90களின் மிகச் சிறந்த காதல் பாடல்கள்!

1. சுந்தரி கண்ணால் – தளபதி 

இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு அழகிய காதல் பாடல்தான் இது காதல் என்பது ஒரு போராட்டம் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப் பாடல் வரிகளில் இவர்கள் படும் கஷ்டங்கள் போராட்டங்களை மிக அழகாக எழுதியிருப்பார் கவிஞர் வாலி இந்த பாடலை பாடியவர்கள் எஸ் ஜானகி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

2. காதலின் தீபம் ஒன்று – தம்பிக்கு எந்த ஊரு 

மிக எளிமையான பாடல் வரிகளைக் கொண்ட இந்த பாடல் 90களில் மிகவும் பிரபலமான ஒரு பாடல் இன்றுவரை இதை அனைவராலும் விருப்பமாக கேட்கப்படுகின்றன இதற்கு காரணம் காதல் உணர்வை மிக எளிமையாகவும் தெளிவாகவும் நம்மை உணர வைத்திருக்கிறது இந்தப் பாடல். இந்தப் பாடலை இசை அமைத்தவர் இளையராஜா இந்த பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் இந்தப் பாடலைப் பாடியவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

மேலும் படிக்க – திருமணத்தை எளிமையாக்கும் சிறந்த திருமண தளங்கள்!

3. கண்மணி அன்போடு – குணா 

மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒரு காதல் படம் எது வென்றால் இந்த படத்தை அனைவரும் சொல்வார்கள் இதில் இடம் பிடித்திருந்த மிகவும் உருக்கமான ஒரு காதல் பாடல்தான் கண்மணி அன்போடு இந்தப்பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலமடைந்து இக்காலம் வரை அனைவராலும் விருப்பமாக கேட்கப்படுகின்றன இப்பேர்பட்ட இந்த பாடலை இசை அமைத்தவர் இளையராஜா இந்தப் பாடலின் வரிகளை எழுதியவர் வாலி இந்த பாடலை பாடியவர் கமலஹாசன் மற்றும் எஸ் ஜானகி.

4. என்னை தாலாட்ட வருவாளா – காதலுக்கு மரியாதை 

காதலைப் பற்றி ஒரு தெளிவான அர்த்தத்தை துல்லியமாக எடுத்துரைக்கும் இந்த பாடல் அக்கால இளைஞர்களின் ஒரு காதல் மந்திரமாகவே பார்க்கப்பட்டது. இந்த பாடலை இசை அமைத்தவர் இளையராஜா இந்த பாடல் வரிகளை எழுதியவர் பழனிபாரதி இந்த பாடலை பாடியவர்கள் ஹரிஹரன் மற்றும் பவதாரணி.

மேலும் படிக்க – ஒருதலைக் காதலில் வாடும் பெண்களுக்கான பாடல்!

5. மலரே மௌனமா – கர்ணா 

காதல் பரிமாற்றங்களை மிகவும் அழகாக ஒருவருக்கொருவர் பாடப்படும் பாடல் தான் இந்த பாடல் இருவருக்கும் இடையில் உள்ள காதலை பேசுவதுபோல் வார்த்தைகளை அமைத்து பாடி அன்பை வெளிக்காட்டுவார்கள் இந்த படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. இந்த பாடலின் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ் ஜானகி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்த பாடலில் மிக அழகான வரிகளை எழுதியவர் வைரமுத்து.

6. புது வெள்ளை மழை – ரோஜா 

சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் அடைந்த ஒரு இளம்பெண் தன் காதலன் மேல் படிப்படியாக அன்பை கொண்டு வெளிப்படுத்துவதற்கான ஒரு பாடல் தான் இந்த பாடல். இந்த பாடலின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இதை பாடியவர்கள் உன்னி மேனன் மற்றும் சுஜாதா இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து.

7. 20 கோடி – துள்ளாத மனமும் துள்ளும் 

சில வருடங்களுக்கு முன்பு காதல் என்ற ஒரு வார்த்தை என்றாலே அனைவரும் மனதில் தோன்றுவது மனமும் மனமும் புரிந்துகொண்டு உருவாகுவதை காதல் என்பார்கள் ஆனால் இப்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக அதிக அளவு நேரங்களை செலவழிக்கிறார்கள் இது எதுவும் இல்லாத அக்காலத்தில் மிக அழகாக உருவான காதலை வெளிப்படுத்தும் பாடல் தான் இது. இந்த பாடலின் இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் இந்த பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து இந்த பாடலை பாடியவர் ஹரிஹரன்

மேலும் படிக்க – உங்கள் உள்ளத்தை கிழித்து காதல் உணர்வை தூண்டும் சிறந்த காதல் பாடல்கள்!

8. அஞ்சலி அஞ்சலி – டூயட் 

அஞ்சலி என்ற ஒரு பெண்ணை காதலித்த இரு இசைக் கலைஞன் அவளுக்காக பாடப்பட்ட ஒரு அழகிய பாடல்தான் இது கற்பனையினால் நிரப்பப்பட்டது இந்த பாடல் வரிகள். இந்த பாடலை இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான் இந்த பாடலின் வரிகளை எழுதியவர் வைரமுத்து இந்த பாடலை பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

9. வீசும் காற்றுக்கு – உள்ளாசம் 

அஜித் குமார் நடிப்பில் வெளியான அழகிய காதல் படம்தான் இது இதில் அமைந்திருக்கும் காதல் பாடல் மிகவும் அழகானது இருவர் சேர்ந்து ஒரு பெண்ணை காதலிப்பார்கள் இவர்கள் தன் காதலியை எவ்வாறாக நினைத்து காதலித்தார்கள் என்பதை பாடலாக வெளிப்படுத்துவார்கள். இந்த பாடலை இசையமைத்தவர் கார்த்திக் ராஜா இந்த பாடலின் வரிகளை எழுதியவர் பழனிபாரதி இந்த பாடலை பாடியவர்கள் ஹரிணி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

10.  மாலை என் வேதனை – சேது 

ஒரு அக்ரஹாரத்து பெண்ணை காதலிக்கும் இளைஞன் படும் கஷ்டத்தையும் அவள் மேல் உள்ள காதலையும் மிக அழகாகவும் ஆழமாகவும் பாடியிருப்பார் இந்தப் பாடலில். இந்த பாடலை இசை அமைத்தவர் இளையராஜா இந்த பாடலை பாடியவர்கள் உன்னிகிருஷ்ணன் மற்றும் அருள்மொழி இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் அறிவுமதி.

இதில் இருக்கும் அனைத்து பாடல்களும் அக்காலத்தில் காதலர்களால் அதிகளவு கேட்கப்பட்ட பாடல்களை தவிர்த்து இன்றுவரை இந்த பாடல்களில் ஏகப்பட்ட காதல் உணர்வுகள் இருப்பதினால் இது எப்போதும் அழியாத ஒரு அற்புதமான பாடலாக திகழ்ந்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன