ராசிக் கற்களை அணிவதால் ஏற்படும் நன்மைகள்..!

  • by
benefits of wearing gem stones in life

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஏற்றார்போல், ஒவ்வொருவிதமான ராசி கற்களை நாம் அணிவதன் மூலமாக நமக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் நீங்காமல் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறுகிறார்கள். நாம் பிறக்கும்  மாதம் மற்றும் நட்சத்திரத்தை பொருத்து நம்முடைய ராசி அமைகிறது, மேஷம், ரிஷபம் என பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு ஏற்றாற்போல் ராசிக் கற்களை அவர்கள் அணிய வேண்டும். இதன் மூலமாக அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தடுத்து என்றும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என ராசிக்கற்கள் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மாணிக்கம் 

மாணிக்கக்கல் சூரியனை சார்ந்ததாகும், இது சிம்ம ராசி காரர்களுக்கு உகந்த கல்லாகும். ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் தோல்விகள் மற்றும் சோதனைகளை போக்கி அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆற்றலை அளிக்க வல்லது இந்த மாணிக்கக் கல். மாணிக்கக்கல் அனிவதின் மூலமாக சூரிய ஒலிகளின் கதிர்வீச்சு நேரடியாக அதில் சென்றடைகிறது. இதனால் உடலுக்குல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குளிர்ச்சியால் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் வரவிடாமல் தடுக்கிறது. ஒரு மனிதனின் தவறான வீதியை சமாளித்து செழிப்பாக வாழ்வதற்கே இதுபோன்று கற்கள் உதவியாக இருக்கிறது.

உங்கள் ராசிக்கேற்ப எந்த வண்ண கல்லை அணிவது என்பதில் குழப்பமா? அதை தெரிந்துகொள்ள எங்கள் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுங்கள்

முத்து 

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான பொருள், கடலில் வாழும் ஒரு வகையான உயிரினங்கள் மூலமாக கிடைக்கக் கூடியதுதான் முத்து. இதை கடக ராசிக்காரர்கள் அணியலாம், ஆனால் ஜோதிடப்படி இதை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து நம் உடலில் பட்டு கரயத் தொடங்கிவிடும் இதனால் உடலில் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் குறைந்து நாம் என்றும் ஆரோக்கியமாக இருப்போம். முத்து உங்கள் இளமையை காக்கும், அதைத் தவிர்த்து நெஞ்செரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகளை தீர்க்கும்.

மேலும் படிக்க – ஜோதிடரை பார்ப்பதற்க்கான 7 காரணங்கள்..!

பவளம் 

பவளம் என்பது சிகப்புக்கல் என்பார்கள், இது பார்ப்பதற்கு சிகப்பாக இருப்பதினால் தலைமைப் பொறுப்பில் இருக்க நினைப்பவர்கள் இந்த கற்களை அணியலாம். அதுமட்டுமல்லாமல் கோபம், பயம் போன்றவைகளை தடுத்து எப்போதும் தன்னம்பிக்கையாக வைத்துக் கொள்ளும். இதை மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் அணியலாம்.

வைரம் 

வைரக் கற்கள் பாலுணர்வு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும், சருமப் பிரச்சினையையும் வரவிடாமல் தடுக்கும். ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வைரத்தை அணியலாம். இதன் மூலமாக அவர்களுக்கு வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவைகள் கிடைக்கும். அதை தவிர்த்து மகிழ்ச்சி, யோகம் மற்றும் நல்ல வசீகரத்தையும் அளிக்கும்.

மரகதம் 

மரகத கல் சோம்பல், தூக்கமின்மை, பசின்மை, கண், நரம்பு, முதுகு தொடர்பான கோளாறு போன்ற நோய்களை தீர்க்கும். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் இதை அணியலாம். இதனால் அதிர்ஷ்டம் மற்றும் தொழில் விருத்தி அதிகரிக்கும். நாம் மரகத கல்லை உற்று நோக்கினால் நமக்குள் புத்துணர்ச்சி கிடைக்கும். இதைத் தவிர்த்து பேச்சாற்றல் அதிகரித்து உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

புஷ்பராகம் 

புஷ்பகரம் அனிவதினால் கல்லீரல் பிரச்சனை, கழுத்து வீக்கம், தைராய்டு சுரப்பி, வயிறு கோளாறு மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் இந்தக் கல்லை அணியலாம். மன நிம்மதி மற்றும் நல்ல செல்வத்தை அளிக்கக் கூடியதுதான் இந்த புஷ்பகரம் கல்.

மேலும் படிக்க – எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

நீலம் 

நீலம் என்பது விஷ்ணுவின் நிறம், சனீஸ்வரன் ஆற்றலை பிரதிபலிக்கும் அதிர்ஷ்டக்கல் தான் இந்த நீலக்கல். இது கத்திரிப்பூ கதிர்களை வெளி கொண்டது. இதனால் சனி கிரகத்தினால் ஏற்படும் தோல் வியாதிகளை வர விடாமல் தடுக்கலாம். மூளைக் கோளாறு, மூட்டு வலிகள் மற்றும் ரத்தத்தில் இருக்கும் விஷத் தன்மை போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கல் உதவுகிறது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இந்த கற்களை அணியலாம்.

கோமேதகம் மற்றும் வைடூரியம்

கோமேதகம் ரத்தினம் அணிவதனால் வாயுக் கோளாறு மற்றும் பாலியல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். வைடூரிய கற்கள் மூலமாக சளி பிரச்சினைகளை நம்மால் தடுக்க முடியும். அதை தவிர்த்து கபம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

எனவே உங்கள் ராசிக்கு ஏற்ப கற்களை ஜோதிடர்களின் அறிவுரைப்படி அணிந்தால் உங்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உறுப்பு சார்ந்த பிரச்சனை அனைத்தையும் தீர்க்க முடியும். இதுபோன்ற பதிவுகளில் மேலோட்டமாகவே கூறப்படுகிறது, எனவே ராசி கற்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு நாம் சிறந்த ஜோதிடரை அணுக வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன