ரம்மியமான வாழ்க்கை வாழ ரத்தினங்கள்

  • by

நவரத்தின கற்க்ள் அவற்றின் நன்மைகள் பற்றி நாம் அறிவது அவசியம்  ஆகும். நவரத்தினங்கள் ராசிகளுக்கு ஏற்ப பலனை தரும். எந்த ராசிக்கு எந்த கறகள் பயன்படுத்துவது என்பதை அறிந்து செயல்படுதல், நாம் நினைத்த சிறந்த வேலை வாய்ப்பு பண வசியம் ஆகியவை பெற வைக்கும்.

நவரத்தினங்கள் மொத்தம் 9 உள்ளன.  முத்து பவளம், கோமேதகம், மாணிக்கம், புஷ்பராகம், வைடூரியம்,  மரகதம், நீலம் ஆகியவை அடங்கும். இவைகள் ஒவொன்றுக்கு சில சக்திகள் உள்ளன. 

மேலும் படிக்க – குபேர பூஜை எப்படிசெய்வது, அதனால் கிடைக்கும் நன்மைகள்..!

ரத்தினங்கள்:

ரத்தினங்கள் சில  தாதுக்கள் குறைவதால் நோய்கள் ஏற்படும் அதேபோல் சில  தாதுக்கள் தேவையை விட அதிகமானால் நோய் வரும் இரண்டையும் சமமாக கொண்டு செல்வது  நமது கையில் உள்ளது. தாதுக்களை உடலில் சம நிலையில் வைக்கும் சத்துக்கள் அனைத்தும்  நவரத்தினங்கள் கொண்டுள்ளன. 

நவரத்தினங்கள்

 ராசிக்கேற்ற கற்கள்:

நீங்கள் பிறந்த நேரம் ராசிக்கு ஏற்ப கற்கள் பிரித்து  தேர்ந்தெடுப்பார்கள். நம உடலினை பாதுகாக்க நகையாகவோ ரத்தினங்களாகவோ அணிந்து கொள்தல் அவசியம் ஆகும். 

 கற்களுக்கு கிரக வலிமையுண்டு இது மக்களுக்கு  தேவையான ஆற்றலை கொடுக்கும் 

மாணிக்கம்: 

மாணிக்கம் இயற்கையிலேயே சிவப்பு நிறம் கொண்டது. மாசற்ற மாணிக்கம்  பொருட் செல்வத்தை கொடுக்கும். அருளும் பெறலாம். முகத்தின் வசீகரம் அதிகரிக்க இது உதவும். 
மயிலின் கழுத்து வண்டுகளின் இறகு சிவபெருமானின் கழுத்து திருமாலின் உடல் வானத்தின் வண்ணம் ஆகியன போன்ற நீலம் போன்றவை தரத்தில் மிக உயர்ந்த நீல ரத்தினமாகும் . பொருத்தமுள்ளவர்கள் நிர்மலமான நீலத்தை அணிந்தால் நீண்ட ஆயுள் பெறலாம் . நிம்மதியான வாழ்வு பெறலாம் நீடித்த செல்வ வளம் பெறலாம் .

மரகதம்:

நவரத்தினங்கள்

மயிலின் தோகை பச்சை கிளியின் இறகு புதிய பசும்புல் பாசிக்கொத்து வாகை மலர் ஆகிய நிறங்களை உடைய மரகதம் சிறந்தவை ஆகும். . 

குற்றமற்ற நல்ல மரகத கல்லை பொருத்தமானவர்கள் தகுதியுடையோ  அணிந்து கொண்டால் பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடுவர் . உடலிலுள்ள நச்சு தன்மை மாறலாம் . 

மேலும் படிக்க – கேரளாவில் கண்ணகிக்குக் கோயில் எடுத்த சேர மன்னன்.!

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படும் . தளராத உறுதி ஏற்படும் . பாவங்களை போக்குவதில் பச்சை மரகதம் சிறந்தது என்று ரத்தின பரீட்சை நூல் கூறுகிறது . 

வைரம் :

வைரத்தை நகைகளில் பதித்து அணிந்தால் வாழ்க்கையில் முன்னேற்ற ஒளி ஏற்படும்..அதன்படி அதனை நாம்   வாங்கி அனியும் பொழுது உடல் வலிமை அதிகரிக்கும். மனம் வலிமை பெருகுவதற்கு இது உதவியாக இருக்கும்.  பொருத்தமில்லாதவர்கள் வைரத்தை அணிந்தால் மனக்குழப்பம் – நரம்பு தளர்ச்சி – மலட்டு தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது 

புஷ்பராகம் :

பொன்னிறமான கனமுள்ள  பளபளப்புள்ள தூய்மையான பருமனான தலை போல் வட்ட வடிவமான நெருப்பு துண்டு போன்று ஒளி பரப்பும் தன்மை கொண்ட புஷ்பராகத்தை ஆற்றல் மிகுந்தது. இது .ஆண்மையை பெருக்கி அழகையும் வலிமையையும் தரும் வல்லமை கொண்டது புஷ்பராகம்  ஆகும்.

வைடூரியம் :    

வெண்மேகம் போன்ற புகை போன்ற கருநிறம் கலந்த வெண்மையான , வெள்ளி இழையோடிய , பச்சை கலந்த வெண்ணிறமான , கருப்பு நிற நூல் ஓடிய வைடூரியம் மிக சிறந்தது . நன்மை தரும் வைடூரியத்தை பொருத்தமானவர்கள் அணிந்து கொண்டால் செல்வப்பெருக்கும் புகழும் பெறுவார்கள் . உடலில் ஒருவித மினுமினுப்பும் கவர்ச்சியும் ஏற்படும் . 

மேலும் படிக்க – சிவலிங்கத்தில் இருக்கும் வகைகள்..!

கோமேதகம் :

தேன்துளி அல்லது கோமூத்திரம் எனும் பசுவின் சிறுநீர் போன்ற நிறமுள்ள கோமேதகம் சிறப்பானது . இந்நிறம் தவிர மாறுபட்ட நிறமுள்ள கோமேதகம் குற்றமுள்ளதாகும் . அணியத்தக்கதல்ல .

பொருத்தமான கோமேதகத்தை அணிந்தால் நோய்கள் ஏற்படாது . இதயம் வலிமை பெரும் உடல் வசீகரம் பெறும் . செல்வச்செழிப்பு ஏற்படும் . 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன