காதல் தோல்வி அடைந்தவுடன் பார்க்க வேண்டிய சிறந்த 7 திரைப்படங்கள்.!

காதல் தோல்வி

காலை உணவை உட்கொள்வது போல், இரவில் தூங்கச் செல்வதை போல், நண்பர்கள் கிடைப்பதுபோல், ஏமாற்றங்கள் அடைவதைப் போல், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு சம்பவம்தான் காதல் தோல்வி. இதை கடந்து வராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதுவரை நீங்கள் காதல் தோல்வியை சந்திக்காமல் இருந்தால் மிக விரைவில் காதல் தோல்வியை சந்திக்க நேரிடும், அப்படி சந்திக்காமல் போனால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உணர்ச்சிமயமான ஒரு அனுபவத்தை பெறாத துரதிஷ்டம் உங்களுக்கு இருக்கிறது.

வலியுடையது காதல் தோல்வி

காதல் தோல்வி மிக ஆழமான வலியைத் தரும். இதிலிருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம். காதல் தோல்வியினால் எந்த விதமான பாதிப்புகளை ஒரு ஆண் அல்லது பெண் பெறுகிறார்கள் என்பதை பல திரைப்படங்கள் மூலமாக நமக்கு காண்பிக்கிறார்கள். ஆனால் இதுபோன்று காதல் தோல்வியில் இருந்து எளிமையான முறையில் வெளியேறுவதற்கான வழிகளை ஒரு சில படங்களிலேயே நமக்கு உணர வைத்துள்ளார்கள். அதுபோல் உங்கள் காதல் தோல்வியிலிருந்து வெளியேறுவதற்காக உதவும் ஒரு சில காதல் தோல்வி படங்களை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – 15 அழகான தமிழ் காதல் வரிகள்! Tamil Love Lines

காதல் -பாலாஜி சக்திவேல்

2007ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் பரத் மற்றும் சந்தியா நடித்து வெளியான திரைப்படம் தான் காதல். இளம் வயதில் பள்ளிக்குச் செல்லும் பெண்ணுக்கும் அதே ஏரியாவில் மெக்கானிக்காக வேலை செய்யும் முருகனுக்கும் இடையே ஏற்படும் முதல் காதலை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இது. இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதினால் இவர்கள் காதலை பிரிந்து இறுதியில் எந்த விதமான சூழ்நிலையில் இணைகிறார்கள் என்பதை தத்ரூபமான முறையில் படமாக்கியிருப்பார் பாலாஜி சக்திவேல்.

மதராசபட்டினம் -ஏஎல் விஜய்

சுதந்திரம் கிடைப்பதற்கு முன் சென்னையை ஆங்கிலேயர்கள் ஆட்சி அமைத்திருந்தார்கள். அப்பொழுது துணி துவைக்கும் தொழிலை செய்து வந்த ஒரு ஏழ்மையான இளைஞனுக்கும், ஆங்கிலேய ஆட்சியில் இருக்கும் அதிகாரியின் மகள் இருவருக்கும் ஏற்படும் உணர்வுபூர்வமான காதலைப்பற்றி சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இது. இறுதியில் இவர்களின் காதல் எந்த விதமான மாற்றத்தை இவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளது என்பதை பழங்கால அமைப்புடன் அருமையாக சொல்லியிருக்கும் படம் இது.

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காதல் வரிகள்!

சேது -பாலா

காதல் வெறித்தனமானது என்பதை உணர்த்தும் படம்தான் சேது. முரட்டுத்தனமான ஒரு இளைஞன் அவனுக்கு எதிராக எப்போதும் அமைதியாக இருக்கும் அக்ரஹாரத்து பெண்ணின் மேல் காதல் வயப்படுகிறான். இதை சொல்லும்விதமாக இருக்கட்டும் அவன் காதலை வெளிப்படுத்தும் செயல்களாக இருக்கட்டும், என அனைத்தும் முரட்டுத் தனமாகவே இருக்கும். இறுதியில் இவர்கள் காதல் என்னவானது என்பதை வலிமிகுந்த திரைக்கதையில் சொல்லியிருப்பார் இயக்குனர்.

ஆட்டோகிராப் -சேரன்

காதலின் முப்பரிமாணம் என்ற இந்த படத்தை சொல்லலாம். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல், திருமணத்தில் ஏற்படும் காதல் வரை எல்லாவற்றையும் தத்ரூபமான முறையில் சொல்லியிருப்பார் இயக்குனர் சேரன். அக்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது இத்திரைப்படம்.

தளபதி -மணிரத்னம்

மணிரத்னம் படங்களில் காதலை வெவ்வேறு விதமாகவும் வெவ்வேறு பரிமாணங்களிலும் நமக்கு சொல்லி இருக்கிறார். அதில் இளம்பெண் மற்றும் அவளை விட பாதி வயது மூத்தவரான அடிதடி செய்யும் நாயகன் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல், தொடங்கிய சில மாதங்களிலேயே பிரிந்து அந்த நாயகனின் உடன்பிறந்த சகோதரனை திருமணம் செய்து கொள்கிறாள் அந்தப் பெண். இப்படி மனதை புண்படுத்தும் கதையைக் கொண்ட இந்த வாலிபன் காதல் தோல்வியை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை உணர்த்தும் படம்தான் இது.

மேலும் படிக்க – சுவாரசியமான தமிழ் சிறுகதை காதல் வரிகள்!

96 -பிரேம்குமார்

கடந்த வருடம் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்திய திரைப்படம்தான் 96. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட அழியாத காதல் காலப்போக்கில் ஆழமான காதலாக மாறியதை இனிமையான இசையுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இது.

விண்ணைத்தாண்டி வருவாயா -கௌதம் மேனன்

ஹாலிவுட் திரைப்படங்களில் தான் நாம் காதல் தோல்வியை முழுநேரமாக பார்த்திருப்போம். அந்த வகையில் முதன் முதலில் தமிழில் ஒரு முழுநீள காதல் தோல்வி படமாக வெளிவந்தது விண்ணைத்தாண்டி வருவாயா. இதை பார்த்தவுடன் பலருக்கும் நம் வாழ்க்கையிலும் இதுபோல்தான் ஏற்பட்டுள்ளது என்ற உணர்வை தந்தது தான் இந்த படத்தின் வெற்றி.

காதல் தோல்வியை உணர்த்தும் இந்த திரைப் படங்களை தவிர்த்து ஏராளமான படங்கள் இருக்கின்றன. ஆனால் காதல் தோல்வி ஒருவரை எந்த அளவுக்கு பாதிக்கச் செய்யும் என்ற உணர்வை அனுபவித்தால் தான் நமக்கு புரியும். எனவே அப்பேர்ப்பட்ட அனுபவத்தைப் பெற்று, மீண்டு வர முடியாமல் தவிப்பவர்கள் தங்களை சாந்தப்படுத்துவதற்காக இதுபோன்ற படங்களைப் பார்த்து உங்கள் காதல் தோல்வியை கடந்து வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன