பழங்கால கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அதன் பயன்கள்..!

  • by
benefits of using vessels made of stones

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் கற்களினால் செய்யப்பட்டது. இன்றும் ஆதிவாசிகள் மற்றும் வளர்ச்சி அடையாத கிராமங்களில் இது போன்ற பாத்திரங்களை தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இயற்கையை ஒட்டி தயாரிக்கப்படும் இது போன்ற பாத்திரங்கள் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

அக்காலத் தமிழர்கள்

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன் என்று பலருக்கும் தெரியும், ஆனால் அதற்குப் போதுமான சான்று இன்றுவரை நமக்கான அடையாளங்கள் பெரிதாக கிடைக்காமல் தவித்து வருகிறோம். கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அற்புதமான நகர வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்பது பாதி நிரூபணமாகியுள்ளது. இது முழுமையடைந்தால் உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்தான் என்று எல்லோருக்கும் தெரிய வரும்.

மேலும் படிக்க – சரியான மனநிலை உங்களை உறுதியாக்கும்..!

சிற்பக் கலைகள்

தமிழர்கள் அக்காலத்தில் கற்களினால் பலவிதமான சிற்பங்களை செய்துவந்தார்கள். இதைத் தவிர்த்து அவர்கள் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், வீட்டு சாதன பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்தையும் இவர்கள் கற்களினால் செய்தார்கள். இதுபோன்ற கற்களைக் கொண்டு செதுக்கப்படும் உருவங்களை இன்றும் நம் பல இடங்களில் பார்க்கலாம். தமிழர்கள் சிற்பத்தை செதுக்குவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். அதிலும் தங்கள் மூளையை முழுமையாக பயன்படுத்தி ஒரே அளவு, சரியான எடை என எல்லாவற்றையும் சரியாக கணக்கிட்டு உருவாக்கினார்கள்.

கற்கள் வீட்டு பொருட்கள்

அக்காலத் தமிழர்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அனைத்தையும் கற்களினால் செய்தார்கள். அதை தவிர்த்து அந்த கற்களின் அடியில் தீயிட்டு தங்களுக்கு பிடித்த உணவை சமைத்து வந்தார்கள். இதன் மூலமாக அவர்களின் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி மிக ஆரோக்கியமாக உணவு அவர்களுக்கு கிடைத்தது. கற்களினால் செய்யப்படும் உணவுகள் பலமணிநேரம் சூடு குறையாமல் இருக்கும், இதனால் குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் இவர்கள் ஒரு முறை தீயிட்டு உணவுகளைச் சமைத்தால் போதும்.

அதிகமான ஆயுட்காலம்

அக்காலத்தில் பயன்படுத்தி வந்த பாத்திரங்கள் இன்றும் அழியாமல் அப்படியே இருக்கின்றன. எனவே கற்களினால் உருவாக்கப்படும் பொருட்களுக்கு அழிவில்லை. இன்றும் பல நாடுகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்தி வந்த கற்கள் பாத்திரங்களை அவரவர்களின் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள். அதில் தமிழர்கள் பயன்படுத்தி வந்த பாத்திரங்கள், ஆயுதங்கள், சிற்பங்கள் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

மேலும் படிக்க – தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் ஏலக்காய் கசாயம்..!

இக்காலத்தில் சமைக்கப்படும் உணவுகளில் இருக்கும் சக்திகள் நமக்கு பாதி தான் கிடைக்கின்றன. நாம் மண்பானைகள் அல்லது கற்களினால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் மூலமாக சமைக்கும்போது தான் அதன் முழு சக்தியும் நமக்கு கிடைக்கும். எனவே நம்முடைய கலாச்சாரம் அழியாமல் இருப்பதற்கு ஒன்றிரண்டு கற்களினால் ஆன பாத்திரங்களை வாங்கி எப்போதாவது ஒருமுறை சமைத்து சாப்பிடலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன