கொரானாவுக்கு மருந்து குறித்து ஆயுவுகள் !

  • by

ஊரெல்லாம்  கொரானா பீதி  ராணுவம் வருகின்றதென்ற ஒரு பயம் ஒருப்பக்கம். நோயை தடுக்க அரசு தீவிரமாக குறிப்பிட்ட சில வீடுகளுக்கு நேரடி பயணம் என தமிழ்நாட்டில் திரும்பும் வீதெயால்லாம் சுத்தம் செய்தல், போலீஸ் நடமாட்டம் என கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரனாவை ஒழிக்க பல்வேறு ஆய்வுகள் மருந்துகள் குறித்துப் பேச்சாக உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் விஷால் ராவ் கொரானாவுக்கு எதிரான  தனது மருத்துவ ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

மேலும் படிக்க: நாடு முழுவதும் முடக்கத்தில் இருக்கும் பொழுது காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை எப்படி திட்டமிட்டு பயன்படுத்துவது..!

புதிய மருந்துக்கான ஆய்வறிக்கை:

COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக இருக்கும் போஷனைக் கண்டுபிடிப்பதில் பெங்களூரு அடிப்படையிலான புற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை கொண்டுள்ளார். டாக்டர் விஷால் ராவ் கூறுகையில், “மனித உடல் செல்கள் வைரஸ்களைக் கொல்ல இன்டர்ஃபெரான் ரசாயனத்தை வெளியிடுகின்றன. ஆனால் COVID-19 வழக்குகளில் இது உயிரணுக்களால் வெளியிடப்படாது, இது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுக்கிறது. COVID-19 இல் இன்டர்ஃபெரான் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கும் சில முன்கூட்டியே நாங்கள் பிடித்துள்ளோம். ” அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் வழக்கமான பரிசோதனைகளுக்காக இரத்தத்தைத் திரும்பப் பெறும்போது, ​​எங்களுக்கு பஃபி கோட் கிடைக்கிறது, இது செல்களை வெளியே எடுத்து இன்டர்ஃபெரான் உருவாக்க பயன்படுகிறது. 

இந்த இரண்டு இரசாயனங்கள் மற்றும் வேறு சில சைட்டோகைன்கள், ஒரு குறிப்பிட்ட கலவையில், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். COVID-19 நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு செலுத்தக்கூடிய சைட்டோகைன்களின் கலவையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், இந்த வார இறுதியில் அதன் முதல் தொகுப்போடு தயாராக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். விரைவான மறுஆய்வுக்கு நாங்கள் அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம். ”

 என டாக்டர் தெரிவித்துள்ளார். கொரானாவால்  நாம் காக்கப்படுவோமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்க நான் மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்ற ஒரு மருத்துவர் கூறும் சொற்கள் ஆறுதலாக இருக்கின்றது. நம்பிக்கையுடன் இதனை நாம் எதிர்நோக்குவோம். கொரானாவாது, இந்தியாவை தாக்குவதாவது என்ற தைரியம் நமக்கு இப்போ தேவையானது ஆகும். 

கொரனாவால் மனக்குழப்பம்:

என்னதான் நாம் தைரியமாக இருந்தாலும் அதிகம் பார்க்கும் செய்திகள் நம் மனதை நமக்கே தெரியாமல் பதம்பார்த்துவிடுகின்றன. ஆதலால் நாம்  இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருத்தல் என்பது அவசியம் ஆகும். 

நம்மை அறியாமலே கொரானா பீதி நம்மை தம்மை தாக்குகின்றது. இது மிகவும் முக்கியமானது ஆகும்.  நாம் இதனை முழுமையாக உணர வேண்டியது அவசியம் ஆகும். கொரனா தடுப்பு மருந்தானது இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை ஆனால் சித்த மருத்துவம் போன்றவை கொரனா  தொற்றிலிருந்து நம்மை காக்க எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சில கசாயங்களை பரிந்துரைகின்றனர். இது அடிப்படையான சளியை அகற்றும் உடலில் உள்ள சளிக் கழிவை நீக்கும. கழிவு குறைவானால் உடலில் ஆற்றல் பெருகும் பொழுது சளியானது முழுமையாக இருக்காது. எந்த  நோய்த் தொற்றும் இருக்காது. 

மேலும் படிக்க:கொரோனா வைரஸினால் ஏற்படும் பதற்றத்தை எப்படி குறைப்பது..!

மிளகு ரசம்:

தமிழ்நாட்டில்  பெரும்பாலான வீட்டில் தினமும் மிளகு, சீரகம், பூண்டு,  சின்ன வெங்காயம், கொத்துமல்லி இலை, மல்லி விதை, பெருங்காயம், வரமிளகாய்,  கறிவேப்பிலை, தக்காளி, புளி மசித்து புளிப்பு மசித்து தேவையான தண்ணீரில் புளி தக்காளி கரைத்து அதனுடன் சீரகம், பூண்டு, மல்லி ஆகியவற்றை நன்றாக அரைத்து புளித்தண்ணீரில் கரைத்து  அதில் தேவைப்படும் மஞ்சள் சேர்த்து வைக்க எட்டு வீடு மணக்கும் ரசம்.

உடலில் எத்தனிக்கும் அதனை வியாதிக்கும் இது  தீர்வாக இருந்து உடலை வலுவாக்கும். சளியை முழுமையாக குறைக்கும்.  ஜீரண கோளாறு சீராகும். தினமும் நாமும் வைக்கும் காய்கறி, சாம்பாருடன்,ரசம் வைத்தாலே  ஊருக்குள் எந்தவியாதியும் நம்மை அண்டாது. ஆனால் இன்று இதனைப் பலரும் பின்ப்பற்றுவதில்லை. ரசத்தின் மதிப்பு பலருக்கு தெரிவத்தில்லை. தெரிந்தவர்கள் ரசத்தை விடுவதில்லை. 

மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் முகமூடியின் அவசியம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன