வாழ்வில் யோகம் பெற யோகா செய்யுங்க

  • by

யோகசனமானது வாழ்வில் மிகமுக்கியமானது ஆகும். இந்தியாவின் பிறப்பிடமாக யோகா திகழ்கின்றது.  யோகா தினமும் முறையாக செய்து வந்தால் வாழ்க்கை முழுவதும் வளமாக வாழலாம். யோகா உலகம் முழுவதும் பிரபளயம் ஆகி வருகின்றது.  ஜூன் 20 இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 

யோகா பாரம்பரியம்: 

யோகா உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும். நமது இலக்குகளை அடைய  வைக்கும். ஒருவன் வாழ்வில் வெற்றி பெற்று திறம்பட வாழ வேண்டுமானால் அதற்கு உடலும் மனசும் வலிமையாக ஆரோக்கியமாய இருக்க வேண்டும். உடலும் மனசும் ஆரோக்கியமாய்  இருக்க உணவு எவ்வளவு அவசியமோ அதைப் போல் யோகாவும் அவசியமானது ஆகும். 

நாம் வாழ்வில்  அனைத்து செயல்களிலும் யோகா உண்டு, குணிந்து கூட்டுதல் மற்றும் கோலம் போடுதல்,  தண்ணீர் குடம் இடுப்பில் வைத்து எடுத்தல் மற்றும் தூங்குவது முதல் சாப்பிடுதல், உடல் கழிவை வெளியேற்றும் இந்திய  முறையான கழிப்பறை முறை வரை என அனைத்தும் யோக முறைப்படி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 


மேலும் படிக்க: அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.!

யோகம் நிறைந்த இந்திய வாழ்க்கை: 

யோகம் நிறைந்தது இந்திய வாழ்க்கை அதனை முறையாக பின்பற்றினால் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம். துவைப்பது, கூட்டுவது, சமைப்பது, கோலம் போடுவது, வீடு கழுவுதல், மாசாலா ஆட்டி வைப்பது,  உரலில் குத்தி நெல் புடைத்தல் ஆகிய அனைத்தும் சிறந்த அடிப்படையான யோகமுறைகள் என்றாலும் சூரிய நமஸ்காரம், இறைவனை கைகூப்பி வழிபாடு செய்தல், சம்மணங்கால் இட்டு அமர்தல் கார்களை தரையில் நிறுத்தி அமர்தல், பற்களை தேய்த்தல், குத்த வைத்து அமர்தல்  போன்றவற்றை எல்லாம் நமது வாழ்வை வளப்படுத்துகின்றன. இவையெல்லாம் எலும்புகளை பலப்படுத்துவது, மூட்டுகளை முறையாக இயக்குவது, கைகளுக்கு வலூவூட்டல் போன்ற அனைத்து வேலைகளுக்கும் சிறப்பான பயன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மேலும் படிக்க: பிரணயமா செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

உடலை சீராக வைக்க யோகா முத்திரைகள்:

கை கூப்பி வணங்கும் பொழுது நமது மூளை பல்ப்படும் எண்ணங்கள் ஒரு நிலையில் இருக்கும்.  தோப்புக்கரணம் போடுதல், தீப ஆராதணை செய்தல் போன்றவை எல்லாம் இரு மூளைகளை இயக்குகின்றன இவை தொடர்ந்து செய்யும் பொழுது மனம் ஒரு நிலையில் இருக்கும். மகிழ்ச்சியானது  பொங்கும். 

குழந்தைகள் படிக்க ஹாக்கினி முத்திரா வைத்து  தினமும் வைத்தால் உடல் ஆரோக்கியம் ஆகின்றன. உடலின் எடை சீராக இருக்க யோகா ஒரு அருமருந்தாக இருக்கின்றது.  உடல் உறுப்புகள் சீரான இயக்கத்தை கொண்டு இயங்குகின்றன. 

மூச்சுப் பயிற்சி: 

மூச்சுப் பயிற்சியானது முறையாக செய்யும் பொழுது கழிவுகள்  அனைத்து முறையாக வெளியேறும். தோல்வியாதிகள் குணமாகும். மலச்சிக்கல்கள் சரியாகும். உடலில் உள்ள வாதம், பித்தம்,  கபம் ஆகிய அனைத்தும் சீராகும். உடலில் உள்ள வெப்பமானது குறையும். 

ஆசனங்கள்:

சூரியனுக்கு நன்றி கூறி செய்யும் சூரிய நமஸ்காரம் உடலில் உள்ள 7 சக்கரங்களை சீராக்குகின்றது.  வஜ்ராசானா ரத்த ஓட்டத்தை சீராக்கும். மனதை அமைதிப்படுத்தும், உடலில் பிடனஸ் குறையாமல் இருக்கும்.   உடலில் ஏற்படும் வலியானது குறையும். 

தொந்திகள் குறைப்புடன் வலி நிவாரணியாகவும் இந்த  யோகா வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  நடராஜ ஆசனா செய்தல் வாழ்வில் தண்டு வடம் சார்ந்த சிக்கல்கள் வராது. சுஹாசானா இது படுக்கையில் உக்காந்து கொண்டு கால்களை குறுக்கி செய்யும் ஒன்றாகும்.  சுஹா ஆசனம் செய்யும் பொழுது உடலில் உள்ள ஆற்றல்கள் எல்லாம் அதிகரிக்கின்றது. 

பாலாசனம்  செய்யும் பொழுது உடலில் இருக்கும் மன அழுத்தமானது  குறையும் 

இது போன்ற பல  நன்மைகளை எல்லாம் யோகா கொண்டுள்ளது இதனைப் பின்பற்றி வாழ்வியலில்  ஒன்றாக யோகாவை உருவாக்குங்கள் நன்மைகள் பல பெறலாம். உடலும் மனதும் ஆரோக்கியம் பெறும். 


மேலும் படிக்க: தலை முடியை வளர வைப்பதற்கான யோகாசனம்.!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன