மலர்கள் மற்றும் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள்..!

  • by
benefits of using oil extracted from flowers and fruits

நம்மையறியாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தி வரும் இயற்கை எண்ணெயில் இருக்கும் நன்மைகள் மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் பயன்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம். நாம் தினமும் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், உணவுகள் அனைத்திலும் இயற்கையின் பங்கு நிச்சயமாக இருக்கும்.

லாவண்டம் எண்ணெய்கள்

நறுமணம் என்றாலே இந்த லாவண்டம் தான், இதை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணெய் எல்லோரையும் கவரும் மணத்தைக் கொண்டது. இது உங்கள் மனதை அமைதியாகவும், லேசாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதைக் கொண்டு நாம் ஆயில் மசாஜ் செய்யலாம் மற்றும் ஷாம்பு, சோப்புகளில் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – கொரானா குணப்படுத்த கூடிய தொற்றுதான்!

பிராக்சன்ஸ் எண்ணெய்

ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு அற்புத மரத்துல் இருந்து எடுப்பதே இந்த பிராக்சன்ஸ், இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான், பிராக்சன்ஸ் எண்ணெய். நீங்கள் யோகா செய்வதனால் கிடைக்கும் மன அமைதி இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்வதனால் கிடைக்கிறது. இந்த எண்ணெயையும் பல விதமான நறுமண பொருட்களில் பயன்படுத்துகிறார்கள்.

மிளகுக்கீரை எண்ணெய்

மிளகுக்கீரை எண்ணெயை நாம் தினமும் பயன் படுத்துகிறோம். நம்முடைய சுவாசத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் இந்த மிளகுக்கீரை எண்ணெய் இருக்கும். இதைத் தவிர்த்து இதில் சோப்பு, ஷாம்புகள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இதை சேர்ப்பதனால் நம் வாழ்வில் எப்போதும் உதவியாக இருக்கிறது.

யூக்கலிப்டஸ் எண்ணெய்

தைல எண்ணெய் என்று அழைக்கப்படும் யூகலிப்டஸ் எண்ணெய் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை அளிக்கக் கூடியது. நம் உடலில் வலிகள் இருக்கும் இடங்களில் இதைப் தடவுவதன் மூலம் நமக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. இதனால் இதைக்கொண்டு மசாஜ் செய்து நல்ல பலன் பெறலாம்.

மேலும் படிக்க – மூலிகை செடிகள் வளர்ப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

சிட்ரிக் எண்ணெய்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு லிருந்து கிடைக்கப்படும் சக்திதான் சிட்ரிக் அமிலம். இதைக்கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் நம்முடைய பல விதமான உடல் பிரச்சினையை தீர்க்கிறது. பிறகு நம் சரும பாதிப்புகள், கூந்தல் பாதிப்புகள் போன்ற அனைத்தையும் போக்கி  உங்களின் முழு தேவையாக இந்த சிட்ரிக் எண்ணெய் இருக்கிறது.

இதைத்தவிர்த்து டீ-ட்ரீ ஆயில், ரோஸ்மேரி, மற்றும் புற்கள் மற்றும் பல பழங்களில் எடுக்கப்படும் எண்ணெய்கள் உங்கள் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. எனவே இயற்கை எண்ணெயின் சக்தியை அறிந்து அதை சரியாக பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன