இயற்கை எண்ணெய்யினால் நம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்.!

  • by
benefits of using natural oil on skin

நம்முடைய சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக நாம் ஏராளமான வழிகளை பின் தொடர்கிறோம். ஆனால் அதில் பெரும்பாலான வழிகள் கெமிக்கல் மற்றும் சருமத்தை பாதிக்கக் கூடிய பொருட்களை கொண்டு இருக்கின்றன. இதனால் நம் சருமம் மேலும் பாதிப்படையுமே தவிர அதன் ஆரோக்கியம் அதிகரிக்காது. எனவே இயற்கையாக தயாரிக்கப்படும் எண்ணெய்களை கொண்டு நமது சருமத்தை பாதுகாக்க முடியும்.

இயற்கை எண்ணெய்களில் நன்மைகள்

இயற்கை எண்ணெய்யை நம் சருமத்தின் சிறிதளவு தேய்த்தால் போதும். அது நமது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும். அதை தவிர்த்து நமது சருமம் வறட்சியடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இதை தவிர்த்து இது போன்ற எண்ணெய்களை நம் சருமத்தில் தேய்க்கும் பொழுது அதன் வாசனைகள் நமக்கு மன நிம்மதியை அளிக்கும்.

மேலும் படிக்க – வீட்டிலேயே மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது எப்படி?

விளக்கெண்ணை

விளக்கெண்ணையை சிறிதளவு நமது சருமத்தில் தேய்த்தால் போதும். அது உடனே சருமத்தில் ஊடுருவி நமக்கு ஈரப்பதத்தை அதிகரிக்கும். அதேபோல் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை வைப்பதன் மூலமாக உடல் சூடு குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை தினமும் நம் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய சக்தி வாய்ந்த தேங்காய் எண்ணெயை நம் சருமத்தில் தேய்பதன் மூலம் நமது சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

மேலும் படிக்க – உதடுகள் பொலிவுடன் இருக்க இதனைப் பின்பற்றவும்

வேப்ப எண்ணெய்

பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளை கொண்ட வேப்ப எண்ணெய்யை நம் சருமத்தில் பயன்படுத்தும் போது நமது தோள்களில் ஏற்பட்டிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். அதை தவிர்த்து சொரியாஸிஸ், எக்ஸீமா, அரிப்பு போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யை தயாரிப்பதற்காக நாம் பாதாம் கொட்டைகளை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். பிறகு அதை அரைப்பதன் மூலமாக எண்ணெய்கள் வெளிவரும். இதை நம் சருமத்தில் தேய்க்கும்போது, சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். இது நம் சருமத்தை பளபளப்பாக மாற்றி தோல் அரிப்பு மற்றும் வரட்சிகளை போக்கும்.

மேலும் படிக்க – கண்களில் லென்ஸ் அணிபவர்கள் மேக்கப் செய்வது எப்படி?

ஆர்கன் எண்ணெய்

நமது சருமத்தை பராமரிக்கும் பண்புகள் ஆர்கன் எண்ணெய்களுக்கு அதிகமாக உள்ளது. எனவே இது நம் சருமத்தில் தேய்ப்பதன் மூலமாக முக சுருக்கங்கள், சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் வெடிப்புகள் அனைத்தும் நீங்கும்.

இதைத் தவிர்த்து உங்கள் சருமத்தின் அழகை அதிகரிக்கும் எண்ணெய்யாக கருதப்படுவது ஜோஜோபா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் மற்றும் கேரட் வேர் எண்ணெய்கள். இவைகளை உங்கள் சருமத்தில் பயன்படுத்தும் போது சருமம் அழகாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன