திராட்சை விதையில் எடுக்கப்படும் எண்ணெயில் சிறப்பு..!

  • by
benefits of using oil extracted from grape seeds

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் அழகை அதிகரிக்க உதவுவது அவர்களின் கூந்தல் தான். இதை இவர்கள் பாதுகாப்பாக வைப்பதற்காக ஏராளமான எண்ணெய்கள் மற்றும் ஷாம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களின் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் சரும ஆரோக்கியம் என இரண்டிற்கும் ஒரே எண்ணெயாக இருப்பது இந்த திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் கிரேப் எண்ணெய்தான்.

திராட்சை எண்ணெய்

நாம் பயன்படுத்தும் எல்லா பழங்களிலும் அதன் விதை நிச்சயம் இருக்கும், ஆனால் நாம் அந்த பழங்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்காக அந்த விதைகளை மறுசுழற்சி செய்கிறோம். திராட்சை கொண்டு மதுபான உற்பத்தியையும் செய்து வருகிறார்கள். எனவே இவர்கள் இதில் இருக்கும் விதைகளை தூக்கி எறியாமல் அதை எண்ணெய்யாக மாற்றும் முயற்சியை செய்துள்ளார்கள். இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த திராட்சை எண்ணெய்கள் பார்க்கப்படுகிறது. இதில் நாம் எதிர்பார்ப்பதைவிட ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது.

மேலும் படிக்க – திருநீற்றுப்பச்சிலை நமக்கு இவ்வளவு நன்மைகளை தருகிறதா..!

சரும ஆரோக்கியம்

திராட்சை எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தேய்ப்பதன் மூலமாக உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தை இறுக்கி அதில் இருக்கும் சுருக்கம் போன்ற அனைத்தையும் போக்கும் தன்மை இந்த திராட்சை எண்ணெய்க்கு உண்டு. உங்கள் சருமத்தில் ஏதேனும் காயங்கள் இருந்தால், அந்த தடயத்தை முழுமையாக போக்கும் தன்மை இதற்கு உண்டு. இதை தவிர்த்து சூரிய ஒளியினால் ஏற்படும் பிரச்சனைகளை இந்த எண்ணெய்களைகொண்டு குணப்படுத்தலாம்.

கூந்தல் ஆரோக்கியம்

திராட்சை எண்ணெய்யை கொண்டு உங்கள் தலையில் மசாஜ் செய்வதன் மூலமாக உங்களுக்கு மன அமைதி மற்றும் உங்கள் கூந்தலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. உங்கள் கூந்தலை உறுதியாகவும், நீளமாகவும் மற்றும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள இந்த திராட்சை எண்ணெய் பயன்படுகிறது. அதே போல் உங்கள் கூந்தலில் உள்ள இயற்கையான நிறத்தை பாதிக்காமல் இந்த எண்ணெய் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – இபோலா மற்றும் கொரோனா வைரஸிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..!

மேலும் பல நன்மைகள்

திராட்சை எண்ணெய்யை கொண்டு உங்கள் உடலில் மசாஜ் செய்வதனால் உங்கள் ரத்த ஓட்டம் சீராகும். இதைத் தவிர்த்து இதில் இருக்கும் தன்மை உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உங்கள் சருமம், வறட்சி அடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் வைப்பதற்கு திராட்சை எண்ணெய் உதவுகிறது. அதே போல் உங்கள் சருமத்தில் ஏற்பட்ட காயத்தின் தன்மையைக் குறைக்க இது பயன்படுகிறது.

இதைத் தயாரிக்கும் பொழுது உருவாகும் ஏராளமான அமிலங்களினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன, எனவே இந்த எண்ணெயை சரியாக பயன்படுத்தி உங்கள் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனையை தீர்த்துடுங்கள். சந்தைகளில் இந்த எண்ணெயின் விலை சற்று அதிகமாக உள்ளது, எனவே இதை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். எனவே இனிமேல் நாம் திராட்சை விதைகளை தூக்கி எரிவதை தவிர்க்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன