியாக சொல்லாமல் தான் புரியும்படி எடுத்துரைத்தவரை ஒருதலையாக காதலிக்கும் பெண் தன் காதலை பற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல் தான் இது. இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் ஹிப்ஹாப் தமிழா இந்த பாடலை பாடியவர் கரிஷ்மா ரவிச்சந்திரன்

8. இதயம் – பில்லா-2 

சிறுவயது முதல் இவர் தன்னை தான் திருமணம் செய்து கொள்வதாக எண்ணிய உறவுப் பெண் திடீரென்று இதயத்தில் தோன்றிய சந்தேகத்தினால் பாடப்படும் பாடல் தான் இது. இந்த பாடலை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை பாடியவர் ஸ்வேதா பண்டிட் இந்தப் பாடலை எழுதியவர் நா முத்துக்குமார்

9. ஆத்தாடி மனசுதான் – கழுகு 

தன் தங்கையின் தொலைந்த மோதிரத்தை திருப்பி கொடுத்த மனதை மறக்காமல் காதலில் விழுந்த காதலி இவருடன் ஒன்றுசேரும் ஏக்கத்தை பற்றி பாடப்படும் பாடல் இது. இந்த பாடலை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை பாடியவர் பிரியா இமேஜ் இந்த பாடலை எழுதியவர் சினேகன்.

10. உசுரு நரம்புல – இறுதிச்சுற்று 

தனக்கு என்று ஒரு வாழ்க்கை இல்லாமல் சுற்றித்திரிந்த பெண்ணை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்த்த முயற்சிக்கும் ஆண்மகனை காதலிக்கும் பெண் தனது வலியையும் வேதனையையும் வெளிப்படையாக சொல்லப்படும் பாடல் தான் இது. இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் இந்த பாடலை பாடியவர் தீ இந்த பாடலின் வரிகளை எழுதியவர் விவேக்.

இந்த பாடல்கள் அனைத்தும் பெண்கள் தாங்கள் வெளிப்படுத்த விரும்பும் ஏக்கத்தை வரிகளாக கோர்த்து இசையில் சேர்த்து பாடல்களாகப் பாடி உள்ளார்கள் இதில் வெறும் வரிகள் மட்டும் இல்லாமல் அவர்களின் உணர்வுகள் பொங்கி எழும் அளவிற்கு இந்தப் பாடல் அமைந்துள்ளது உங்களுக்கு ஏதாவது இயக்கம் இருந்தால் இதில் உள்ள பாடல்களை கேட்டு உங்கள் மனதை ஆறுதல் செய்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன