வீட்டில் இருந்து வேலை செய்வது எவ்வளவு முக்கியம்..!

  • by
benefits of working from home

கரோனா வைரஸ் தாக்கத்தினால் மிகப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிலாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுள்ளனர். இதனால் இவர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் வேலைகளை வீட்டிலிருந்தே தொழில்நுட்ப உதவியுடன் செய்வார்கள். இதை தவிர்த்து இணையம் வசதி மூலமாக அவர்கள் குழுவாக சந்தித்து தங்கள் வேலைகளைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள். இது எந்த அளவிற்கு சாத்தியமானது என்பதை காணலாம்.

வீட்டிலிருந்து செய்யப்படும் வேலை

வீட்டிலிருந்து நீங்கள் வேலை செய்வதன் மூலமாக உங்களுக்கு பிடித்த மற்றும் சவுகரியமான இடத்தில் அமர்ந்து உங்கள் வேலைகளை செய்யலாம். மொட்டைமாடி அல்லது உங்கள் படுக்கை அறைகளில் அமர்ந்து, படுத்துக் கொண்டு உங்கள் வேலைகளை உங்களுக்கு பிடித்த நிலையில் செய்யலாம். இதனால் உங்களின் மன பதட்டம் குறைந்து உங்கள் வேலையில் கவனத்தை செலுத்த உதவும்.

மேலும் படிக்க – பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறைகள்..!

குடும்பங்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்

வீட்டில் இருந்து செய்யப்படும் வேலையினால் நீங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக இருப்பீர்கள். இதனால் காலையில் சென்று, இரவில் பார்க்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை எந்நேரமும் பார்த்து உங்களுடன் அவர்கள் நேரத்தை கழிக்கும் வசதிகள் இந்த வீட்டில் இருந்து செய்யப்படும் வேலையில் கிடைக்கிறது.

எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்

இதன் மூலமாக உங்கள் வேலை நேரத்தை விரைவாக முடித்துக்கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதைத்தவிர உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்.

உள்ளே, வெளியே நேரம் கிடையாது

நீங்கள் அலுவலகத்திற்கு சென்றால் காலை 10 மணிக்கு உள்ளே நுழைந்து விட்டோம் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். பின்பு எப்போது வெளியேறினீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் வீட்டில் இருந்து செய்யும் வேலைகளில் இருக்காது. எனவே நீங்கள், உங்கள் வேலைகளுக்கு தேவையான நேரங்களில் முடித்துக் கொண்டு மற்ற நேரங்களில் உல்லாசமாக இருக்கலாம்.

பாதிப்புகள் ஏதும் இல்லை

கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுக்க இருக்கும் காரணம், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்கள் தழுவதன் மூலமாக அந்த வைரஸ் தொற்று எல்லோருக்கும் பரவி உள்ளது. ஆனால் நம் வீட்டில் இருந்து செய்யப்படும் வேலைகளினால் இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடியும்.

மேலும் படிக்க – மர்மங்கள் நிறைந்த பூமி!!!

பணம் மற்றும் நேரம் மிச்சமாகும்

தினமும் அலுவலகத்திற்கு செல்லும் நேரம் மற்றும் அதற்காக செலவு செய்யும் பணம் அனைத்தும் வீட்டில் இருந்து செய்யப்படும் வேலைகளினால் மிச்சமாகும். இதைத் தவிர்த்து அலுவலக நேரங்களில் நீங்கள் வெளியே சாப்பிடும் சூழல் ஏற்படும். இதையும் தவிர்த்து நீங்கள் வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

எதிர்காலத்தில் இது போன்ற வேலைகள் தான் எல்லோரும் செய்வார்கள். தேவையில்லாமல் அலுவலர்களுக்கு செலவுகள் செய்யாமல், எல்லோரையும் வீட்டிலிருந்து வேலைகளை செய்ய அறிவுறுத்தலாம். இதன் மூலமாக வேலைகளும் நிறைவடையும், நிறுவனத்தின் லாபமும் பல மடங்காகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன