இந்தியாவில் ஆண்களுக்கான 10 சிறந்த பாடி வாஷ்.!

best body wash for men

ஆண்கள் தங்களை ஆரோக்கியமாக வைப்பதற்காக ஒரு காலத்தில் சோப்புகளை பயன்படுத்தி வந்தார்கள், ஆனால் இப்போது அந்த சோப்புகளை விட அதிக அளவில் நம் உடம்பில் மேல் இருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகளை போக்க உதவுவது பாடி வாஷ். இதில் ஆண்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அதை தவிர்த்து இந்தியாவில் எந்த பாடி வாஷ் மிக சிறந்தது என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்

1. டவ் ஆண்கள் பாடி வாஷ் மற்றும் பராமரிப்பு

டவ் நிறுவனத்தைப் பற்றி பெரும்பாலான ஆண்கள் அறிந்து இருப்பார்கள், இதில் இருந்து வெளிவந்துள்ள இந்த பாடி வாஷ் தான் ஆண்களுக்கான மிகச்சிறந்த பாடி வாஷ். இதில் இருக்கும் நுண்ணியல் ஈரப்பத சக்தி நம் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைக்கிறது இதனால் நமக்கு எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும் உணர்வை தருகிறது. இது நமது உடல் மற்றும் முகத்திற்கு பயன்படுத்தலாம், ஒரு நல்ல உணர்வை தரும் அளவிற்கு இந்த பாடி வாஷ் நமக்கு பயனாகிறது.

2. நிவ்யா பிவர் இன்பேக்ட் ஷவர் ஜெல்

இது ஆண்களுக்கான மற்றொரு சிறந்த பாடி வாஷ், இதை பயன்படுத்தினால் நமது உடல், முகம் மற்றும் நமது கூந்தலைக் கூட இது பாதுகாத்து நமக்கு ஓர் அழகிய தோற்றத்தை தருகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு ஒரு அற்புதமான உணர்வை தருகிறது. இது நம் சருமத்தில் ஆழமாக சென்று அழுக்குகளை நீக்குவது மட்டுமல்லாமல் ஈரப்பதத்தை தக்க வைத்து அதை வெகுநேரம் இருக்க செய்கிறது.

மேலும் படிக்க – கிளின்சிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..!

3. ஃபியாம டி வில்ஸ்

இதில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளது, போதுமான அளவு மினரல் மற்றும் நீலத்தாமரை சாரு இருக்கிறது. இதில் இருக்கும் நுண்ணியல் பொருட்கள் நம்மை எப்போதும் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்கிறது. இது நம் சருமத்தில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது அதை தவிர்த்து எப்போதும் ஒரு நல்ல நறுமணத்தை பரப்புகிறது. இந்த நிறுவனத்தில் ஏற்கனவே சோப்புகள் வெளியாகி இருப்பதினால் உங்களுக்கு இதன் பயன்பாட்டை பற்றி நன்றாக தெரிந்து இருக்கும்.

4. நியூட்ரஜனா ரெயின் பாத்

இந்த தயாரிப்பில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கின்றன இதை பயன்படுத்துவதன் மூலம் நமது சருமம் மிகவும் மிருதுவாகும் ஒரு நல்ல நிலையில் இருக்க உதவுகிறது இதைத்தவிர்த்து நம் சருமம் எப்போதும் ஒரே உணர்வுடன் இருக்க இது உதவுகிறது இதைத்தவிர்த்து நம் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை இது அதிக அளவில் போக்க உதவுகிறது இதன் நறுமணமும் மிக அற்புதமான முறையில் நம் உடல் முழுக்க பரவுகிறது. இதை பயன்படுத்தினால் உங்களைச் சுற்றி பல பழங்களின் வாசனை வந்து கொண்டே இருக்கும்.

5. ஆக்ஸ் டார்க் டெம்ப்டேஷன்

இந்த நிறுவனத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், பெண்களை கவர வேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தினால் போதும். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த பாடி வாஷ் அதிக அளவில் நறுமணத்தை வெளியிட்டு உங்களை சுற்றியுள்ளவர்களை மிக எளிதில் மயக்கி விடும் இதை தவிர்த்து இதில் நுரைகள் அதிகமாக வெளியேறி உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி உங்களை சுத்தமாக்க இது உதவுகிறது.

மேலும் படிக்க – பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா !

6. ஓல்ட்  ஸ்பைசி ரெட் ஜோன்

ஒரு தரமான பாடி வாஷ் எப்போதும் அதன் தரத்தை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட ஒரு தரமான பாடி வாஷ்தான் இது. இதை நாம் பயன்படுத்தினால் குறைந்தது 8 மணி நேரம் நம்மை பாதுகாப்பாகவும் நல்ல நறுமணத்துடன் இது வைத்துக் கொள்ளும். இது மிக மென்மையான நுறைகளை வெளியிடுவதினால் நம் சருமம் எந்த ஒரு பாதிப்புக்குள்ளாகாமல் நம்மை சுத்தம் செய்துவிடும்.

7. மேன் கேவ் செடர்வுட் பாடி வாஷ்

இந்த பாடி வாஷ் நம் சருமத்தில் இருக்கும் அசௌகரியத்தை போக்குவதற்கும் மற்றும் ஏதாவது அரிப்புகள், காயங்கள் இருந்தால் இதை நீங்கள் அதிகளவில் பயன்படுத்தலாம் இதைத்தவிர்த்து இது நம் உடம்பில் இருக்கும் அனைத்து அழுக்குகளையும் போக்கி பல மணி நேரம் நம்மை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. இதில் ஆரோக்கியமான எண்ணெய்களை கலந்து இருப்பதினால் நம் உடல் எப்போதும் மினுமினுப்பாக இருக்க இது உதவுகிறது. 

8. எவ்ரி மேன் ஜாக் பாடி வாஷ்

இந்த பாடி வாஷ் எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாகும் இதனால்தான் இதன் பெயரிலேயே இது குறிப்பிட்டுள்ளார்கள். இது உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் இதில் சில இயற்கை பொருட்களை கலந்திருப்பதினால் உங்கள் சருமத்தை மிகவும் பொலிவுடன் மென்மையாக மாற்றிவிடும்.

மேலும் படிக்க – பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

9. ஐரிஷ் ஸ்ப்ரிங் கியர் பாடி வாஷ்

எரிமலை குழம்பில் இருக்கும் தாதுக்களைக் கொண்டது இந்த பாடி வாஷ். இது ஒரு சிறந்த ஆண்களுக்கான பாடி வாஷ் ஆகும். இது நம் உடம்பில் இருக்கும் துர்நாற்றங்களுக்கு எதிராக வேலை செய்யும் இதனால் நம் உடம்பில் எந்த ஒரு தேவையற்ற மனம் வராமல் ஒரு அற்புதமான நறுமணத்தை உங்களைச் சுற்றி வீசும். இதுமட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த நேரத்தைவிட அதிக நேரம் இதன் நறுமணம் உங்களிடமே இருக்கும்.

10. ராக்டு அண்ட் டேப்பர் 

நீங்கள் குளிப்பதற்கான நேரத்தை குறைக்க விரும்பினால் இந்த பாடி வாஷ் தான் சரியான தீர்வாக இருக்கும். இது நம் தலை, முகம், உடம்பு என எல்லாவற்றையும் சுத்தம் செய்யும். இதுமட்டுமில்லாமல் இதன் வலிமையான நறுமணம் நம்மை விட்டு எளிதில் விலகாது இதனால் நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெளியே சுற்றலாம். இதில் மருத்துவ குணங்கள் இருப்பதினால் நம் உடம்பின் மேல் எந்த ஒரு கிருமிகளும் அண்டாது.

இதில் குறிப்பிட்டவை அனைத்தும் தரமான மற்றும் ஆண்கள் அதிகமாக விரும்பி பயன்படுத்தும் பாடி வாஷ். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால் அதன் தாக்கம் உங்களுக்கு நன்கு அறிந்திருக்கும் இல்லையெனில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள் நிச்சயம் உங்கள் தினசரி குளியலில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.

2 thoughts on “இந்தியாவில் ஆண்களுக்கான 10 சிறந்த பாடி வாஷ்.!”

  1. Pingback: what's the difference between a perfume and a deo

  2. Pingback: 10 best creams to treat your oily skin during winter season

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன