பச்சை கற்பூரத்தின் பரிபூரண குணங்கள் பார்போம் வாங்க.!

benefits of using pachai karpoorm

நாம் பூஜைகளுக்கு பயன்படுத்திவரும் கற்பூரத்தில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. சாதாரணமாக பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இது அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் குணங்களும் உள்ளது. அதிலும் கற்பூரத்தின் சக்தி மற்றும் பொறுப்பு அதிகம், இதன் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பயன்கள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

பண வரவை அதிகரிக்கும்

கற்பூரத்தின் மூலமாக தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒரு சிறிய காகிதத்தில் கற்பூரத்தை மறித்து உங்கள் பணப்பையில் வைத்துக்கொள்வது நல்லது, இது உங்கள் பண வரவை அதிகரிக்கும்.

பச்சை கற்பூரதிற்க்கு செல்வத்தை ஈர்க்கும் சக்திகள் அதிகமாக உள்ளது. எனவே இதை நாம் பூஜை அறைகளில் வைத்து வழிபடுவதன் மூலம் உங்களுக்கான நேர்மறை சக்திகள் அதிகரித்து பண வரவு மற்றும் செல்வங்களை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – இந்தக் கடவுளை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்..!

திருப்பதியில் நடக்கும் அதிசயம்

கற்பூரத்தை நாம் பாறைகள் மேல் தடவினால் சில நாட்களிலேயே அந்த பாறைகள் மேல் விரிசல்கள் ஏற்படும் ஆனால் திருப்பதியில் இருக்கும் சிவபெருமானின் உருவத்தின் மேல் எப்போதும் கற்பூரத்தை தடவி வைத்துள்ளார்கள், ஆனால் பாறைகளால் செய்யப்பட்ட அந்த சிவபெருமானின் உருவத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்படுவதில்லை இதற்கு கற்பூரத்தின் சிறப்பு தன்மையே காரணம். இதனால் பச்சை கற்பூரத்தை பூசி வழிபாடு செய்வதற்காக பெருமானின் ஆலயத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

லக்ஷ்மி மற்றும் மனநிறைவுக்கு கற்பூரம்

பச்சைக் கற்பூரத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டில் உள்ள குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாள் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

பச்சை கற்பூரம் வாசனையை அதிகமாக தருவதினால் இதைக் கொண்டு வீட்டில் பூஜை செய்வதன் மூலம், வீடு முழுவதும் வாசனை பறவி துர்சக்திகள் அனைத்தையும் போக்கி நேர்மரை சிந்தனையை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – வலம்புரி சங்கு வழிபாட்டால் வாழ்வு வளம் பெறும்

அதைப்போல் குடும்பத்திள் இருக்கும் சச்சரவுகள் விலகி நிம்மதியான சூழலை உண்டாக்கும். உங்களுக்கு ஏற்படும் வீண் செலவுகள் அனைத்தும் குறைந்து பணவரவு அதிகரிக்கும்.

தொழில் பெருகுவதற்கு கற்பூரம்

பணப் பெட்டிகள் இருக்கும் அறையில் கற்பூரத்தை வைப்பதன் மூலம் அதை சுற்றி பரவும் எதிர்மறை சக்திகளை தடித்து நேர் மறை சக்திகளை உள்ளே இழுக்கும். அதே போல் உங்கள் கடைகளில் இருக்கும் பணப் பெட்டியில் ஏலக்காய், சோம்பு, பச்சை கற்பூரத்தை சேர்த்து பச்சை துணியில் கட்டி ஒரு ஓரத்தில் வைப்பதன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – இறை அருள் தரும் மலர்கள் இறைக்கு சூடும் முறை

எனவே எல்லா சுபகாரியங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின்போது பச்சை கற்பூரத்தை மறவாமல் பயன்படுத்த வேண்டும். இதில் உங்களை மற்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் மன நிலையை நன்றாக வைத்துக்கொள்ளும். அதேபோல் குடும்ப பிரச்சினைகள் என அனைத்தையும் தீர்த்து உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தி செல்லும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன