முகம் மற்றும் சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின்-ஈ மாத்திரைகள்.!

benefits of using vitamin e capsules for face and skin health

நமது முகம் மற்றும் சருமம் அழகாவதற்காக நாம் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். அதில் பெரும் பங்கு முகத்தில் துனியை சுற்றிக்கொண்டு சூரிய ஒளியில் இருந்து தப்பிப்பதற்காக பலபேர் மத்தியில் வேடிக்கை பொருளாக நாம் மாறுகிறோம். இது அனைத்திற்கும் தீர்வாக நாம் தினமும் ஒரு வைட்டமின்-ஈ மாத்திரையை சாப்பிட்டால் போதும். இதன் விலை அதிகமாக இருக்கும் என்ற பயம் வேண்டாம். இதன் விலை ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரைதான்.

வைட்டமின்-ஈ என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களில் இதை பார்த்திருப்போம். ஆனால் இதை தனியாக வாங்கி பயன்படுத்த தவிர்த்து இருப்போம். இதற்கு காரணம் நமக்குப் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை.

மேலும் படிக்க – பாதாம் எண்ணெயை பயன்படுத்தி பாலீஸ் ஆகுங்கள்!

நம் சருமம் பொலிவுடன், அழகாக இருப்பதற்கு மிக முக்கியமான ஒன்றுதான் வைட்டமின்-ஈ. இதை அழகு சாதன பொருட்களில் கலந்து நூறு மடங்கு விலையை ஏற்றி நமக்கு விற்கிறார்கள். இதையே நம் மருந்தகத்திற்கு சென்று வெறும் இரண்டு ரூபாய்க்கு இந்த மாத்திரையை பெற்று நம் முக அழகை மேற்கொள்ளலாம்.

வைட்டமின்-ஈ எண்ணெய் வடிவில் மற்றும் மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றன. இது நமக்கு பல்வேறு பலன்களை தருகிறது. நமது முகம், கை, கால்கள், தலை, முடிகள் போன்ற அனைத்திற்கும் இதை நாம் பயன்படுத்தலாம். இதனால்தான் இது நமது அழகு மற்றும் சருமத்தை மேம்படுத்தக்கூடிய மிகச்சிறந்த பொருளாக விளங்குகிறது.

வைட்டமின்-ஈ மாத்திரையை உடைத்து அதிலிருந்து வெளிவரும் எண்ணையை கிராம்பு எண்ணையுடன் ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமையை விலகி நம் முகம் பொலிவுடன் மற்றும் அழகாக இருக்க உதவும்.

மேலும் படிக்க – சருமத்தை பொலிவுறச் செய்யும் குங்குமாதி தைலம்!

இதேபோல் நம் உடலில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இந்த மாத்திரையை உடைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். நம் முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்களை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக இந்த மாத்திரையை உடைத்து சிறிதளவு தண்ணீரில் கலந்து நம் முகத்தை துடைத்து வந்தால் நம் முகம் பளீரென்று எந்த ஒரு வறட்சியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் உங்கள் முகத்தில் ஏதாவது முகப்பரு அல்லது தழும்புகள் கீறல்கள் இருந்தால் அதன் மேல் இந்த மாத்திரையின் எண்ணெயை தடவினால் சில மாதங்களிலேயே அந்த காயங்கள் மறைந்து விடும்.

இதுபோல வைட்டமின்-ஈ மாத்திரையை நம் முகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் தலை, கை, கால்கள், நகங்கள் போன்ற அனைத்துப் பகுதிகளுக்கும் இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் இதனுடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை கலந்து பயன்படுத்தலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன