உப்பை பயன்படுத்துவதானால் கிடைக்கும் நன்மை..!

  • by
benefits of using salt

இயற்கை அளித்த வரப்பிரசாதம் உப்பு என்றாலும், அதைக் கண்டுபிடித்து உணவுகளில் சேர்ப்பதற்கான அறிவுரையை அளித்த நம் முன்னோர்களை பாராட்டியே ஆக வேண்டும். கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பில் அயோடின் கலந்து நம்மை வந்து சேருகிறது. இதை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலமாக உணவின் சுவை அதிகரிக்கிறது. அதைத் தவிர்த்து உப்பு மனிதர்களுக்கு ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது,  உணவுகளை கெடாமல் பாதுகாக்கவும் உப்பு உதவுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த உப்பில் இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகள் ஏற்படுகிறது. இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சக்தி உப்புக்கு உண்டு. 30 முதல் 40 வயது வரை இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனை அதிகமாக உண்டாகிறது. எனவே இந்த வயதில் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி சரியான அளவு உப்பை பயன்படுத்தி அதை கட்டுப் படுத்தலாம். அதேபோல் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு சேர்க்கப்பட்ட பானங்களை அறுந்து ரத்த அழுத்தத்தை  சமமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – சங்கடஹர சதுர்த்தியின் விரதம்..!

நீரிழிவு நோய்

நம் உணவில் எப்போதும் தேவைக்கேற்ப உப்பு இருக்க வேண்டும். அப்படி குறைந்த அளவு உப்பை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டாம் நிலை நீரிழிவு நோய் உண்டாவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே இவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி சரியான அளவு பயன்படுத்த வேண்டும். இதை செய்வதன் மூலமாக உங்கள் உடலில் தேவைக்கேற்ப இன்சுலின் உற்பத்தியாகி உங்கள் நீரிழிவு பிரச்சனையை தடுக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்ற பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் வரை ஆரோக்கியமாக உணவுகளை உண்டு தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் எப்போதும் தங்கள் உணவில் சரியான உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம். அதைத் தவிர்த்து வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதன் செயலை சிறப்பாக்கவுன் உப்பு உதவுகிறது.

மேலும் படிக்க – சூரியனுடன் அமைந்திருக்கும் கிரகத்தால் ஏற்படக்கூடிய பலன்கள்..!

தைராய்டு சுரப்பி

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு உதவுன் மிக முக்கியமான சுரப்பி தான் இந்த தைராய்டு சுரப்பி. இது சீராக இருக்கும்போது மனிதர்களின் இதயத்துடிப்பு, தசைகளின் இயக்கம் மற்றும் செரிமானத்தை சீராக்க உதவும். எனவே இந்த தைராய்டு சுரப்பி சீராக இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் தைராய்டு சுரப்பி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதை தவிர்த்து உங்கள் உடலில் நீர் சக்தி எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் சூரிய ஒளியினால் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். எனவே இத்தகைய ஆரோக்கிய பயனைத் தரும் உப்பை எப்போதும் உணவில் சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன