தங்களது காதலனுக்காக பெண்கள் அர்ப்பணிக்கும் பாடல்கள்

tamil love songs from tamil cinema
tamil love songs from tamil cinema

1. நெஞ்சுக்குள்ளே – கடல் 

ஒரு பெண் தன் காதலனை எவ்வாறாக காதலிக்கிறாள் என்பதை மிக அழகான வரிகளில் இந்தப் பாடல் நமக்கு கற்றுத்தரும் காதலின் வலிகள் அதன் உள்நோக்கங்கள் அனைத்துமே இந்த பாடலில் இருக்கும் உங்கள் ஆண் நண்பருக்கு அர்ப்பணிக்க கூடிய ஒரு அழகான பாடல் இது. இந்த பாடலை இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான் இந்தப் பாடலைப் பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து.

2. வசீகரா – மின்னலே 

இது ஒரு முழுக்க முழுக்க காதல் திரைப்படம் இதில் ஒரு பெண் எந்த அளவுக்கு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் இந்த பாடல் முழுவதும் தன் மனம் மற்றும் உடல் ரீதியாகவும் ஒருவனை எவ்வாறாக காதலிக்கிறார் என்பதை உணர்த்தி இருப்பாள். இந்தப் பாடலை இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ பாடல் வரிகளை எழுதியவர் வாலி மற்றும் தாமரை.

மேலும் படிக்க – இதுபோன்ற ஆண்களைதான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.!

3. மாலை மங்கும் நேரம் – ரௌத்திரம் 

மிக கோபக்கார காதலனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மிக அழகான பாடலை பாடியிருப்பார் அவரின் காதலி உங்கள் காதலனையும் இது போல் உங்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் இந்தப் பாடல் கற்றுத்தரும் பாடத்தை நாம் கற்றாலே போதும். இந்த பாடலை இசையமைத்தவர்  பிரகாஷ் நிக்கி இந்த பாடல் பாடியவர் ரணினா ரெட்டி இந்த பாடல் வரிகளை எழுதியவர் தாமரை

4. அனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம் 

ஒரு பெண் ராணுவ வீரனான தனது பால்ய நண்பனை எவ்வாறு காதலிக்கிறாள் என்பதை மிக அழகான வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் காதலில் இருக்கும் நெருக்கத்தையும் இந்த பாடல் மூலமாக நாம் கற்றுக் கொள்ள முடியும் உங்கள் ஆண் நண்பருக்கு நீங்கள் அற்பனைக்கும் ஒரு அற்புதப் பாடல் இது. இந்தப் பாடலில் இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த பாடலை பாடியவர் சுதா ரகுநாதன் இந்த பாடல் வரிகளை எழுதியவர் தாமரை.

5. யாருமில்லா தனியரங்கில் – காவியத்தலைவன் 

அக்காலத்தில் வாழும் ஒரு பெண் தான் நேசிக்கும் ஒரு காதலனை சந்திக்க முடியாமல் தவிக்கும் பொழுது அவள் என்னவெல்லாம் நினைப்பானோ அதை அழகான பாடலாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் பாடலின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பா விஜய் இந்தப் பாடலை பாடியவர்கள் ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ்

மேலும் படிக்க – பெண்கள் ரகசியமாக செய்யும் சில அதிர்ச்சிகரமான செயல்கள்.!

6. நினைத்து நினைத்து பார்த்தால் – 7ஜி ரெயின்போ காலனி 

இறந்த பிறகு ஒரு பெண் தன் காதலனை விட்டு எவ்வாறாக பிரிந்து கஷ்டப்படுகிறேன் என்பதை கற்பனையான மிக அழகான ஒரு பாடல்தான் இது இந்தப் பாடலை எழுதியவர் நா முத்துக்குமார் பாடலின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை பாடியவர் ஸ்ரேயா கோஷல்.

7. கண்ணாளனே எனது கண்ணை – பாம்பே 

அன்று முதல் இன்று வரை நம் நெஞ்சில் நீங்காத ஒரு அழகிய காதல் பாடல் இது ஒரு பெண் தனது காதலனை பற்றி ஏங்கி பாடப்படும் பாடல் இது. இந்தப் பாடலை இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான் இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து இந்த பாடலை பாடியவர்கள் கே எஸ் சித்ரா மற்றும் ஏ ஆர் ரகுமான்

மேலும் படிக்க – உடலுறவுக்குப் பின் தம்பதியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!

8. உன் விழிகளில் விழுந்த நான் – டார்லிங் 

தற்கொலை முயற்சிக்கு செல்லும் ஒரு பெண் எதிர்பாராத விதமாக ஒருவரை சந்தித்து அவர் மேல் கொண்ட காதலை அழகாக பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பார். இந்த பாடலை இசை அமைத்தவர் ஜிவி பிரகாஷ் குமார் இந்த பாடலை பாடியவர் ஹரிணி இந்த பாடல் வரிகளை எழுதியவர் நா முத்துக்குமார்.

9. உன்னை நினைக்கவே – ஜெ ஜெ

தான் சந்தித்த நண்பரை காதலனாக நினைத்துக்கொண்டு அவர் இல்லாத நேரத்தில் அவரை நினைத்து ஏங்கி அவரை சந்திக்கும் நாள் எப்போது வரும் என்ற குழப்பத்தில் இந்த பாடலை காதல் பெருக்கினாள் இவர் பாடியிருப்பார். இந்தப் பாடலின் இசை அமைத்தவர் பரத்வாஜ் இந்த பாடலை பாடியவர் ரேஷ்மி.

10. என்ன சொல்ல – தங்க மகன் 

பெற்றோர்களால் திருமணம் செய்யப்பட்ட ஒரு பெண் தன் புது கணவனை நினைத்து உருகி ஒவ்வொருநாளும் அவள் நினைப்பதை பாடல்களாக பாடப்படுவது இந்த பாடல். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் இதை எழுதியவர் தனுஷ் இந்த பாடலை பாடியவர் ஸ்வேதா மோகன்

இதில் இருக்கும் எதாவது ஒரு பாடலையாவது உங்கள் ஆண் நண்பர்களுக்கு அர்ப்பணித்துப் பாருங்கள் அவர்கள் உங்கள் மேல் வைக்கும் அன்பு இரண்டு மடங்காக உயரும் இல்லையெனில் நீங்களே உங்கள் நண்பனுக்கு ஒரு புது கவிதை கொண்ட பாடலை உருவாக்குங்கள் அது இன்னும் அவர்களுக்கு உங்கள் அன்பை புரிந்துகொள்ள உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன